"இவர்கள் குயவர்; தோப்பிலும் வேலியிலும் குடியிருந்தவர்கள்; அங்கே அவர்கள் ராஜாவின் வேலைக்காக அவனோடிருந்தார்கள்" (). குயவர்கள் வேலைக்காரர்களின் மிக உன்னதமான தரத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, ஆனால் "ராஜாவுக்கு" குயவர்கள் தேவைப்பட்டார்கள், எனவே அவர்கள் கிரியை செய்த பொருள் வெறும் களிமண்ணாக இருந்தாலும், அவர்கள் ராஜரீக ஊழியத்தில் இருந்தார்கள். நாமும் கர்த்தருடைய ஊழியத்தின் மிகவும் அற்பமான பகுதியில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் "ராஜாவுக்காக" எதையும் செய்வது ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்; எனவே நாம் நம்முடைய அழைப்பில் நிலைத்திருப்போம், "நீங்கள் அடுப்பங்கரைகளின் நடுவே கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் மூடப்பட்ட புறாவின் சிறகுகளைப்போலவும், பசும்பொன் நிறமான அவளுடைய இறகுகளைப்போலவும் இருப்பீர்கள்" () என்று நம்புவோமாக. தோப்புகளிலும் வேலிகளிலும் குடியிருந்தவர்களைக் குறித்து இந்த வசனம் நமக்குச் சொல்கிறது, அவர்கள் கரடுமுரடான, கிராமப்புற, வேலி அடைக்கும் மற்றும் வாய்க்கால் வெட்டும் வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் பட்டணத்தின் ஜீவன், சமுதாயம் மற்றும் நாகரிகத்தின் மத்தியில் வாழ வாஞ்சித்திருக்கலாம், ஆனால் அவர்கள் ராஜாவின் வேலையைச் செய்தபடியால் தங்களுக்கு நியமிக்கப்பட்ட இடங்களிலேயே தங்கியிருந்தார்கள். நாம் குடியிருக்கும் இடம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, நம்முடைய இஷ்டப்படியும் சபலத்தினாலும் நாம் அதை விட்டு அகலக் கூடாது, மாறாக நாம் வசிக்கும் ஜனங்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பதின் மூலம் அங்கேயே கர்த்தருக்கு ஊழியம் செய்யத் தேட வேண்டும். இந்த குயவர்களுக்கும் தோட்டக்காரர்களுக்கும் ராஜரீக ஐக்கியம் இருந்தது, ஏனெனில் அவர்கள் "ராஜாவோடிருந்தார்கள்", வேலிகளுக்கும் தோப்புகளுக்கும் மத்தியிலிருந்தாலும், அவர்கள் அங்கே ராஜாவோடிருந்தார்கள். எந்த ஒரு நியாயமான இடமோ, அல்லது கிருபையுள்ள தொழிலோ, அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும், நம்முடைய தெய்வீக ஆண்டவருடனான ஐக்கியத்திலிருந்து நம்மைத் தடுக்க முடியாது. குடிசைகளுக்கும், ஜனங்கள் மொய்க்கும் தங்குமிடங்களுக்கும், தர்மஸ்தாபனங்களுக்கும், அல்லது சிறைச்சாலைகளுக்கும் செல்லும்போது நாம் ராஜாவோடு கூடச் செல்லலாம். விசுவாசத்தின் எல்லா கிரியைகளிலும் நாம் இயேசுவின் ஐக்கியத்தை நம்பலாம். நாம் அவருடைய வேலையில் இருக்கும்போதுதான் அவருடைய புன்னகையை நாம் எதிர்பார்க்க முடியும். மிகவும் தாழ்ந்தவர்களுடைய அழுக்கிற்கும் அக்கிரமத்திற்கும் மத்தியில் உங்களது கர்த்தருக்காக ஊழியஞ்செய்கிற அறியப்படாத ஊழியக்காரர்களே, தைரியங்கொள்uுங்கள், ஏனெனில் குப்பைமேடுகளிலும்கூட நவரத்தினங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன, மண்பாண்டங்கள் பரலோக பொக்கிஷத்தினால் நிரப்பப்பட்டிருக்கின்றன, தீய கலைகள் விலையேறப்பெற்ற புஷ்பங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. ராஜாவின் வேலைக்காக அவனோடிருங்கள், அவர் தன் நாளாகமங்களை எழுதும்போது உங்களுடைய நாமம் பதிவு செய்யப்படும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.