JUN 04 EVENING

1 தீமோத்தேயு 3:16

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

1 தீமோத்தேயு 3:16

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"மகிமையிலே ஏறிக்கொள்ளப்பட்டார்" (). மாம்சத்திலிருந்த நாட்களில் நம்முடைய பிரியமான ஆண்டவர் தாழ்த்தப்பட்டவராயும் மகா வேதனைப்பட்டவராயும் இருந்ததைக் கண்டோம்; ஏனெனில் அவர் "அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கமுகங்கொண்டவரும், பாடுகளையறிந்தவருமாயிருந்தார்" (). விடியற்காலத்தைப் போன்ற பிரகாசத்தைக் கொண்ட அவரே, துக்கத்தின் இரட்டினையைத் தன் தினசரி ஆடையாகத் தரித்திருந்தார்: நிந்தனை அவருடைய சால்வையாயும், அவமானம் அவருடைய அங்கியாயும் இருந்தது. என்றாலும் இப்போது, இரத்தக்கறை படிந்த அந்த மரத்தின் மேல் அந்தகாரத்தின் எல்லா வல்லமைகளையும் அவர் ஜெயித்துவிட்டபடியால், நம்முடைய விசுவாசம் நம்முடைய ராஜா ஏதோமிலிருந்து இரத்தாம்பரம் தரித்தவராய், ஜெயத்தின் அலங்காரத்தில் திரும்பி வருவதைக் காண்கிறது (). மனிதக் கண்களுக்கு எட்டாதபடி ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டபோது, அவர் பரலோகத்திற்கு ஏறிச் சென்றபோது, சேராபீன்களின் கண்களுக்கு அவர் எவ்வளவு மகிமையுள்ளவராகத் தெரிந்திருப்பார்! உலகம் உண்டாவதற்கு முன்னே அவர் தேவனிடத்திலிருந்த மகிமையை இப்போது அவர் தரித்திருக்கிறார், இன்னும் எல்லாவற்றிற்கும் மேலாக மற்றொரு மகிமையையும்—பாவம், மரணம் மற்றும் நரகத்திற்கு எதிரான யுத்தத்தில் அவர் நன்றாய்ச் சம்பாதித்த மகிமையையும் தரித்திருக்கிறார். வெற்றியாளராக அவர் புகழ்பெற்ற கிரீடத்தைத் தரித்திருக்கிறார். இதோ அந்தச் சங்கீதம் எவ்வளவு உன்னதமாய் எழும்புகிறது! அது ஒரு புதிய மற்றும் இனிமையான சங்கீதம்: "அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் தமது இரத்தத்தினாலே எங்களை தேவனுக்கென்று மீட்டுக் கொண்டபடியால், அவர் மகிமையைப் பெறப் பாத்திரராயிருக்கிறார்!" (வெளிப்படுத்துதல் 5:9,12). ஒருபோதும் தோல்வியடையாத ஒரு பரிந்துபேசுபவரின் மகிமையையும், ஒருபோதும் முறியடிக்கப்பட முடியாத ஒரு பிரபுவின் மகிமையையும், ஒவ்வொரு சத்துருவையும் முறியடித்த ஒரு வெற்றியாளரின் மகிமையையும், ஒவ்வொரு குடிகளின் இருதய உத்தமத்தைக் கொண்ட ஒரு கர்த்தரின் மகிமையையும் இயேசு தரித்திருக்கிறார். பரலோகத்தின் ஆடம்பரம் அவருக்கு அளிக்கக்கூடிய எல்லா மகிமையையும், பத்தாயிரம் பதினாயிரமான தூதர்கள் அவருக்குச் செய்யக்கூடிய ஊழியங்களின் மகிமையையும் இயேசு தரித்திருக்கிறார். உன்னுடைய உன்னதமான கற்பனையினாலும் அவருடைய விஞ்சிய மகத்துவத்தை உன்னால் ஊகிக்க முடியாது; என்றாலும் அவர் மகா வல்லமையோடும் சகல பரிசுத்த தூதர்களோடும் பரலோகத்திலிருந்து இறங்கி வரும்போது அதன் அடுத்த வெளிப்பாடு இருக்கும்—"அப்பொழுது அவர் தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்" (). ஓ, அந்த மகிமையின் பிரகாசம்! அது அவருடைய ஜனங்களின் இருதயங்களைப் பரவசப்படுத்தும். இது இத்தோடு முடிந்துவிடுவதில்லை, ஏனெனில் நித்திய காலம் அவருடைய துதியையே ஒலிக்கும், "தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது!" (). வாசகரே, இனிமேல் கிறிஸ்துவின் மகிமையில் நீ மகிழ விரும்பினால், இப்போது அவர் உன்னுடைய பார்வையில் மகிமையுள்ளவராக இருக்க வேண்டும். அவர் அப்படியே இருக்கிறாரா?

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.