"உங்கள் கைகளின் பிரயாசங்களையெல்லாம் வெண்காயினாலும் காளானினாலும் கல்மழையினாலும் அடித்தேன்" (). பயிர்களின் மேல் விழும் கல்மழை எவ்வளவு அழிவை உண்டாக்குகிறது, விலையேறப்பெற்ற தானியத்தைத் தரையிலே சிதறடிக்கிறது! பயிர்கள் அத்தகைய பயங்கரமான அழிவுக்குத் தப்பும்போது நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! நாம் கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவோமாக. இன்னும் அஞ்சப்பட வேண்டியவைகள் அந்த இரகசிய அழிவாளர்களாகிய—காளான், பூஞ்சணம், துரு மற்றும் வெண்காயம் ஆகியவைகளே ஆகும். இவைகள் கதிரைக் கரியின் குவியலாக மாற்றுகின்றன, அல்லது அதை அழுகச் செய்கின்றன, அல்லது தானியத்தை வறண்டு போகச் செய்கின்றன, இவையாவும் மனித ஆளுகைக்கு முற்றிலும் அப்பாற்பட்ட வழியில் நடப்பதினால் விவசாயி, "இது தேவனுடைய விரல்" என்று கூவத் தள்ளப்படுகிறான் (). எண்ணற்ற சிறிய பூஞ்சணங்கள் இந்தத் தீமையை உண்டாக்குகின்றன, தேவனுடைய நன்மை மட்டும் இல்லாவிட்டால், கறுப்புக் குதிரையின் மேல் ஏறியிருப்பவன் சீக்கிரத்தில் தேசமெங்கும் பஞ்சத்தைச் சிதறியிருப்பான் (வெளிப்படுத்துதல் 6:5-6). எல்லையற்ற இரக்கம் மனிதர்களின் ஆகாரத்தைத் தப்ப வைக்கிறது, ஆனால் அறுவடையை அழிக்க ஆயத்தமாய் இருக்கும் சுறுசுறுப்பான காரணிகளைக் காணும்போது, "எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை எங்களுக்கு இன்று தாரும்" என்று ஜெபிக்க நாம் மகா ஞானமாய் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். சாபம் உலகமெங்கும் இருக்கிறது; நமக்கு ஓயாமல் ஆசீர்வாதம் தேவை. வெண்காயமும் காளானும் வரும்போது அவைகள் பரலோகத்திலிருந்து வரும் சிட்சைகளாய் இருக்கின்றன, மனிதர்கள் பிரம்பையும் அதை நியமித்தவரையும் சகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் ().
ஆவிக்குரிய பிரகாரமாய், காளான் என்பது அபூர்வமில்லாத தீமையாய் இருக்கிறது. நம்முடைய ஊழியம் மகா நம்பிக்கையுள்ளதாய் இருக்கும் போது இந்தத் தீமை தோன்றும். நாம் அநேக மனந்திரும்புதல்களை எதிர்பார்த்தோம், இதோ! பொதுவான உணர்வற்ற தன்மை, பெருகும் உலகத்தன்மை, அல்லது இருதயத்தின் கொடூரமான கடினத்தன்மை! நாம் பிரயாசப்படுகிறவர்களிடம் வெளிப்படையான பாவம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உத்தமத்தின் வறுமையும் தீர்மானமும் நம்முடைய ஆசைகளை மகா விசனகரமாய் ஏமாற்றுகின்றன. இதிலிருந்து நாம் கர்த்தர் மேல் சார்ந்திருப்பதையும், நம்முடைய ஊழியத்தின் மேல் எந்த ஒரு தீமையும் விழாதபடிக்கு ஜெபிக்க வேண்டிய அவசியத்தையும் கற்றுக்கொள்கிறோம். ஆவிக்குரிய பெருமை அல்லது சோம்பல் சீக்கிரத்தில் நம்மேல் பயங்கரமான தீமையைக் கொண்டுவரும், அறுவடையின் கர்த்தரால் மாத்திரமே அதை நீக்க முடியும். காளான் நம்முடைய சொந்த இருதயங்களையும்கூடத் தாக்கி, நம்முடைய ஜெபங்களையும் பக்திவிருத்தியின் கிரியைகளையும் சுருங்கப் பண்ணலாம். இத்தகைய கொடிய ஆபத்தைத் தவிர்க்கும் படி மாபெரும் தோட்டக்காரனுக்குச் சித்தமாவதாக. பிரகாசியும், ஆசீர்வதிக்கப்பட்ட நீதியின் சூரியனே, அழிவுகளை விரட்டியடியும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.