AUG 01 MORNING

ரூத் 2:2

மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.

ரூத் 2:2

மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

துக்கப்பட்டு கலங்குகிற கிறிஸ்தவனே, இன்று வாக்குத்தத்தம் என்னும் பரந்த வயல்வெளியில் வந்து கதிர்களைப் பொறுக்கு. உன்னுடைய தேவைகளைத் துல்லியமாகச் சந்திக்கும் விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்கள் அங்கே ஏராளமாய் இருக்கின்றன. இதைப் பெற்றுக் கொள்: "நெரிந்த நாணலை முறிக்காமலும், புகைகிற திரியை அணைக்காமலும் இருப்பார்" (). இது உன்னுடைய சூழ்நிலைக்கு ஏற்றதாய் இல்லையா? பலமற்ற, அற்பமான, பலவீனமான ஒரு நாணல், இசையை எழுப்ப முடியாத ஒரு நெரிந்த நாணல்; பலவீனத்தைக் காட்டிலும் பலமற்றது; ஒரு நாணல், அதுவும் நெரிந்த நாணல், என்றாலும் அவர் உன்னை முறிக்க மாட்டார்; மாறாக, உன்னை மீண்டும் நிலைநிறுத்திப் பலப்படுத்துவார். நீ புகைகிற திரியைப் போல இருக்கிறாய்: உன்னிடமிருந்து வெளிச்சமோ உஷ்ணமோ வர முடியாது; என்றாலும் அவர் உன்னை அணைக்க மாட்டார்; உன்னை ஒரு ஜுவாலையாக விசிறிவிடும் வரை தன் கிருபையின் இனிமையான சுவாசத்தினால் உன்மேல் ஊதுவார். மற்றொரு கதிரைப் பொறுக்க விரும்புகிறாயா? "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (). எப்பேர்ப்பட்ட மிருதுவான வார்த்தைகள்! உன்னுடைய இருதயம் மென்மையானது என்பதை எஜமானர் அறிவார், ஆகவேதான் உன்னிடம் அவ்வளவு கனிவாகப் பேசுகிறார். நீ அவருக்குக் கீழ்ப்படிந்து இப்போதே அவரிடம் வரமாட்டாயா? மற்றொரு கதிரை எடுத்துக்கொள்: "புழுவாகிய யாக்கோபே, பயப்படாதே, நான் உனக்குத் துணைசெய்கிறேன் என்று கர்த்தரும், இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பரும் சொல்லுகிறார்" (). இத்தகைய ஆச்சரியமான நிச்சயத்தோடு உன்னால் எப்படிப் பயப்பட முடியும்? இவைகளைப் போலப் பத்தாயிரம் பொன்னான கதிர்களை உன்னால் சேகரிக்க முடியும்! "உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்" (). அல்லது இது, "உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்" (). அல்லது இது, "ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்" (வெளிப்படுத்துதல் 22:17). நம்முடைய எஜமானரின் வயல் மிகவும் ஐசுவரியமானது; இதோ கைப்பிடிகளாகக் கிடக்கின்றன. பயமுள்ள ஏழை விசுவாசியே, இதோ அவைகள் உனக்கு முன்பாகக் கிடக்கின்றன பார்! அவைகளைச் சேகரித்து உன்னுடையதாக்கிக் கொள், ஏனெனில் இயேசு அவைகளை எடுத்துக்கொள்ள உனக்குக் கட்டளையிடுகிறார். பயப்படாதே, விசுவாசம் மாத்திரம் உள்ளவனாயிரு! இந்த இனிமையான வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொள், தியானத்தினாலே அவைகளைப் போஷித்து, சந்தோஷத்தோடு அவைகளைப் புசி.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.