AUG 07 EVENING

1 தெசலோனிக்கேயர் 2:18

ஆகையால், நாங்கள் உங்களிடத்தில்வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.

1 தெசலோனிக்கேயர் 2:18

ஆகையால், நாங்கள் உங்களிடத்தில்வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"சாத்தான் எங்களைத் தடை பண்ணினான்" (). நன்மை தீமையோடு போராடத் தொடங்கிய முதல் மணிநேரத்திலிருந்து, சாத்தான் நம்மைத் தடை பண்ணுகிறான் என்பது ஆவிக்குரிய அநுபவத்தில் உண்மையாய் இருப்பது ஒருபோதும் ஒழிந்துபோனதில்லை. திசைகளின் சகல புள்ளிகளிலிருந்தும், போர்க்களத்தின் பாதை நெடுகிலும், முன்அணியிலும் பின்அணியிலும், விடியற்காலையிலும் நள்ளிரவு மணிநேரத்திலும் சாத்தான் நம்மைத் தடை பண்ணுகிறான். நாம் வயலிலே பிரயாசப்பட்டால், அவன் உழவுச்சாலையை உடைக்கத் தேடுகிறான்; நாம் மதிலைக் கட்டினால், அவன் கற்களைக் கீழே தள்ளப் பிரயாசப்படுகிறான்; பாடுகளிலோ அல்லது போராட்டத்திலோ நாம் தேவனுக்கு ஊழியம் செய்ய விரும்பினால்—எல்லா இடங்களிலும் சாத்தான் நம்மைத் தடை பண்ணுகிறான். நாம் முதலில் இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது அவன் நம்மைத் தடை பண்ணுகிறான். நாம் முதலில் சிலுவையை நோக்கிப் பார்த்துப் பிழைத்த போது சாத்தானோடு கடுமையான போராட்டங்களைக் கொண்டிருந்தோம். இப்போது நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், அவன் நம்முடைய தனிப்பட்ட குணத்தின் பூரணத்துவத்தைத் தடை பண்ணப் பிரயாசப்படுகிறான். "நான் இதுவரை உத்தமனாய் நடந்திருக்கிறேன்; என் நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது" என்று உன்னை நீயே மெச்சிக்கொள்ளலாம். பெருமை பாராட்டாதே, ஏனெனில் உன்னுடைய நற்பண்பு இன்னும் சோதிக்கப்படும்; நீ எதற்காக மராப் பிரசித்தி பெற்றவனாய் இருக்கிறாயோ, அந்த நற்பண்பிற்கு விரோதமாகவே சாத்தான் தன் எந்திரங்களைத் திருப்புவான். நீ இதுவரை உறுதியான விசுவாசியாய் இருந்திருந்தால், உன்னுடைய விசுவாசம் சீக்கிரத்தில் தாக்கப்படும்; நீ மோசேயைப் போலச் சாந்த குணமுள்ளவனாய் இருந்திருந்தால், உன் உதடுகளினால் துணிவாய் பேசும்படி சோதிக்கப்படுவாய் என்று எதிர்பார்ப்பாய் (). பறவைகள் உன்னுடைய முதிர்ந்த கனிகளைக் கொத்தும், காட்டுப்பன்றி உன்னுடைய மகா விசேஷித்த திராட்சச்செடிகளைக் காயப்படுத்தும். நாம் ஜெபத்தில் உருக்கமாய் இருக்கும் போது சாத்தான் நம்மைக் தப்பாமல் தடை பண்ணுவான். நாம் ஆசீர்வாதத்தைத் தவறவிட வேண்டும் என்பதற்காக, அவன் நம்முடைய வலியுறுத்தலைத் தடுத்து, நம் விசுவாசத்தைப் பலவீனப்படுத்துகிறான். கிறிஸ்தவ முயற்சியைத் தடுப்பதில் சாத்தான் சற்றும் விழிப்புணர்வற்று இருப்பதில்லை. அவனுடைய எதிர்ப்பின் எழுப்புதல் இல்லாமல் மார்க்கத்தின் எந்த ஒரு எழுப்புதலும் இருந்ததில்லை. எஸ்ராவும் நெகேமியாவும் பிரயாசப்படத் தொடங்கியவுடனே, சன்பல்லாத்தும் தொபியாவும் அவர்களைத் தடை பண்ணும்படி தூண்டப்படுகிறார்கள் (). அப்படியானால் என்ன? சாத்தான் நம்மைத் தடை பண்ணுவதினாலே நாம் நடுங்கிப்போவதில்லை, ஏனெனில் நாம் கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறோம், கர்த்தருடைய வேலையையே செய்கிறோம் என்பதற்கு அதுவே சான்றாய் இருக்கிறது, அவருடைய பலத்தினால் நாம் ஜெயத்தைப் பெற்று, நம்முடைய சத்துருவை மேற்கொள்வோம்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.