JUN 08 MORNING

1 நாளாகமம் 5:22

யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள்.

1 நாளாகமம் 5:22

யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அந்த யுத்தம் தேவனால் நடத்தப்பட்டபடியால், அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்" (). கர்த்தராகிய இயேசுவின் கொடியின் கீழ் யுத்தம் செய்யும் வீரனே, பரிசுத்த சந்தோஷத்தோடு இந்த வசனத்தைக் கவனித்துப் பார், ஏனெனில் பூர்வநாட்களில் எப்படியோ அப்படியே இப்போதும் இருக்கிறது, யுத்தம் தேவனால் நடத்தப்பட்டால் ஜெயம் நிச்சயம். ரூபன் புத்திரரும், காத்தியரும், மனாசேயின் அரைக்கோத்திரத்தாரும் சேர்ந்து யுத்தத்திற்குப் புறப்படத்தக்க நாற்பத்தையாயிரத்து எண்ணூறு பேரைக் கொண்ட ஒரு சிறிய கூட்டமாகவே இருந்தார்கள், என்றாலும் அத்தாரியரோடு செய்த யுத்தத்தில் அவர்கள், "லட்சம் பேரைப்" பிடித்தார்கள், "ஏனெனில் யுத்தத்திலே அவர்கள் தேவனை நோக்கி முறையிட்டார்கள்; அவர்கள் அவரிடத்தில் நம்பிக்கை வைத்தபடியினால், அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்." கர்த்தர் பலத்தினால் அல்ல, பராக்கிரமத்தினால் அல்ல, தமது ஆவியினாலேயே இரட்சிக்கிறார்; நாம் ஒரு கைப்பிடி ஜனங்களாய் இருந்தாலும் யெகோவாவின் நாமத்திலே புறப்பட்டுச் செல்வது நம்முடைய கடமையாகும், ஏனெனில் சேனைகளின் கர்த்தரே நமக்கு அதிபதியாக நம்மோடு இருக்கிறார். அவர்கள் கேடயத்தையும், பட்டயத்தையும், வில்லையும் அலட்சியம் செய்யவில்லை, அதே சமயம் அவர்கள் அந்த ஆயுதங்களின் மேல் தங்களின் நம்பிக்கையை வைக்கவும் இல்லை; நாம் ஏற்ற எல்லா வழிகளையும் பயன்படுத்த வேண்டும், ஆனால் நம்முடைய நம்பிக்கை கர்த்தர் மேல் மாத்திரமே இருக்க வேண்டும், ஏனெனில் அவரே தமது ஜனங்களின் கேடயமும் பட்டயமுமாய் இருக்கிறார் (). அவர்களுடைய அசாதாரணமான வெற்றிக்குரிய மாபெரும் காரணம், "அந்த யுத்தம் தேவனால் நடத்தப்பட்டது" என்ற உண்மையிலேயே அடங்கியிருந்தது. பிரியமானவர்களே, வெளியிலும் உள்ளேயும் உள்ள பாவத்தோடும், உபதேச ரீதியான அல்லது நடைமுறை ரீதியான தவறுகளோடும், உன்னதங்களிலுள்ள அல்லது தாழ்விடங்களிலுள்ள ஆவிக்குரிய பொல்லாத தனங்களோடும், பிசாசுகளோடும் பிசாசின் கூட்டாளிகளோடும் யுத்தம் செய்யும்போது, நீங்கள் யெகோவாவின் யுத்தத்தையே நடத்துகிறீர்கள், அவர் தோற்கடிக்கப்பட முடிந்தாலொழிய, நீங்கள் தோல்வியைக் குறித்துப் பயப்பட வேண்டியதில்லை. உங்களை விட அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களைக் கண்டு நடுங்காதீர்கள், கஷ்டங்கள் அல்லது கூடாத காரியங்களைக் கண்டு பின்வாங்காதீர்கள், காயங்கள் அல்லது மரணத்தைக் கண்டு அஞ்சாதீர்கள், ஆவியின் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தினால் வெட்டுங்கள், அப்போது வெட்டுண்டவர்கள் குவியல் குவியலாய் விழுவார்கள். யுத்தம் கர்த்தருடையது, அவர் சத்துருக்களை நம்முடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார். ஸ்திரமான பாதத்தோடும், பலத்த கரத்தோடும், அஞ்சாத இருதயத்தோடும், எரியும் வைராக்கியத்தோடும் போராட்டத்திற்குள் பாய்ந்து செல்லுங்கள், அப்போது தீமையின் சேனைகள் பெருங்காற்றுக்கு முன் பதரைப் போல ஓடிப்போகும்.

எழும்புங்கள்! இயேசுவுக்காக எழும்புங்கள்! போராட்டம் நீண்டதாயிராது; இன்று யுத்தத்தின் சத்தம், நாளை வெற்றியாளனின் சங்கீதம்: ஜெயங்கொள்ளுகிறவனுக்கு, ஜீவகிரீடம் உண்டாயிருக்கும்; அவன் மகிமையின் ராஜாவோடு நித்தியமாய் அரசாளுவான்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.