AUG 04 MORNING

தானியேல் 11:32

உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்.

தானியேல் 11:32

உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

" தங்கள் தேவனை அறிகிற ஜனங்கள் திடன்கொண்டு, பராக்கிரமம் செய்வார்கள்" (). தேவனை அறிவதே அறிவின் மகா உன்னதமான மற்றும் மிகச் சிறந்த வடிவமாகும் என்பதை விசுவாசி ஒவ்வொருவனும் அறிவான்; இந்த ஆவிக்குரிய அறிவே கிறிஸ்தவனுக்குப் பலத்தின் ஊற்றாய் இருக்கிறது. அது அவனுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. விசுவாசிகள் கர்த்தராலே வெளிச்சமடையச் செய்யப்பட்டுப் போதிக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்று வேதாகமத்தில் ஓயாமல் பேசப்படுகிறது; அவர்கள் "பரிசுத்தவராலே அபிஷேகம் பெற்றிருக்கிறார்கள்" என்று சொல்லப்படுகிறது (), அவர்களைச் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவது பரிசுத்த ஆவியானவரின் விசேஷித்த ஊழியமாய் இருக்கிறது, இவையாவும் தங்களின் விசுவாசத்தின் பெருக்கத்திற்கும் போஷாக்கிற்குமே ஆகும். அறிவு விசுவாசத்தைப் போல அன்பையும் பலப்படுத்துகிறது. அறிவு கதவைத் திறக்கிறது, பின்பு அந்தக் கதவின் வழியாய் நம்முடைய இரட்சகரைக் காண்கிறோம். அல்லது, மற்றொரு உவமையைப் பயன்படுத்துவதானால், அறிவு இயேசுவின் படத்தைச் சித்திரிக்கிறது, அந்தப் படத்தை நாம் காணும்போது அவரை நேசிக்கிறோம், நமக்குத் தெரியாத ஒரு கிறிஸ்துவை, குறைந்தபட்சம் ஏதோ ஒரு அளவில் அறியாதவரை நம்மால் நேசிக்க முடியாது. இயேசுவின் மேன்மைகளைப் பற்றியும், அவர் நமக்காகச் செய்தவைகளைப் பற்றியும், இப்போது செய்து கொண்டிருப்பவைகளைப் பற்றியும் நாம் மிகக் குறைந்த அளவே அறிந்திருந்தால், நம்மால் அவரை அதிகம் நேசிக்க முடியாது; ஆனால் அவரைப் பற்றி நாம் அதிகமாய் அறிய அறிய, அவரை அதிகமாய் நேசிப்போம். அறிவு நம்பிக்கையையும் பலப்படுத்துகிறது. ஒரு காரியத்தைப் பற்றி நாம் அறியாமல் இருந்தால் அதை எவ்வாறு நம்ப முடியும்? நம்பிக்கை என்பது தொலைநோக்கியாய் இருக்கலாம், ஆனால் நாம் போதனையைப் பெறும் வரை, நம்முடைய அறியாமை கண்ணாடியின் முன்னால் நிற்கிறது, நம்மால் எதையும் காண முடியாது; அறிவு குறுக்கிடும் பொருளை அகற்றிவிடுகிறது, பிரகாசமான அந்தக் கண்ணாடியின் வழியாய் நாம் பார்க்கும்போது வெளிப்படப் போகும் மகிமையைக் கண்டுகொண்டு, சந்தோஷமான நம்பிக்கையோடு அதை எதிர்நோக்குகிறோம். அறிவு நமக்குச் சகிப்புத்தன்மைக்கான காரணங்களை அளிக்கிறது. கிறிஸ்துவின் அனுதாபத்தைப் பற்றி ஏதாகிலும் அறிந்து, நம்முடைய பரமபிதா நமக்கு அனுப்பும் சிட்சையிலிருந்து வரப்போகும் நன்மையைப் புரிந்து கொண்டாலொழிய நமக்கு எவ்வாறு சகிப்புத்தன்மை இருக்கும்? தேவனுக்கு உட்பட்டு, பரிசுத்த அறிவினாலே போஷிக்கப்பட்டுப் பூரணத்திற்குள் கொண்டு வரப்படாத கிறிஸ்தவனின் ஒரே ஒரு கிருபைகூட இல்லை. அப்படியானால் நாம் கிருபையில் மாத்திரமல்லாமல், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் "அறிவிலும்" வளர்வது எவ்வளவு முக்கியமானது! ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.