JUN 09 MORNING

சங்கீதம் 126:3

கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.

சங்கீதம் 126:3

கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"கர்த்தர் நமக்குரிய பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்" (). சில கிறிஸ்தவர்கள் எல்லாவற்றிலும் அந்தகாரமான பக்கத்தையே பார்க்கவும், தேவன் தங்களுக்குச் செய்தவைகளைக் காட்டிலும் தாங்கள் கடந்து வந்தவைகளைப் பற்றியே அதிகமாய் தியானிக்கவும் விசனகரமான சுபாவத்தைக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய அவர்களுடைய உணர்வைக் கேட்டால், தங்களின் மாறாத போராட்டங்கள், ஆழமான உபத்திரவங்கள், விசனகரமான இக்கட்டுகள் மற்றும் தங்களின் இருதயங்களின் தீமைகளைப் பற்றியே விவரிப்பார்கள், ஆனால் தேவன் தங்களுக்குக் கட்டளையிட்ட இரக்கத்தையும் உதவியையும் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டார்கள். ஆனால் தன் ஆத்துமா ஆரோக்கியமான நிலையில் இருக்கும் ஒரு கிறிஸ்தவனோ, சந்தோஷமாய் முன்வந்து, "நான் என்னைப் பற்றி அல்ல, என் தேவனுடைய கனத்திற்காகப் பேசுவேன். அவர் என்னைப் பயங்கரமான குழியிலும் இருகின களிமண்ணிலுமிருந்து தூக்கிஎடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் நடைகளை ஸ்திரப்படுத்தினார்: அவர் நம்முடைய தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை என் வாயிலே கொடுத்தார். கர்த்தர் எனக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார், இதினிமித்தம் நான் மகிழ்ந்திருக்கிறேன்" () என்பான். தேவனுடைய பிள்ளை எவனும் சமர்ப்பிக்கக் கூடிய மிகச் சிறந்த அனுபவத்தின் சுருக்கம் இதுவே ஆகும். நாம் சோதனைகளைச் சகிப்பது உண்மைதான், ஆனால் அவைகளிலிருந்து நாம் மீட்கப்படுகிறோம் என்பதும் அவ்வளவு உண்மைதானே. நமக்குள்ளே சீர்கேடுகள் இருப்பது உண்மைதான், துக்கத்தோடு நாம் இதை அறிவோம், ஆனால் அந்தச் சீர்கேடுகளை மேற்கொண்டு, அவைகளின் ஆளுகையிலிருந்து நம்மை விடுவிக்கும் ஒரு சர்வவல்லமையுள்ள இரட்சகர் நமக்கு இருக்கிறார் என்பதும் உண்மைதானே. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, நாம் திகைப்பின் சதுப்பு நிலத்தில் இருந்தோம் என்பதையோ, தாழ்மையின் பள்ளத்தாக்கில் தட்டுத்தடுமாறி நடந்தோம் என்பதையோ மறுப்பது தவறாகும், ஆனால் அவைகளைக் கடந்து நாம் பத்திரமாகவும் பிரயோஜனமாகவும் வந்திருக்கிறோம் என்பதை மறந்துவிடுவது அவ்வளவு கொடிய பாவமாகும்; நம்மை "விசாலமான இடத்திலே" கொண்டுவந்த நம்முடைய சர்வவல்லமையுள்ள உதவியாளருக்கும் தலைவருக்கும் ஸ்தோத்திரம், நாம் அவைகளுக்குள்ளே தங்கிவிடவில்லை (). நம்முடைய உபத்திரவங்கள் ஆழமாய் இருக்க இருக்க, அவைகள் எல்லாவற்றிலிருந்தும் நம்மை நடத்தி, இந்நாள் வரை நம்மைக் காத்த தேவனுக்கு நம்முடைய நன்றியறிதலின் சத்தம் அவ்வளவு உரத்ததாய் இருக்கும். நம்முடைய துக்கங்கள் நம்முடைய துதியின் ராகத்தைக் கெடுத்துவிட முடியாது, அவைகளை நம்முடைய வாழ்க்கைச் சங்கீதத்தின் சுருதியாகவே நாம் கணக்கிடுகிறோம், "கர்த்தர் நமக்குரிய பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.