AUG 03 EVENING

லுூக்கா 8:42

தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.

லுூக்கா 8:42

தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவர் போகையில்" (). இயேசு அதிகாரியின் மரித்துப் போன குமாரத்தியை உயிரோடே எழுப்பும்படி, ஜனக்கூட்டத்தின் வழியாய் யவீருவின் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறார்; ஆனால் அவர் நன்மையில் அவ்வளவு தாராள குணம் உள்ளவராய் இருப்பதினால், வழியிலேயே மற்றொரு அற்புதத்தை நடப்பிக்கிறார். ஆரோனின் இந்தத் தடி இன்னும் நிறைவேற்றப்படாத ஓர் அற்புதத்தின் புஷ்பத்தைச் சுமந்து கொண்டிருக்கும் போதே, பூரணமான ஓர் இரக்கத்தின் கிரியையாகிய முதிர்ந்த பாதாம் கனிகளைத் தருகிறது (). நமக்கு ஏதேனும் ஒரு நோக்கம் இருந்தால், உடனே சென்று அதை நிறைவேற்றுவதே நமக்குப்போதும்; வழியிலேயே நம்முடைய ஆற்றலைச் செலவழிப்பது விவேகமற்றதாய் இருக்கும். மூழ்கும் ஒரு சிநேகிதனைக் காப்பாற்றத் தீவிரிக்கிற நாம், அதே ஆபத்திலிருக்கும் மற்றொருவன் மேல் நம்முடைய பலத்தைச் செலவழிக்க முடியாது. ஒரு மரம் ஒரே வகையான கனியைத் தருவதும், ஒரு மனிதன் தன் சொந்த விசேஷித்த அழைப்பை நிறைவேற்றுவதும் போதுமானது. ஆனால் நம்முடைய எஜமானரோ வல்லமையின் எல்லையையோ அல்லது ஊழியத்தின் வரம்பையோ அறியாதவர். அவர் கிருபையில் அவ்வளவு வளம் நிறைந்தவர், தன் பாதையில் உருண்டோடிச் செல்லும்போது பிரகாசிக்கும் சூரியனைப் போல, அவருடைய பாதை உருக்கமான இரக்கத்தினால் பிரகாசிக்கிறது. அவர் அன்பின் வேகமான அம்பாய் இருக்கிறார், அது தனக்கு நியமிக்கப்பட்ட இலக்கை அடைவது மாத்திரமல்லாமல், தான் பறந்து செல்லும் ஆகாயத்தையும் சுகந்தமயமாக்குகிறது. பூக்களிலிருந்து சுகந்த வாசனை புறப்படுவது போல, வல்லமை எப்போதுமே இயேசுவிடமிருந்து புறப்பட்டுக்கொண்டே இருக்கிறது; பிரகாசிக்கும் ஊற்றிலிருந்து தண்ணீர் பாய்வது போல அது எப்போதுமே அவரிடமிருந்து பாய்ந்துகொண்டே இருக்கும். இந்தச் சத்தியம் நமக்கு எப்பேர்ப்பட்ட இன்பமான ஊக்கத்தைத் தருகிறது! நம்முடைய ஆண்டவர் வியாதியஸ்தரைக் குணமாக்கவும் தேவையுள்ளவர்களை ஆசீர்வதிக்கவும் அவ்வளவு ஆயத்தமாய் இருந்தால், என் ஆத்துமாவே, அவர் உன்மேல் பிரியமாயிருக்கும்படி அவருடைய பாதையில் உன்னை நிறுத்துவதில் நீ தாமதியாதே. அவர் கொடுப்பதில் அவ்வளவு மிகுதியுள்ளவராய் இருந்தால், நீ கேட்பதில் சோம்பலாய் இராதே. இயேசு உன்னுடைய இருதயத்தோடு பேசும்படிக்கு, இப்போதும் எப்போதும் அவருடைய வார்த்தைக்கு உருக்கமாய் செவிகொடு. அவர் எங்கே காணப்படுவாரோ அங்கே உன்னுடைய புகலிடமாக்கிக்கொள், அப்போது அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவாய். குணமாக்க அவர் பிரசன்னமாயிருக்கும்போது, அவர் உன்னைக் குணமாக்க மாட்டாரா? ஆனால் அவர் இப்போதே பிரசன்னமாய் இருக்கிறார் என்பது நிச்சயம், ஏனெனில் தமக்குத் தேவையுள்ள இருதயங்களுக்குள் அவர் எப்போதுமே வருகிறார். உனக்கு அவர் எவ்வளவு தேவை என்பதை நீ அறியாயோ? ஆ, உனக்கு எவ்வளவு தேவை என்பதை அவர் அறிவார்! தாவீதின் குமாரனே, உமது கண்ணைத் திருப்பி, உமக்கு முன்பாக இருக்கும் இந்த இக்கட்டை நோக்கிப் பாரும், உம்மை வேண்டிக்கொள்ளும் அடியேனைக் குணமாக்கியருளும்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.