JUL 03 MORNING

ஆதியாகமம் 41:4

அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.

ஆதியாகமம் 41:4

அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவலட்சணமும் மெலிவுமான அந்தப் பசுக்கள், வடிவும் கொழுப்புமான அந்த ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டன" (). பார்வோனின் கனவு பலமுறை நான் விழித்திருக்கும்போதே என் அனுபவமாய் இருந்திருக்கிறது. என் சோம்பலின் நாட்கள், வைராக்கியமான பிரயாசங்களின் காலங்களில் நான் சம்பாதித்த யாவற்றையும் பாழாக்கி அழித்துவிட்டன; என் குளிர்ச்சியின் காலங்கள், என் உருக்கமான மற்றும் வைராக்கியமான காலங்களின் ஆவிக்குரிய உஷ்ணத்தையெல்லாம் உறைந்துபோகச் செய்துவிட்டன; என் உலகத்தன்மையின் சோதனைகள், தெய்வீக வாழ்க்கையில் நான் அடைந்த முன்னேற்றங்களிலிருந்து என்னைப் பின்னோக்கித் தள்ளிவிட்டன. நான் மெலிந்த ஜெபங்கள், மெலிந்த துதிகள், மெலிந்த கடமைகள், மற்றும் மெலிந்த அநுபவங்களைக் குறித்து மகா எச்சரிக்கையாய் இருக்க வேண்டியிருந்தது, ஏனெனில் இவைகள் என் ஆறுதல் மற்றும் சமாதானத்தின் கொழுப்பை பட்சித்துப்போடும். நான் மகா குறுகிய காலத்திற்கு ஜெபத்தை அலட்சியம் பண்ணினாலும், நான் அடைந்திருந்த எல்லா ஆவிக்குரிய தன்மையையும் இழந்துபோகிறேன்; பரலோகத்திலிருந்து புதிய போஷாக்குகளை நான் பெறாமல் போனால், என் ஆத்துமாவுக்குள் கொந்தளிக்கும் பஞ்சத்தினாலே என் களஞ்சியத்திலுள்ள பழைய தானியம் சீக்கிரத்தில் தீர்ந்துபோகிறது. அலட்சியம் என்னும் வெட்டுக்கிளிகளும், உலகத்தன்மை என்னும் பச்சைப்புழுக்களும், சுயஇன்பம் என்னும் கூட்டுப்புழுக்களும் என் இருதயத்தை முற்றிலும் பாழாக்கி, என் ஆத்துமாவைச் சோர்ந்துபோகச் செய்யும்போது, கடந்த காலத்தின் என் எல்லாப் பலன்களும் கிருபையின் வளர்ச்சியும் எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போகிறது. எனக்கு மெலிந்த நாட்கள், அவலட்சணமான மணிநேரங்கள் இல்லாதபடி பார்த்துக் கொள்ள நான் எவ்வளவு கவலையோடு இருக்க வேண்டும்! ஒவ்வொரு நாளும் என் ஆசைகளின் இலக்கை நோக்கி நான் பிரயாணப்பட்டால் நான் சீக்கிரத்தில் அதை அடைந்துவிடுவேன், ஆனால் பின்வாங்குதல் என்னை உன்னதமான அழைப்பின் பந்தயப்பொருளுக்கு இன்னும் தூரமாய் நிறுத்தி, நான் எவ்வளவோ பிரயாசப்பட்டு அடைந்த முன்னேற்றங்களையும் என்னிடமிருந்து பறித்துவிடுகிறது (). நம்முடைய எல்லா நாட்களும் "கொழுத்த பசுக்களைப்" போல இருப்பதற்கான ஒரே வழி, அவைகளைச் சரியான மேய்ச்சல் நிலத்தில் மேயவிடுவதும், அவைகளைக் கர்த்தரோடு கூட, அவருடைய ஊழியத்தில், அவருடைய ஐக்கியத்தில், அவருடைய பயத்தில், மற்றும் அவருடைய வழியில் செலவழிப்பதுமே ஆகும். ஒவ்வொரு வருடமும் கடந்த காலத்தைக் காட்டிலும் அன்பிலும், பிரயோஜனத்திலும், சந்தோஷத்திலும் ஏன் அதிக ஐசுவரியமானதாய் இருக்கக் கூடாது?—நான் பரலோக மலைகளுக்கு இன்னும் அருகிலிருக்கிறேன், என் கர்த்தரைக் குறித்து அதிக அநுபவத்தைப் பெற்றிருக்கிறேன், அவரைப் போல இன்னும் அதிகமாய் மாற வேண்டும். ஓ ஆண்டவரே, ஆத்துமாவின் மெலிவாகிய சாபத்தை எனக்குத் தூரப்படுத்தும்; "என் மெலிவு, என் மெலிவு, எனக்கு ஐயோ!" என்று நான் கதறவிடாதேயும் (); உமது நாமத்தைத் துதிக்கும்படி உமது அரமனையிலே நான் நன்றாய் போஷிக்கப்பட்டுச் செழிக்கச் செய்யும்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.