AUG 05 MORNING

ரோமர் 8:28

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

ரோமர் 8:28

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அன்றியும், தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு... சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்" (). சில காரியங்களைக் குறித்து விசுவாசி முற்றிலும் நிச்சயமாய் இருக்கிறான். உதாரணமாக, கப்பல் மகா அதிகமாய் அசையும்போது தேவன் அதன் அமரத்தில் வீற்றிருக்கிறார் என்பதை அவன் அறிவான். கண்ணுக்குத் தெரியாத ஒரு கரம் எப்போதுமே உலகத்தின் சுக்கானின் மேல் இருக்கிறது என்பதையும், பராமரிப்பு எங்கே அடித்துச் செல்லப்பட்டாலும் யெகோவாவே அதை நடத்துகிறார் என்பதையும் அவன் விசுவாசிக்கிறான். அந்தத் தேற்றும் அறிவு அவனை எல்லாவற்றிற்கும் ஆயத்தப்படுத்துகிறது. கொந்தளிக்கும் தண்ணீரைக் கடந்து நோக்கி, இயேசுவின் ஆவி அலைகளின் மேல் நடப்பதைக் காண்கிறான், "நான்தான், பயப்படாதிருங்கள்" என்று ஒரு சத்தம் சொல்வதைக் கேட்கிறான் (). தேவன் எப்போதுமே ஞானமுள்ளவர் என்பதையும் அவன் அறிவான், இதை அறிந்து, தற்செயலான காரியங்களோ, தவறுகளோ இருக்க முடியாது என்பதையும்; நிகழக் கூடாத எதுவும் நிகழ முடியாது என்பதையும் அவன் உறுதியாய் நம்புகிறான். அவனால், "என்னிடமுள்ள எல்லாவற்றையும் நான் இழந்தாலும், தேவனுடைய சித்தம் அப்படியிருந்தால், நான் பெற்றிருப்பதை விட இழப்பதே எனக்கு நலமானது: தேவன் அதைக் கட்டளையிட்டால், எனக்கு நேரிடக் கூடிய மகா பயங்கரமான ஆபத்து எனக்கு நிகழக்கூடிய மகா ஞானமுள்ள மற்றும் கனிவான காரியமாய் இருக்கும்" என்று சொல்ல முடியும். "தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு... சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்." கிறிஸ்தவன் இதை வெறும் கொள்கையாக மாத்திரம் கொண்டிருக்கவில்லை, மாறாக இதை ஒரு உண்மையாகவே அறிந்திருக்கிறான். இதுவரை எல்லாமே நன்மைக்கேதுவாகவே கிரியை செய்திருக்கிறது; தகுந்த அளவில் கலக்கப்பட்ட நச்சு மருந்துகள் குணமாக்குதலை நடப்பித்திருக்கின்றன; கத்தியின் கூர்மையான வெட்டுகள் பெருமையான மாம்சத்தைச் சுத்திகரித்து, ஆற்றுதலை எளியதாக்கியிருக்கின்றன. இதுவரை ஒவ்வொரு சம்பவமும் மகா தெய்வீக ஆசீர்வாதமான விளைவுகளையே நடப்பித்திருக்கிறது; இவ்விதமாய், தேவனே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறார் என்றும், அவர் ஞானமாய் ஆளுகை செய்கிறார் என்றும், அவர் தீமையிலிருந்தும் நன்மையைக் கொண்டு வருகிறார் என்றும் விசுவாசித்து, விசுவாசியின் இருதயம் நிச்சயமடைகிறது, ஒவ்வொரு சோதனையும் வரும்போது அமைதியாய்ச் சந்திக்க அவனால் முடிகிறது. பூரண அர்ப்பணிப்பின் ஆவியோடு விசுவாசியால், "என் தேவனே, உம்மிலிருந்து வரும் வரை நீர் எதை விரும்புகிறீரோ அதை எனக்கு அனுப்பும்; உமது பந்தியிலிருந்து உமது பிள்ளைகளில் எவனுக்கும் ஒருபோதும் கெட்ட பங்கு வந்ததில்லை" என்று ஜெபிக்க முடியும்.

"என் ஆத்துமாவே, 'தேவன் என் கவலையை எங்கே இருந்து நீக்க முடியும்?' என்று சொல்லாதே. சர்வவல்லமைக்கு எல்லா இடங்களிலும் ஊழியக்காரர்கள் உண்டு என்பதை நினைவில் கொள். அவருடைய முறைமை உன்னதமானது, அவருடைய இருதயம் மகா கனிவானது, தேவன் ஒருபோதும் தன் காலத்திற்கு முன் வருவதுமில்லை, பின் தங்குவதுமில்லை."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.