"அவர் முதலாவது மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார், அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார்" (). மகதலேனா மரியாள் பயங்கரமான ஒரு தீமையினால் பாதிக்கப்பட்டவளாய் இருந்தாள். அவள் ஒரே ஒரு பிசாசினால் மாத்திரமல்ல, ஏழு பிசாசுகளினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தாள். பயங்கரமான இந்த வாசஸ்தலத்தார்கள் அவள் தங்கியிருந்த ஏழையான சரீரத்திற்கு மிகுந்த வேதனையையும் அசுத்தத்தையும் உண்டாக்கினார்கள். அவளுடையது நம்பிக்கையற்ற, பயங்கரமான சூழ்நிலையாய் இருந்தது. அவளால் தனக்குத்தானே துணைசெய்ய முடியாமல் இருந்தது, எந்த ஒரு மானிட உதவியினாலும் பிரயோஜனம் இருக்கவில்லை. ஆனால் இயேசு அந்த வழியாய்க் கடந்து சென்றார், தேடப்படாமலும், ஏன் அந்தப் பிசாசு பிடித்தவளினால் எதிர்த்து நிற்கப்பட்டும், அவர் வல்லமையுள்ள வார்த்தையை உச்சரித்தார், மகதலேனா மரியாள் இயேசுவின் குணமாக்கும் வல்லமையின் வெற்றிச் சின்னமாய் மாறினாள். ஏழு பிசாசுகளும் அவளை விட்டு அகன்றன, ஒருபோதும் திரும்பி வராதபடிக்கு அகன்றன, எல்லாரிலும் கர்த்தரால் பலவந்தமாய் வெளியேற்றப்பட்டன. எப்பேர்ப்பட்ட பாக்கியமான விடுதலை! எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியான மாற்றம்! பைத்தியக்காரத்தனத்திலிருந்து பேரின்பத்திற்கு, திகைப்பிலிருந்து சமமாத்திற்கு, நரகத்திலிருந்து பரலோகத்திற்கு! உடனே அவள் இயேசுவை மாறாமல் பின்தொடருகிறவளாய் மாறினாள், அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் பற்றிக்கொண்டு, அவருடைய கடினமான பாதைகளைப் பின்தொடர்ந்து, அவருடைய பிரயாசமான வாழ்க்கையில் பங்கெடுத்தாள்; எல்லாவற்றிற்கும் மேலாக, தன் ஆஸ்தியினாலே அவருக்கு ஊழியஞ்செய்த குணமடைந்த, நன்றியுள்ள ஸ்திரீகளின் கூட்டத்தில் முதலாவது நின்ற தாராள குணமுள்ள உதவியாளராய் மாறினாள் (). இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்ட போது, மரியாள் அவருடைய அவமானத்தில் பங்கெடுப்பவளாய் நிலைத்திருந்தாள்: அவளை முதலில் தூரத்திலிருந்து நோக்குகிறவளாகவும், பின்பு சிலுவையின் பாதப்படியில் அருகில் வருகிறவளாகவும் காண்கிறோம் (). இயேசுவோடு கூட அவளால் சிலுவையில் மரிக்க முடியாமல் போயிருக்கலாம், ஆனால் அவளால் இயன்றவரை அதற்கு அருகில் நின்றாள், அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட சரீரம் இறக்கப்பட்ட போது, அது எவ்வாறு எங்கே வைக்கப்படுகிறது என்பதைக் கவனிக்கக் காத்திருந்தாள். அவள் உண்மையுள்ள மற்றும் விழிப்புள்ள விசுவாசியாய் இருந்தாள், இயேசு உறங்கின கல்லறையில் பிந்தியவளாயும், அவர் உயிர்த்தெழுந்த கல்லறையில் முந்தினவளாயும் இருந்தாள். அவளுடைய பரிசுத்தமான உத்தமத்தன்மை, அவளுடைய பிரியமான ரபூனிக்கு அவளை விசேஷித்த தரிசனமுள்ளவளாக மாற்றியது, அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கவும், நடுங்குகிற சீஷர்களுக்கும் பேதுருவுக்கும் நற்செய்தியைக் கொண்டு செல்லும் தன் தூதுவியாக அவளை மாற்றவும் சித்தமானார். இவ்விதமாய் கிருபை அவளை ஒரு பைத்தியக்காரியாய்க் கண்டு ஒரு ஊழியக்காரியாய் மாற்றியது, பிசாசுகளைத் துரத்தித் தூதர்களைத் தரிசிக்கச் செய்தது, சாத்தானிடமிருந்து விடுவித்து கர்த்தராகிய இயேசுவோடு என்றென்றைக்குமாய் இணைத்தது. நானும் அத்தகைய கிருபையின் அற்புதமாய் இருப்பேனாக!
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.