JUN 07 MORNING

சங்கீதம் 97:10

கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.

சங்கீதம் 97:10

கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்" (). நீ "தீமையை வெறுப்பதற்கு" நல்ல காரணம் உண்டு, ஏனெனில் அது உனக்கு ஏற்கனவே எவ்வளவு கேடு விளைவித்திருக்கிறது என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார். ஓ, பாவம் உன்னுடைய இருதயத்திற்குள் எப்பேர்ப்பட்ட தீமையின் உலகத்தைக் கொண்டு வந்திருக்கிறது! பாவம் உன்னைக் குருடாக்கியதால் உன்னால் இரட்சகரின் அழகைக் காண முடியாமல் போனது; அது உன்னைச் செவிடாக்கியதால் உன்னால் மீட்பரின் கனிவான அழைப்புகளைக் கேட்க முடியாமல் போனது. பாவம் உன்னுடைய பாதங்களை மரணத்தின் வழிக்கு நேராகத் திருப்பி, உன்னுடைய சுபாவத்தின் ஊற்றிலேயே விஷத்தை ஊற்றியது; அது உன்னுடைய இருதயத்தைக் கறைப்படுத்தி, அதை "எல்லாவற்றைப்பார்க்கிலும் திருகலும் மகா கேடுள்ளதுமாக" மாற்றியது (). ஓ, தெய்வீகக் கிருபை குறுக்கிட்டு உன்னை இரட்சிப்பதற்கு முன், தீமை தன் உன்னதமான வல்லமையால் உன்னை ஆட்கொண்டிருந்தபோது நீ எப்பேர்ப்பட்ட சிருஷ்டியாய் இருந்தாய்! நீயும் மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளையாய் இருந்தாய்; நீயும் "தீமைசெய்யத் திரளான ஜனங்களைப் பின் தொடர்ந்தாய்" (). நாம் எல்லாரும் அப்படித்தான் இருந்தோம்; ஆனால் பவுல் நமக்கு நினைவூட்டுகிறார், "ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமானாக்கப்பட்டீர்கள்" (). கடந்த காலத்தை நாம் திரும்பிப் பார்த்து அதன் கொடிய கிரியைகளைக் கண்டறியும்போது, தீமையை வெறுப்பதற்கு நமக்கு மெய்யாகவே நல்ல காரணம் இருக்கிறது. தீமை நமக்குச் செய்த கேடு அவ்வளவு பெரியது, சர்வவல்லமையுள்ள அன்பு நம்மை மீட்டெடுக்க குறுக்கிடாமல் இருந்திருந்தால் நம்முடைய ஆத்துமாக்கள் அழிந்துபோயிருக்கும். இப்போதும் கூட அது எப்போதுமே நமக்குக் கேடு செய்யவும், நம்மை நரகத்திற்குள் தள்ளவும் விழிப்போடிருக்கும் ஒரு சுறுசுறுப்பான சத்துருவாய் இருக்கிறது. எனவே, ஓ கிறிஸ்தவர்களே, உங்களுக்கு உபத்திரவம் தேவையில்லை என்றால் "தீமையை வெறுத்துவிடுங்கள்." உங்களுடைய பாதையில் முட்களைத் தூவவும், உங்களுடைய மரணப் படுக்கையில் காஞ்சொறிகளை நடவும் நீங்கள் விரும்பினால், "தீமையை வெறுப்பதை" அலட்சியம் பண்ணுங்கள்: ஆனால் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும், அமைதியான மரணத்தைச் சந்திக்கவும் விரும்பினால், முடிவுபரியந்தம் தீமையை வெறுத்து, பரிசுத்தத்தின் எல்லா வழிகளிலும் நடங்கள். நீங்கள் மெய்யாகவே உங்களது இரட்சகரை நேசித்து, அவரைக் கனப்படுத்த விரும்பினால், "தீமையை வெறுத்துவிடுங்கள்." ஒரு கிறிஸ்தவனுக்குள் இருக்கும் தீமையின் மேல் உள்ள அன்பைக் குணமாக்க, கர்த்தராகிய இயேசுவோடு ஓயாமல் கொள்ளும் ஐக்கியத்தைப் போன்ற சிறந்த மருந்து வேறு எதுவும் நாம் அறிந்ததில்லை. அவரோடு அதிகமாய் வாசம் பண்ணு, அப்போது உன்னால் பாவத்தோடு சமாதானமாய் இருக்கவே முடியாது. "உமது வார்த்தையினால் என் நடைகளை ஸ்திரப்படுத்தும், என் இருதயத்தை உத்தமமாக்கும்; பாவம் என்மேல் ஆளுகை செய்யவிடாதேயும், ஆண்டவரே, என் மனச்சாட்சியைச் சுத்தமாய்க் காரும்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.