AUG 01 EVENING

சங்கீதம் 65:11

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.

சங்கீதம் 65:11

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்" (). வருஷம் முழுவதும், ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு மணிநேரமும் தேவன் நம்மை ஐசுவரியமாய் ஆசீர்வதிக்கிறார்; நாம் தூங்கும்போதும் விழித்திருக்கும்போதும் அவருடைய இரக்கம் நமக்காகக் காத்திருக்கிறது. சூரியன் நமக்கு அந்தகாரத்தை விட்டுச் செல்லலாம், ஆனால் நம்முடைய தேவனோ தன் பிள்ளைகளின் மேல் அன்பின் கதிர்களால் பிரகாசிப்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை. ஒரு நதியைப் போல, அவருடைய காருணியம் அவருடைய சொந்த சுபாவத்தைப் போல வற்றாத நிறைவோடு எப்போதுமே பாய்ந்து கொண்டிருக்கிறது. பூமியை எப்போதுமே சூழ்ந்திருந்து, மனிதனின் ஜீவனைத் தாங்க எப்போதுமே ஆயத்தமாய் இருக்கும் ஆகாய மண்டலத்தைப் போல, தேவனுடைய தாராள குணம் அவருடைய சகல சிருஷ்டிகளையும் சூழ்ந்திருக்கிறது; அதில், தங்களின் சுபாவத்திலிருப்பது போல, அவைகள் பிழைக்கின்றன, அசைகின்றன, இருக்கின்றன (). என்றாலும், கோடைகாலத்துச் சூரியன் மற்ற காலங்களைக் காட்டிலும் அதிக உஷ்ணமும் பிரகாசமும் உள்ள கதிர்களால் நம்மை மகிழ்விப்பது போலவும், குறிப்பிட்ட காலங்களில் நதிகள் மழையினால் பொங்கி வழிவது போலவும், ஆகாய மண்டலமே முந்தின காலங்களைக் காட்டிலும் அதிகப் புத்துணர்ச்சியும், பலமும், சுகந்தமுமுள்ள ஏவுதல்களால் நிறைவது போலவும், தேவனுடைய இரக்கமும் அப்படித்தான் இருக்கிறது; அதற்குரிய பொன்னான மணிநேரங்களும், மனுபுத்திரருக்கு முன்பாகக் கர்த்தர் தமது கிருபையைப் பெரிதாக்கும் நிறைந்து வழியும் நாட்களும் உண்டு. கீழேயுள்ள ஊற்றுகளின் ஆசீர்வாதங்கள் மத்தியில், அறுவடையின் மகிழ்ச்சியான நாட்கள் விசேஷித்த கிருபையின் காலமாய் இருக்கின்றன. பராமரிப்பின் முதிர்ந்த ஈவுகள் தாராளமாய் அருளப்படுவதே சரத்காலத்தின் மகிமையாய் இருக்கிறது; அதற்கு முன் இருந்ததெல்லாம் வெறும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாய் இருக்க, அதுவே அநுபவ பூர்வமான முதிர்ச்சியின் காலமாய் இருக்கிறது. அறுவடையின் சந்தோஷம் மகா பெரியது. பரலோகத்தின் தாராள குணத்தினால் தங்களின் கரங்களை நிரப்பும் அறுவடைக்காரர்கள் பாக்கியவான்கள். அறுவடையே வருஷத்தின் கிரீடம் என்று சங்கீதக்காரன் நமக்குக் கூறுகிறான். நிச்சயமாகவே இந்த முடிசூட்டும் இரக்கங்கள் முடிசூட்டும் நன்றியறிதலைக் கேட்கின்றன! உள்ளான நன்றியுணர்வின் ஏவுதல்களினாலே நாம் அதைச் செலுத்துவோமாக. நம்முடைய இருதயங்கள் உஷ்ணமடையட்டும்; நம்முடைய ஆவிகள் கர்த்தருடைய இந்த நன்மையை நினைவுகூர்ந்து, தியானித்து, சிந்திக்கட்டும். பின்பு நம்முடைய உதடுகளினால் அவரைத் துதித்து, இத்தகைய சகல நன்மைகளும் பாய்ந்தோடி வரும் அவருடைய நாமத்தைப் போற்றி மகிமைப்படுத்துவோமாக. நம்முடைய ஈவுகளை அவருடைய காரியத்திற்கு அர்ப்பணிப்பதன் மூலம் தேவனை மகிமைப்படுத்துவோம். நம்முடைய நன்றியறிதலின் நடைமுறைச் சான்று அறுவடையின் கர்த்தருக்குச் செலுத்தும் விசேஷித்த ஸ்தோத்திரக் காணிக்கையே ஆகும்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.