JUL 06 MORNING

நீதிமொழிகள் 1:33

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

நீதிமொழிகள் 1:33

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் பயமில்லாமல் வாசம்பண்ணி, தீவினைக்கு அஞ்சாமல் அமைதியாயிருப்பான்" (). தெய்வீக நியாயத்தீர்ப்புகளின் மத்தியில் கிருபை பிரகாசிக்கும் போது, தேவனுடைய அன்பு தனித்து விளங்கித் தெரிகிறது. இடிமுழக்க மேகங்களின் பிளவுகளுக்கு இடையே புன்னகைக்கும் அந்தத் தனித்த நட்சத்திரம் அழகானது; அந்தகாரம் நிறைந்த மணல் வனாந்தரத்தில் மலரும் சோலை பிரகாசமானது; அப்படியே கோபாக்கினையின் மத்தியில் விளங்கும் அன்பும் அழகும் பிரகாசமுமாய் இருக்கிறது. இஸ்ரவேலர் தங்களின் மாறாத விக்கிரகாராதனையினால் உன்னதமானவரைக் கோபப்படுத்தியபோது, அவர் பனியையும் மழையையும் நிறுத்தி அவர்களைச் சிட்சித்தார், அதனால் தேசமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது; அவர் அப்படிச் செய்த போதே, தமக்குரிய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் பத்திரமாய் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். மற்ற எல்லாத் தோடுகளும் வற்றிப்போனாலும், எலியாவுக்கென்று ஒரு தோடு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது; அதுவும் வற்றிப்போனபோது, தேவன் அவனுக்கு போஷாக்கின் இடத்தை இன்னும் பாதுகாத்தார்; ஆமாம், அதுமாத்திரமல்ல, கர்த்தரிடம் ஒரே ஒரு 'எலியா' மாத்திரமிருக்கவில்லை, கிருபையின் தெரிந்துகொள்ளுதலின்படியே ஒரு மீதியான ஜனமும் அவரிடம் இருந்தார்கள், அவர்கள் ஐம்பது ஐம்பது பேராய் ஒரு குகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தார்கள், தேசமெங்கும் பஞ்சம் ஆளுகை செய்தபோதிலும், குகையிலிருந்த அந்த ஐம்பது பேர்களும் போஷிக்கப்பட்டார்கள், தேவனுக்குப் பயந்து நடந்த உத்தம வீcaretாகிய ஒபதியாவினால், ஆகாபின் பந்தியிலிருந்தே அவர்கள் போஷிக்கப்பட்டார்கள் (). இதிலிருந்து நாம் இந்த முடிவைப் பெற்றுக்கொள்வோம், என்ன நேரிட்டாலும், தேவனுடைய ஜனங்கள் பத்திரமாய் இருக்கிறார்கள். அதிர்கிற அலைகள் இந்த உறுதியான பூமியையே அசைத்தாலும், வானங்களே இரண்டாய்க் கிழிந்து போனாலும், உலகங்களின் அழிவின் மத்தியிலும் விசுவாசி தன் அமைதியான இளைப்பாறுதலின் மணிநேரத்தைப் போலவே பத்திரமாய் இருப்பான். வானத்தின் கீழ் தன் ஜனங்களை இரட்சிக்க தேவனால் கூடாமல் போனால், அவர் அவர்களைப் பரலோகத்தில் இரட்சிப்பார். உலகம் அவர்களைத் தாங்க முடியாதபடி உஷ்ணமாய் மாறினால், பரலோகம் அவர்களைத் தாங்கிப் பாதுகாக்கும் இடமாய் மாறும். அப்படியானால், யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் நீங்கள் கேட்கும்போது உன்னதமான நம்பிக்கையோடு இருங்கள் (). எந்த ஓர் அலைச்சலும் உங்களைக் கலங்க விடாதிருக்கட்டும், தீமைக்கு அஞ்சாமல் அமைதியாயிருங்கள். பூமியின் மேல் எது வந்தாலும், யெகோவாவின் மாபெரும் சிறகுகளின் கீழ் நீங்கள் பத்திரமாய் இருப்பீர்கள். அவருடைய வாக்குத்தத்தத்தின் மேல் சாருங்கள்; அவருடைய உண்மைத்தன்மையில் இளைப்பாறுங்கள், மகா இருண்ட எதிர்காலத்தையும் எதிர்த்து நில்லுங்கள், ஏனெனில் அதில் உங்களை அச்சுறுத்தும் எதுவும் இல்லை. ஞானத்தின் சத்தத்திற்குச் செவிகொடுப்பதின் சிலாக்கியத்தை உலகத்தாருக்கு வெளிப்படுத்துவது மாத்திரமே உங்களுடைய ஒரே கவலையாய் இருக்க வேண்டும்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.