JUL 02 MORNING

சங்கீதம் 33:21

அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.

சங்கீதம் 33:21

அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவருக்குள் நம்முடைய இருதயம் மகிழும்" (). கிறிஸ்தவர்கள் மகா ஆழமான இக்கட்டுகளிலும்கூட மகிழ்ச்சியடைய முடியும் என்பது ஆசீர்வதிக்கப்பட்ட உண்மையாய் இருக்கிறது; உபத்திரவங்கள் அவர்களைச் சூழ்ந்திருந்தாலும் அவர்கள் பாடுகிறார்கள்; அநேகப் பறவைகளைப் போல அவர்கள் தங்களின் கூண்டுகளில்தான் மிக நன்றாகப் பாடுகிறார்கள். அலைகள் அவர்கள் மேல் புரண்டோடலாம், ஆனால் அவர்களுடைய ஆத்துமாக்கள் சீக்கிரத்தில் மேலே எழும்பி தேவனுடைய முகத்தின் வெளிச்சத்தைக் காண்கின்றன; தங்களின் தலையை எப்போதும் தண்ணீருக்கு மேலே வைத்திருக்கச் செய்யும் ஒரு மிதப்புத்தன்மை அவர்களிடம் இருக்கிறது, அது, "தேவன் இன்னும் என்னோடு இருக்கிறார்" என்று புயலின் மத்தியிலும் பாட அவர்களுக்குத் துணைசெய்கிறது. இந்த மகிமை யாருக்குச் செலுத்தப்பட வேண்டும்? ஓ! இயேசுவுக்கே—எல்லாமே இயேசுவினால் மாத்திரமே. உபத்திரவம் என்பது விசுவாசிக்குத் தானாகவே ஆறுதலைக் கொண்டுவருவதில்லை, மாறாக அவரோடு கூட எரியும் சூளையில் இருக்கும் தேவகுமாரனின் பிரசன்னமே அவனுடைய இருதயத்தைச் சந்தோஷத்தினால் நிரப்புகிறது (). அவன் நோய்வாய்ப்பட்டுப் பாடுபடுகிறான், ஆனால் இயேசு அவனைச் சந்தித்து அவனுடைய படுக்கையை மாற்றுகிறார் (). அவன் மரித்துக் கொண்டிருக்கிறான், யோர்தானின் குளிர்ந்த சில்லென்ற தண்ணீர் அவனுடைய கழுத்து வரை அவனைச் சூழ்ந்து கொள்கிறது, ஆனால் இயேசு தன் கரங்களால் அவனைக் அணைத்துக்கொண்டு, "பிரியமானவனே, பயப்படாதே; மரிப்பது பாக்கியமானது; மரணத்தின் தண்ணீரின் ஊற்று பரலோகத்தில் இருக்கிறது; அவைகள் கசப்பானவை அல்ல, அவைகள் தேவாமிர்தத்தைப் போல இனிமையானவை, ஏனெனில் அவைகள் தேவனுடைய சிங்காசனத்திலிருந்து பாய்கின்றன" என்று கூவுகிறார். பிரயாணப்படும் அந்தப் பரிசுத்தவான் நீரோடையைக் கடந்து செல்லும்போது, அலைகள் அவனைச் சூழ்ந்து, இருதயமும் மாம்சமும் சோர்ந்துபோகும்போது, அதே சத்தம் அவனுடைய காதுகளில் ஒலிக்கிறது, "பயப்படாதே; நான் உன்னுடனே இருக்கிறேன்; கலங்காதே; நானே உன் தேவன்" (). எல்லையற்ற அந்த அறியப்படாத தேசத்தின் எல்லைகளை அவன் நெருங்கி, அந்தகாரத்தின் எல்லைக்குள் பிரவேசிக்கச் சற்று அஞ்சும்போது, இயேசு, "பயப்படாதே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்" () என்கிறார். இவ்விதமாய் பலப்படுத்தப்பட்டு ஆறுதலடைந்த விசுவாசி மரிக்க அஞ்சுவதில்லை; ஆமாம், அவன் புறப்பட்டுப் போக மனதாயிருக்கிறான், ஏனெனில் இயேசுவை விடிவெள்ளி நட்சத்திரமாகக் கண்டவன், அவரைத் தன் முழு பலத்தோடு பிரகாசிக்கும் சூரியனாக உற்று நோக்க வாஞ்சிக்கிறான். மெய்யாகவே, இயேசுவின் பிரசன்னமே நாம் வாஞ்சிக்கும் முழு பரலோகமுமாய் இருக்கிறது. அவரே ஒரே நேரத்தில் 'நம்முடைய மிகச் சிறந்த நாட்களின் மகிமையாயும்; நம்முடைய இரவுகளின் ஆறுதலுமாயும் இருக்கிறார்.'

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.