JUL 04 MORNING

யோவான் 17:17

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

யோவான் 17:17

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்" (). பரிசுத்தமாக்கல் மறுபடி ஜெநிப்பிக்கப்படுவதில் தொடங்குகிறது. தேவனுடைய ஆவியானவர் மனிதனுக்குள் அந்தப் புதிய ஜீவனுள்ள பிரமாணத்தை ஊற்றுகிறார், அதின் மூலம் அவன் கிறிஸ்து இயேசுவுக்குள் "புதிய சிருஷ்டியாக" மாறுகிறான் (). புதிய பிறப்பில் தொடங்கும் இந்தக் கிரியை இரண்டு வழிகளில் நடத்தப்படுகிறது—மாம்சத்தின் இச்சைகள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படும் அழிவு (mortification); மற்றும் நமக்குள்ளே தேவன் வைத்த அந்த ஜீவன் நித்திய ஜீவனுக்கேதுவாக ஊறிவரும் நீரூற்றாக மாறும் உயிர்ப்பித்தல் (vivification). இது நாடோறும் "நிலைத்திருத்தல்" (perseverance) என்று அழைக்கப்படுகிற வழியில் நடத்தப்படுகிறது, அதின் மூலம் கிறிஸ்தவன் கிருபையின் நிலையில் பாதுகாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறான், தேவனுடைய துதிக்கும் மகிமைக்கும் ஏதுவாக நற்கிரியைகளில் பெருகச் செய்யப்படுகிறான்; ஆத்துமா முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, உன்னதத்திலுள்ள மகத்துவத்தின் வலதுபாரசத்தில் பரிசுத்தமானவர்களோடு வாசம் பண்ணும்படி எடுத்துக்கொள்ளப்படும்போது, அது "மகிமையில்" தன் பூரணத்துவத்தை அடைகிறது. பரிசுத்த ஆவியானவர் இவ்விதமாய்ப் பரிசுத்தமாக்கலின் காரணராய் இருந்தாலும், அங்கே பயன்படுத்தப்படும் கண்ணுக்குத் தெரியும் ஒரு கருவியை நாம் மறந்துவிடக் கூடாது. "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்," என்றார் இயேசு, "உம்முடைய வசனமே சத்தியம்." நம்முடைய பரிசுத்தமாக்கலின் கருவி தேவனுடைய வார்த்தையே என்பதை நிரூபிக்கும் வேதப்பகுதிகள் மிக ஏராளமாய் இருக்கின்றன. தேவனுடைய ஆவியானவர் சத்தியத்தின் கட்டளைகளையும் உபதேசங்களையும் நம்முடைய நினைவிற்குத் கொண்டுவந்து, அவைகளைக் வல்லமையோடு கிரியை செய்ய வைக்கிறார். இவைகள் காதுகளில் கேட்கப்பட்டு, இருதயத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்போது, கர்த்தருடைய நல்விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் நமக்குள்ளே நடப்பிக்கின்றன (). சத்தியமே பரிசுத்தமாக்குகிறது, நாம் சத்தியத்தைக் கேட்காமலோ அல்லது வாசிக்காமலோ இருந்தால், நாம் பரிசுத்தமாக்கலில் வளர மாட்டோம். நாம் சரியான புத்தியில் முன்னேறுவது போல மாத்திரமே சரியான வாழ்க்கையிலும் முன்னேறுகிறோம். "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது" (). எந்த ஒரு தவற்றைக் குறித்தும், "அது வெறும் கொள்கை விஷயம் மாத்திரமே" என்று சொல்லாதே. நியாயத்தீர்ப்பில் ஒரு தவற்றை அனுமதிக்கும் எந்த மனிதனும், முந்தியோ பிந்திவோ அதைத் தன் வாழ்க்கையின் தவறிலும் அனுமதிக்காமல் இருப்பதில்லை. சத்தியத்தை இறுகப் பற்றிக்கொள், உத்தமமாய் அதைப் பற்றிக்கொள்ளும்போது நீ தேவனுடைய ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுவாய்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.