AUG 07 MORNING

உன்னதப்பாட்டு 1:4

என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

உன்னதப்பாட்டு 1:4

என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"உத்தமர்கள் உம்மில் அன்புகூருகிறார்கள்" (). விசுவாசிகள் வேறு எந்தப் பொருளுக்கும் தரத் துணியாத மகா ஆழமான அன்பினால் இயேசுவை நேசிக்கிறார்கள். கிறிஸ்துவைப் பிரிவதைக் காட்டிலும் தாய் தகப்பனை இழந்துபோவதை அவர்கள் விரும்புவார்கள். உலகப் பிரகாரமான சகல ஆறுதல்களையும் அவர்கள் தளர்ந்த கரங்களினாலே பற்றிக் கொள்கிறார்கள், ஆனால் அவரையே தங்களின் மார்பிற்குள் பூட்டிச் சுமக்கிறார்கள். அவருடைய நாமத்தினிமித்தம் தங்களைத் தாங்களே மனப்பூர்வமாய் வெறுக்கிறார்கள், ஆனால் அவரை மறுதலிக்கும்படி அவர்களைத் துரத்த முடியாது. துன்புறுத்தலின் அக்கினியினால் வற்றிப்போகும் அன்பு அற்பமான அன்பே; உண்மையான விசுவாசியின் அன்போ அதைவிட மகா ஆழமான நதியாய் இருக்கிறது. உண்மையுள்ளவர்களை அவர்களின் எஜமானரிடமிருந்து பிரிக்க மனிதர்கள் பிரயாசப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களின் பிரயத்தனங்கள் எல்லாக் காலங்களிலும் பலனற்றவைகளாயின. கனத்தின் கிரீடங்களோ, கோபத்தின் முகம் சுளிப்புகளோ சிக்கலான இந்த முடிச்சை அவிழ்க்க முடிவதில்லை. உலக வல்லமையினாலே இறுதியில் ஒழிந்துபோக இது ஒன்றும் சாதாரணமான பாசம் அல்ல. மனிதனாவது பிசாசாவது இந்த பூட்டைத் திறக்கும் திறவுகோலைக் கண்டடையவில்லை. தெய்வீகமாய் இணைக்கப்பட்ட இந்த இரண்டு இருதயங்களின் ஐக்கியத்தைப் பிளக்க சாத்தான் தன் தந்திரத்தைப் பயன்படுத்திய போது இருந்தது போல, அவனுடைய தந்திரம் வேறு எப்போதுமே தோற்றுப்போனதில்லை. "உத்தமர்கள் உம்மில் அன்புகூருகிறார்கள்" என்று எழுதப்பட்டிருக்கிறது, இந்த வாக்கியத்தை எதுவும் அழிக்க முடியாது. என்றாலும் உத்தமர்களின் அன்பின் தீவிரத்தை அது வெளியில் தெரியக் கூடியவைகளைக் கொண்டு அல்ல, அவர்கள் எதற்காக ஏங்குகிறார்கள் என்பதைக் கொண்டே கணக்கிட வேண்டும். நம்மால் போதுமான அளவு அன்பு செலுத்த முடியவில்லையே என்பதே நம்முடைய தினசரி துக்கமாய் இருக்கிறது. நம்முடைய இருதயங்கள் இன்னும் அதிகமாய் உள்ளடக்கவும், இன்னும் அதிக தூரம் எட்டவும் கூடியவைகளாய் இருந்தாக வேண்டும். தேவனுடைய தாசன் சாமுவேல் ரதர்போர்டைப் (Samuel Rutherford) போல நாமும் பெருமூச்சு விட்டு கூவுகிறோம்: "ஓ, பூமி முழுவதையும், பரலோகத்தையும்—ஆமாம் பரலோகங்களின் பரலோகத்தையும், பத்தாயிரம் உலகங்களையும் சூழக் கூடிய அளவு அன்பு எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்—அவையாவற்றையும் அதிசுந்தரரான, ஒப்பற்ற அழகான கிறிஸ்து மேல் மாத்திரம் ஊற்றிவிடுவேன்." அந்தோ! நம்முடைய உன்னதமான எட்டல் ஒரு சாண் அளவிலான அன்பே, அவருடைய தகுதிகளோடு ஒப்பிடும்போது நம்முடைய பாசம் ஒரு துளித் தண்ணீரைப் போன்றதே. நம்முடைய நோக்கங்களினால் நம்முடைய அன்பை அளந்து பார், அப்போது அது மெய்யாகவே உன்னதமானதாய் இருக்கும்; இவ்விதமாகவே நம்முடைய ஆண்டவர் அதை நியாயந்தீர்க்கிறார் என்று நம்புகிறோம். முற்றிலும் அழகானவரிடத்தில் சகல அன்புகளையும் ஒன்றுகூட்டி, சகல இருதயங்களிலுள்ள சகல அன்பையும் ஒரே மாபெரும் நிறைவாக அவருக்குத் தர முடிPastால் எவ்வளவோ நலமாய் இருக்கும்!

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.