JUN 01 EVENING

ஏசாயா 51:3

கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

ஏசாயா 51:3

கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவளுடைய வனாந்தரத்தை ஏதேனைப்போலவும்... ஆக்குவார்" (). சகாரா போன்ற ஒரு மகா பயங்கரமான வனாந்தரத்தை, ஊளையிடும் வனாந்தரத்தை நான் தரிசனத்தில் காண்பது போல உணருகிறேன். கண்ணிற்கு ஆறுதல் தரும் ஒரு காரியமும் அதில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, சுற்றிலும் உஷ்ணமான, வறண்ட மணல் பரப்பையும், இரக்கமில்லாத அந்தப் பாழடைந்த பூமியில் வழிதவறி வேதனையோடு மடிந்துபோன பாக்கியற்ற மனிதர்களின் வெளுத்துப்போன பத்தாயிரம் எலும்புக்கூடுகளையும் கண்டு என் மனம் சோர்வடைகிறது. எப்பேர்ப்பட்ட ஒரு திகிலூட்டும் காட்சி! எவ்வளவு பயங்கரமானது! எல்லையே இல்லாத, சோலைகளே இல்லாத மணல் கடல், கைவிடப்பட்ட ஒரு சந்ததியின் விசனகரமான கல்லறைத் தோட்டம்! ஆனால் உற்றுப் பார்த்து ஆச்சரியப்படு! சுட்டெரிக்கும் அந்த மணலிலிருந்து திடீரென்று விலையேறப்பெற்ற ஒரு செடி எழும்புவதைக் காண்கிறேன்; அது வளர வளர மொட்டு விடுகிறது, மொட்டு விரிகிறது—அது ஒரு ரோஜா மலர், அதன் அருகே ஒரு லீலி புஷ்பம் தன் அடக்கமான தலையை வளைத்து நிற்கிறது; அதிசயங்களின் அதிசயமே! அந்தப் புஷ்பங்களின் சுகந்த வாசனை பரவ பரவ, வனாந்தரம் பலனுள்ள வயலாக மாறுகிறது, லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன்களின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படுகிறது. அதைச் சகாரா என்று அழைக்காதே, பரதீஸ் என்று அழை. அதை இனி மரண இருளின் பள்ளத்தாக்கு என்று சொல்லாதே, ஏனெனில் எலும்புக்கூடுகள் வெயிலில் வெளுத்துக் கிடந்த இடத்தில் இதோ உயிர்த்தெழுதல் பிரகடனப்படுத்தப்படுகிறது, மரித்தவர்கள் அழியாத ஜீவன் நிறைந்த ஒரு மகா பெரிய சேனையாக எழும்புகிறார்கள். இயேசுவே அந்த விலையேறப்பெற்ற செடி, அவருடைய பிரசன்னம் எல்லாவற்றையும் புதியதாக்குகிறது.

eவ்வொரு தனிமனிதனின் இரட்சிப்பிலும் இந்த அதிசயம் குறைவானதல்ல. பிரியமான வாசகரே, அங்கே உன்னைக் காண்கிறேன், துணிகரமாய் எறியப்பட்ட ஒரு குழந்தை நீ, துணிகளற்றவன், கழுவப்படாதவன், உன் சொந்த இரத்தத்திலே தீட்டுப்பட்டவன், காட்டுமிருகங்களுக்கு இரையாகக் கைவிடப்பட்டவன் (). ஆனால் இதோ, ஒரு தெய்வீகக் கரத்தினால் உன்னுடைய மார்பில் ஒரு நவரத்தினம் எறியப்பட்டது, அதினிமித்தம் தெய்வீகப் பராமரிப்பினால் நீ பரிதபிக்கப்பட்டு அரவணைக்கப்பட்டாய், உன்னுடைய தீட்டிலிருந்து நீ கழுவிச் சுத்திகரிக்கப்பட்டாய், பரலோகக் குடும்பத்தில் சுவிகாரப் புத்திரனாக ஏற்றுக்கொள்ளப்பட்டாய், அன்பின் அழகான முத்திரை உன்னுடைய நெற்றியில் இருக்கிறது, உண்மையின் மோதிரம் உன்னுடைய கரத்தில் இருக்கிறது—நீ ஒரு காலத்தில் கைவிடப்பட்ட அநாதையாய் இருந்தாய், இப்போதோ தேவனுக்கு முன்பாக ஒரு பிரபுவாய் இருக்கிறாய். வனாந்தரங்களைத் தோட்டங்களாக மாற்றி, மலட்டு இருதயத்தைச் சந்திக்கச் செய்து ஆனந்தமாய் பாட வைக்கிற ஒப்பிடமுடியாத உன்னத வல்லமையையும் கிருபையையும் பெரிதும் மதித்துப் போற்று.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.