JUN 02 MORNING

கலாத்தியர் 5:17

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.

கலாத்தியர் 5:17

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது" (). ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்திலும் பழைய சுபாவத்திற்கும் புதிய சுபாவத்திற்கும் இடையே ஒரு மாறாத போராட்டம் உண்டு. பழைய சுபாவம் மிகவும் சுறுசுறுப்பாய் இருக்கிறது, தன் கொடிய ஆயுதசாலையின் எல்லா ஆயுதங்களையும் புதிதாய்ப் பிறந்த கிருபைக்கு விரோதமாய்ப் பயன்படுத்த எந்த ஒரு தருணத்தையும் அது தவறிவிடுவதில்லை; மறுபுறத்தில், புதிய சுபாவமும் தன் சத்துருவை எதிர்த்து அழிக்க எப்போதுமே விழிப்புடன் இருக்கிறது. நமக்குள்ளிருக்கும் கிருபை தீமையை ஒழித்துவிட ஜெபம், விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பைப் பயன்படுத்தும்; அது "தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும்" எடுத்துக்கொண்டு, உத்தமமாய் மல்லுக்கட்டுகிறது (). இந்த இரண்டு எதிரெதிர் சுபாவங்களும் நாம் இவ்வுலகில் இருக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. "கிறிஸ்தவனுக்கும்" "அப்பொல்லியோனுக்கும்" நடந்த யுத்தம் மூன்று மணிநேரம் நீடித்தது, ஆனால் கிறிஸ்தவனுக்கும் அவனுக்குள்ளே இருந்த சுயத்திற்கும் நடந்த யுத்தம் இடுக்கமான வாசலிலிருந்து யோர்தான் நதி வரை அப்uாதையெங்கும் நீடித்தது. சத்துரு நமக்குள்ளே எவ்வளவு பாதுகாப்பாய் அரண் அமைத்திருக்கிறான் என்றால், நாம் இந்தச் சரீரத்தில் இருக்கும் வரை அவனை வெளியே விரட்டவே முடியாது: ஆனால் நாம் சுற்றிலும் நெருக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் கடுமையான போராட்டத்தில் இருந்தாலும், நமக்கு ஒரு சர்வவல்லமையுள்ள உதவியாளர் இருக்கிறார், அவரே நம் இரட்சிப்பின் அதிபதியாகிய இயேசு, அவர் எப்போதுமே நம்மோடு இருக்கிறார், அவராலே நாம் முற்றுமுடிய ஜெயங்கொள்ளுவோம் என்று நமக்கு உறுதி அளிக்கிறார். அத்தகைய உதவியோடு, புதிதாய்ப் பிறந்த சுபாவம் தன் சத்துருக்களை மேற்கொள்ளப் போதுமானதாய் இருக்கிறது. நீ இன்று சத்துருவோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறாயா? சாத்தானும், உலகமும், மாம்சமும் உனக்கு விரோதமாய் இருக்கின்றனவா? சோர்ந்துபோகாதே, கலங்காதே. தொடர்ந்து யுத்தம் செய்! ஏனெனில் தேவன் தாமே உன்னுடனே இருக்கிறார்; யெகோவா நிசி உன்னுடைய கொடி, யெகோவா ரப்பா உன்னுடைய காயங்களைக் குணமாக்குகிறவர். பயப்படாதே, நீ ஜெயங்கொள்ளுவாய், ஏனெனில் சர்வவல்லமையையே யாரால் தோற்கடிக்க முடியும்? "இயேசுவை நோக்கி" தொடர்ந்து யுத்தம் செய்; போராட்டம் நீண்டதாகவும் கடுமையானதாகவும் இருந்தாலும், ஜெயம் இனிமையானதாகவும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பலன் மகிமையானதாகவும் இருக்கும். "பலத்திலிருந்து பலமடைந்து முன்னோக்கிச் செல்; மல்லுகட்டு, யுத்தம் செய், ஜெபி, அந்தகாரத்தின் எல்லா வல்லமைகளையும் மிதித்துப்போடு, நன்றாய் யுத்தம் செய்த அந்த நாளைச் சொந்தமாக்கிக்கொள்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.