JUL 01 EVENING

ஆதியாகமம் 3:8

பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

ஆதியாகமம் 3:8

பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"பகலின் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்திலே உலாவுகிற கர்த்தராகிய தேவனுடைய சத்தம்" (). என் ஆத்துமாவே, நாளின் குளிர்ச்சியான இந்த வேளை வந்திருக்கிறபடியால், சற்றுத் தனித்துச் சென்று உன்னுடைய தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடு. நீ கேட்க ஆயத்தமாய் இருக்கும்போதெல்லாம் அவர் உன்னோடு பேச ஆயத்தமாய் இருக்கிறார். ஐக்கியம் கொள்வதில் ஏதாகிலும் ஒரு மந்தத்தனம் இருந்தால் அது அவர் பக்கத்தில் இல்லை, முற்றிலும் உன்னுடைய பக்கத்திலேயே இருக்கிறது, ஏனெனில் அவர் வாசலில் நின்று தட்டுகிறார், அவருடைய ஜனங்கள் திறந்தால் உள்ளே பிரவேசிக்க அவர் மகிழ்கிறார் (வெளிப்படுத்துதல் 3:20). ஆனால் என் கர்த்தரின் சிங்காரவனமாகிய என்னுடைய இருதயம் எப்பேர்ப்பட்ட நிலையில் இருக்கிறது? அது நன்றாய்ச் செதுக்கப்பட்டு, நனைக்கப்பட்டு, அவருக்கு ஏற்ற கனிகளைத் தருகிறது என்று நான் நம்பத் துணியலாமா? அப்படி இல்லையென்றால், அவர் கடிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாய் இருக்கும், என்றாலும் அவர் என்னிடம் வரும்படி நான் உருக்கமாய் கெஞ்சுகிறேன், ஏனெனில் தன் சிறகுகளில் ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கிற நீதியின் சூரியனுடைய பிரசன்னத்தைப் போல (), என் இருதயத்தைச் சரியான நிலைக்குக் கொண்டுவரக் கூடியது வேறு எதுவும் இல்லை. எனவே வாரும், என் தேவனாகிய கர்த்தாவே, என் ஆத்துமா உம்மை உருக்கமாய் அழைக்கிறது, உமக்காக ஆவலோடு காத்திருக்கிறது. எனக்கேற்ற மணவாளனாகிய இயேசுவே, என்னிடம் வாரும், உமது ஒப்பிடமுடியாத குணத்தில் பூரணமாய் மலர்ந்திருக்கக் காணும் புதிய புஷ்பங்களை என் சிங்காரவனத்தில் நாட்டியருளும்! தோட்டக்காரனாகிய என் பிதாவே, வாரும், உமது கனிவோடும் ஞானத்தோடும் என்னைக் கையாளும்கூட! இன்று மாலைப் பனியினாலே பூண்டுகள் நனைக்கப்படுவது போல, தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரே, வாரும், என் முழுச் சுபாவத்தையும் நனைத்தருளும்! ஓ தேவன் என்னோடு பேசுவாராக. ஆண்டவரே, பேசும், உம்முடைய அடியான் கேட்கிறேன்! (). அவர் என்னோடு உலாவக் கடவர்; என் முழு இருதயத்தையும் மனதையும் அவருக்கு ஒப்புக்கொடுக்க நான் ஆயத்தமாய் இருக்கிறேன், மற்ற எல்லா எண்ணங்களும் அமைதியாயின. அவர் கொடுக்க மகிழ்ச்சியாயிருப்பதையே நான் கேட்கிறேன். அவர் என்னோடு ஐக்கியம் கொள்ளத் தாழ்த்துவார் என்று நான் உறுதியாய் நம்புகிறேன், ஏனெனில் என்றென்றைக்குமாய் என்னோடு வாசம் பண்ணத் தன் பரிசுத்த ஆவியை அவர் எனக்குத் தந்திருக்கிறார் (). ஒவ்வொரு நட்சத்திரமும் பரலோகத்தின் கண்ணைப் போலத் தோன்றும், குளிர்ச்சியான காற்று பரலோக அன்பின் சுவாசத்தைப் போல வீசும் இந்த அமைதியான அந்திப்பொழுது இனிமையானது. என் பிதாவே, என் மூத்த சகோதரரே, என் இனிய தேற்றரவாளரே, உமது உருக்கமான இரக்கத்தினாலே இப்போதே பேசும், நீர் என் செவிகளைத் திறந்தீர், நான் கலகம் செய்யவில்லை ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.