AUG 08 EVENING

மாற்கு 9:23

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

மாற்கு 9:23

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" (). அநேக வேஷக் கிறிஸ்தவர்கள் எப்போதுமே சந்தேகப்பட்டுக் கொண்டு பயந்து கொண்டு இருக்கிறார்கள், இதுவே விசுவாசிகளின் அவசியமான நிலை என்று பாக்கியற்ற முறையில் நினைக்கிறார்கள். இது ஒரு தவற்றான எண்ணம், ஏனெனில் "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்;" சந்தேகமோ பயமோ ஆத்துமாவின் வழியாய்க் கடந்து செல்லும் ஒரு பறவையைப் போல மாத்திரமே இருக்கும், அங்கே தங்கியிருக்க முடியாத ஒரு நிலைக்கு நாம் ஏறுவது கூடும். விசேஷித்த பரிசுத்தவான்கள் அநுபவித்த உன்னதமான மற்றும் இனிமையான ஐக்கியங்களைப் பற்றி நீங்கள் வாசிக்கும் போது, உங்களுடைய இருதயத்தின் அந்தரங்க அறையில், "அந்தோ! இவைகள் எனக்கு உரியவைகள் அல்ல" என்று பெருமூச்சு விட்டு முறுமுறுக்கிறீர்கள். ஓ ஏறுபவனே, உன்னிடம் விசுவாசம் மாத்திரம் இருந்தால், நீ ஆலயத்தின் ஒளிரும் சிகரத்தின் மேல் நிற்பாய், ஏனெனில் "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்." பரிசுத்த மனிதர்கள் இயேசுவுக்காகச் செய்த பராக்கிரமங்களை நீங்கள் கேட்கிறீர்கள்; அவரிடமிருந்து அவர்கள் அநுபவித்தவைகளை; அவர்கள் எந்தளவிற்கு அவரைப் போல இருந்தார்கள் என்பதை; அவருடைய நாமத்தினாத் தங்களால் எவ்வாறு மகா பெரிய துன்புறுத்தல்களையும் சகிக்க முடிந்தது என்பதை நீங்கள் கேட்கிறீர்கள்; பின்பு நீங்கள், "ஆ! என்னைப் பொறுத்தவரை நான் ஒரு புழு; என்னால் ஒருபோதும் இதை அடைய முடியாது" என்று சொல்லுகிறீர்கள். ஆனால் ஒரு பரிசுத்தவான் எவ்வாறிருந்தானோ, நீயும் அவ்வாறே ஆக முடியாது என்று எதுவும் இல்லை. உன்னிடம் விசுவாசிக்கும் வல்லமை மாத்திரம் இருந்தால், உனக்குத் திறக்கப்படாத கிருபையின் எந்த ஓர் உயர்வும் இல்லை, ஆவிக்குரிய எந்த ஓர் அடைவும் இல்லை, நிச்சயத்தின் எந்தத் தெளிவும் இல்லை, கடமையின் எந்த ஒரு பதவியும் இல்லை. உன்னுடைய இரட்டினையையும் சாம்பலையும் அகற்றிவிட்டு, உன்னுடைய உண்மையான நிலையின் கனத்திற்கு எழும்பு; நீ விரும்புவதினாலேயே இஸ்ரவேலில் சிறியவனாய் இருக்கிறாயே தவிர, அதற்கு எந்த ஓர் அவசியமும் இல்லாததினாலல்ல. ராஜாவின் பிள்ளையே, நீ தூசியில் புரள்வது தகாது. ஏறு! நிச்சயத்தின் பொன்னான சிங்காசனம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது! இயேசுவுடனான ஐக்கியத்தின் கிரீடம் உன்னுடைய நுதலை அலங்கரிக்க ஆயத்தமாய் இருக்கிறது. இரத்தாம்பரத்தையும் மெல்லிய வஸ்திரத்தையும் தரித்துக் கொண்டு, நாடோறும் சம்பிரமமாய் வாழ்; ஏனெனில் நீ விசுவாசித்தால், கோதுமையின் கொழுப்பானதை நீ புசிக்கலாம்; உன்னுடைய தேசம் பாலும் தேனும் ஓடுவதாய் இருக்கும், உன்னுடைய ஆத்துமா நிணத்தினாலும் கொழுப்பினாலும் திருப்தியாகும் (). விசுவாசத்தின் வயல்களில் அவைகள் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பதினால் கிருபையின் பொன்னான கதிர்களைச் சேகரி. "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.