JUN 01 MORNING

ஆதியாகமம் 1:5

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:5

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று" (). ஆதியிலேகூட காரியம் அப்படித்தான் இருந்ததா? வெளிச்சமும் அந்தகாரமும் முதலாம் நாளிலேயே காலத்தின் எல்லையைப் பிரித்தனவா? அப்படியானால், ஐசுவரியமாகிய சூரிய வெளிச்சத்திலிருந்து உபத்திரவமாகிய நள்ளிரவு வரை என் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. என் ஆத்துமாவின் காரியங்களிலும் எப்போதும் நண்பகலின் பிரகாசம் மாத்திரம் இருக்காது; சில காலங்களில் என் முந்தின சந்தோஷங்கள் இல்லாததைக் குறித்து நான் துக்கப்படவும், இரவிலே என் பிரியமானவரைத் தேடவும் வேண்டும். இந்த விஷயத்தில் நான் மாத்திரம் தனியாய் இல்லை, ஏனெனில் கர்த்தருக்குப் பிரியமானவர்கள் யாவரும் நியாயத்தீர்ப்பும் இரக்கமும், சோதனையும் விடுதலையும், துக்கமும் பூரிப்பும் கலந்த கீதத்தையே பாட வேண்டியிருந்தது. நாம் "அங்கே இராக்காலமில்லை" (வெளிப்படுத்துதல் 21:25) என்று எழுதியிருக்கிற தேசத்தை அடையும் வரை, ஆவிக்குரிய சிருஷ்டியிலும் சரி, சுபாவமான சிருஷ்டியிலும் சரி, இரவும் பகலும் ஒழிந்துபோவதில்லை என்பது தெய்வீகப் பராமரிப்பின் நியமங்களில் ஒன்றாகும். நம்முடைய பரமபிதா கட்டளையிடுவது ஞானமும் நன்மையுமானது.

அப்படியானால், என் ஆத்துமாவே, நீ செய்ய வேண்டிய மிகச் சிறந்த காரியம் என்ன? முதலாவதாக, இந்தத் தெய்வீக ஒழுங்கில் திருப்தியாய் இருக்கக் கற்றுக்கொள், யோபுவைப் போல தேவனுடைய கரத்தில் நன்மையைப் பெற்றது போலத் தீமையையும் பெற மனதாயிரு (). அடுத்ததாக, விடியற்காலமும் சாயங்காலமும் சந்தோஷமடையும்படி செய்யப் பிரயாசப்படு. சந்தோஷமாகிய சூரியன் உதிக்கும் போது கர்த்தரைத் துதி, சாயங்காலத்தின் அந்தகாரம் சூழும் போதும் அவரைத் துதி. சூரிய உதயத்திலும் சூரிய அஸ்தமனத்திலும் ஒரு அழகு இருக்கிறது; அதைக் குறித்துப் பாடி, கர்த்தரை மகிமைப்படுத்து. நைட்டிங்கேல் பறவையைப் போல எல்லா மணிநேரங்களிலும் உன்னுடைய துதிகளை ஊற்றிவிடு. பகலைப் போலவே இரவும் பிரயோஜனமானது என்று விசுவாசி. கிருபையின் பனித்துளிகள் துக்கத்தின் இரவிலே பாரமாய் இறங்குகின்றன. வாக்குத்தத்தத்தின் நட்சத்திரங்கள் துயரத்தின் அந்தகாரத்தின் மத்தியில் மகிமையாய்ப் பிரகாசிக்கின்றன. எல்லா மாற்றங்களின் மத்தியிலும் உன்னுடைய ஊழியத்தைத் தொடரு. பகலில் உன்னுடைய குறிக்கோள் பிரயாசமாய் இருந்தால், இரவில் அதைக் காவலுக்கு என்று மாற்றிக் கொள். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் அதற்குரிய கடமை உண்டு, கர்த்தர் திடீரென்று தமது மகிமையில் வெளிப்படும் வரை அவருடைய ஊழியக்காரனாக உன்னுடைய அழைப்பில் நிலைத்திரு. என் ஆத்துமாவே, முதிர்வயதும் மரணமுமாகிய உன்னுடைய சாயங்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது; அதற்குக் கலங்காதே, ஏனெனில் அதுவும் நாளின் ஒரு பகுதிதான்; "அவர் அவனை எந்நாளும் மூடிக்காப்பார்" () என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.