JUN 06 MORNING

யோபு 40:4

இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.

யோபு 40:4

இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"இதோ, நான் அற்பன்" (). பாக்கியற்ற அழிந்துபோன பாவியே, இதோ உனக்கு ஊக்கமளிக்கும் ஒரு வார்த்தை! நீ அற்பனாய் இருக்கிறபடியால் தேவனிடம் வரக்கூடாது என்று நினைக்கிறாய். இதோ, பூமியில் வாழும் எந்த ஒரு பரிசுத்தவானும் தான் அற்பன் என்பதை உணரும்படி செய்யப்படாமல் இருந்ததில்லை. யோபு, ஏசாயா, பவுல் ஆகிய எல்லாரும், "நான் அற்பன், நான் தீட்டுப்பட்டவன்" என்று சொல்ல வேண்டியிருந்ததானால், ஓ ஏழைப் பாவியே, அதே அறிக்கையில் நீயும் பங்கெடுக்க வெட்கப்படுவாயா? தெய்வீகக் கிருபை விசுவாசியிடமிருந்து பாவத்தை முற்றிலும் ஒழிக்கவில்லை என்றால், உன்னால் அதை எப்படிச் செய்ய முடியும் என்று நீ எதிர்பார்க்கிறாய்? மேலும் தேவன் தமது ஜனங்கள் அற்பர்களாய் இருக்கும் போதே அவர்களை நேசிக்கிறார் என்றால், உன்னுடைய அற்பத்தனம் உன்னை அவர் நேசிப்பதைத் தடுத்துவிடும் என்று நினைக்கிறாயா? உலகச் சமுதாயத்தினால் கைவிடப்பட்டவனே, இயேசுவை விசுவாசி! இயேசு உன்னையும், உன்னைப் போன்றவர்களையுமே அழைக்கிறார்.

"நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தார்."

இப்போதே சொல், "ஆண்டவரே, நீர் பாவிகளுக்காக மரித்தீர்; நான் ஒரு பாவி, கர்த்தராகிய இயேசுவே, உமது இரத்தத்தை என்மேல் தெளித்தருளும்;" உன்னுடைய பாவத்தை நீ அறிக்கையிட்டால் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வாய். இப்போது, உன்னுடைய முழு இருதயத்தோடும், "நான் அற்பன், என்னை எம்மட்டோ கழுவியருளும்" என்று சொல்வாயானால், நீ இப்போதே கழுவப்படுவாய். பரிசுத்த ஆவியானவர் உனக்குக் கிருபை தந்து இருதயத்திலிருந்து இப்படிக் கூப்பிடச் செய்வாரானால்:

"நான் எப்படிப்பட்டவனோ அப்படியே, எந்த ஒரு வாதமுமின்றி, ஆனால் உமது இரத்தம் எனக்காகச் சிந்தப்பட்டபடியாலும், நீர் என்னை உம்மிடம் வரக் கட்டளையிடுவதனாலும், ஓ தேவ ஆட்டுக்குட்டியே, இதோ வருகிறேன்!"

இன்று காலையின் தியானத்தை வாசித்து முடிக்கும் போதே உன்னுடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு நீ எழுந்திருப்பாய்; மனிதன் செய்த எல்லாப் பாவங்களையும் உன்னுடைய தலையில் சுமந்தவனாய் இன்று காலையில் நீ விழித்திருந்தாலும், இன்று இரவு நீ பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாய் இளைப்பாறுவாய்; ஒரு காலத்தில் பாவத்தின் கந்தைகளுடன் அவலட்சணமாய் இருந்த நீ, நீதியின் அங்கியினால் அலங்கரிக்கப்பட்டு, தூதர்களைப் போல வெண்மையாய்க் காணப்படுவாய். ஏனெனில் "இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம்." நீ "பக்தியற்றவனை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாய் இருந்தால் உன்னுடைய விசுவாசம் உனக்கு நீதியாக எண்ணப்பட்டு நீ இரட்சிக்கப்படுவாய்" (). ஆ, மகா அற்பமானவர்களையும் ஏற்றுக்கொள்ளும் அவரிடம் பரிசுத்த ஆவியானவர் உனக்கு இரட்சிப்பிற்குரிய விசுவாசத்தைத் தருவாராக.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.