JUN 08 EVENING

எண்ணாகமம் 11:23

அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.

எண்ணாகமம் 11:23

அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"என் வார்த்தை நிறைவேறுகிறதோ இல்லையோ என்று நீ இப்பொழுது காண்பாய் என்றார்" (). ஒரு மாதம் முழுவதற்கும் வனாந்தரத்திலுள்ள அந்த உன்னதமான மாபெரும் சேனையை மாம்சத்தினால் போஷிப்பதாகத் தேவன் மோசேக்கு ஒரு திட்டவட்டமான வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருந்தார். மோசே, அவிசுவாசத்தின் உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டவராய், வெளிப்புற வழிகளை நோக்கிப் பார்த்து, இந்த வாக்குத்தத்தம் எப்படி நிறைவேறும் என்று அறியாமல் திகைத்து நின்றான். அவர் சிருஷ்டிகரை நோக்காமல் சிருஷ்டியை நோக்கினார். ஆனால் சிருஷ்டிகர் தன் வாக்குத்தத்தத்தைத் தமக்காக நிறைவேற்றச் சிருஷ்டியை எதிர்பார்க்கிறாரா? இல்லை; வாக்குத்தத்தம் பண்ணுகிற அவரே தமது சொந்த உதவியற்ற சர்வவல்லமையினால் அதை நிறைவேற்றுகிறார். அவர் பேசினால் அது ஆகும்—அவராலேயே ஆகும். அவருடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேற மனிதனுடைய அற்பமான பலத்தின் ஒத்துழைப்பு தேவையில்லை. மோசே செய்த தவற்றை நம்மால் உடனே புரிந்துகொள்ள முடிகிறது. என்றாலும் நாமும் எவ்வளவு வழக்கமாய் அதையே செய்கிறோம்! நம்முடைய தேவைகளைச் சந்திப்பதாகத் தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், தேவன் செய்ய வாக்குத்தத்தம் பண்ணியதைச் செய்ய நாம் சிருஷ்டியை நோக்கிப் பார்க்கிறோம்; பின்பு, சிருஷ்டி பலவீனமானதாகவும் பலமற்றதாகவும் இருப்பதை நாம் காணும்போது, அவிசுவாசத்திற்கு இடம் கொடுத்துவிடுகிறோம். நாம் ஏன் அந்தப் பக்கமே பார்க்க வேண்டும்? வெயிலில் பழுத்த கனிகளைச் சேகரிக்க வட துருவத்தை நோக்கிப் பார்ப்பாயா? மெய்யாகவே, நீ பலவீனமானவனிடம் பலத்தைத் தேடும்போதும், சிருஷ்டிகரின் வேலையைச் செய்யச் சிருஷ்டியை நோக்கிப் பார்க்கும்போதும் இதைவிட அறிவீனமாய் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அப்படியானால், நாம் இந்தக் கேள்வியை சரியான அஸ்திபாரத்தின் மேல் வைப்போம். விசுவாசத்தின் ஆதாரம் வாக்குத்தத்தம் நிறைவேறக் கண்ணுக்குத் தெரியும் வழிகளின் தகுதி அல்ல, மாறாகத் தான் சொன்னபடியே நிச்சயமாகச் செய்து முடிக்கும் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய சர்வவல்லமையே ஆகும். பொறுப்பு சிருஷ்டியின் மேல் அல்ல, கர்த்தரின் மேல்தான் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் கண்ட பின்பும் நாம் சந்தேகத்திற்கு இடம் கொடுக்கத் துணிந்தால், தேவனுடைய கேள்வி நமக்கு நேராகவே வருகிறது: "கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ?" அவருடைய இரக்கத்தினாலே, அந்தக் கேள்வியோடு கூட, "என் வார்த்தை நிறைவேறுகிறதோ இல்லையோ என்று நீ இப்பொழுது காண்பாய்" என்ற ஆசீர்வதிக்கப்பட்ட பிரகடனம் நம்முடைய ஆத்துமாக்களுக்குள் பிரகாசிப்பதாக.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.