" பாவங்களை மன்னிக்கப் மனுஷகுமாரனுக்குப் பூமியிலே அதிகாரம் உண்டு" (). மகா பெரிய வைத்யரின் பராக்கிரமமுள்ள விசித்திரங்களில் ஒன்றைப் பாருங்கள்: பாவங்களை மன்னிக்க அவருக்கு அதிகாரம் உண்டு! மீட்புக் கிரயம் செலுத்தப்படுவதற்கு முன், இரத்தம் லேசாகக்கூடக் கிருபாசனத்தின் மேல் தெளிக்கப்படுவதற்கு முன், அவர் இங்கே கீழே வாழ்ந்த போது பாவங்களை மன்னிக்க அவருக்கு அதிகாரம் இருந்தது. அவர் மரித்துவிட்ட தற்காலத்தில் அதைச் செய்ய அவருக்கு அதிகாரம் இராதா? தன் ஜனங்களின் கடன்களைக் கடைசிச் சல்லி வரை உண்மையாய் தீர்த்துவிட்ட அவரிடம் எப்பேர்ப்பட்ட அதிகாரம் குடிகொண்டிருக்க வேண்டும்! அவர் மீறுதலை ஒழித்து, பாவத்தைச் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கும் இக்காலத்தில் அவரிடம் எல்லையற்ற அதிகாரம் உண்டு (). நீ அதைச் சந்தேகப்பட்டால், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவதைப் பார்! மகிமையேறி தேவனுடைய வலதுபாரசத்திற்கு உயர்த்தப்படுவதைப் பார்! நித்திய பிதாவிற்கு முன்பாக அவர் பரிந்துபேசுவதையும், தன் காயங்களைச் சுட்டிக்காட்டி, தன் பரிசுத்த பாடுகளின் புண்ணியத்தை வற்புறுத்துவதையும் கேள்! பாவங்களை மன்னிக்க எப்பேர்ப்பட்ட அதிகாரம் இங்கே இருக்கிறது! "அவர் உன்னதத்திற்கு ஏறி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்" (). "பாவமன்னிப்பையும் மனந்திரும்புதலையும் அருளுவதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுபாரத்தினாலே உயர்த்தினார்" (). மகா இரத்தாம்பரமான பாவங்களும் அவருடைய இரத்தத்தின் இரத்தாம்பரத்தினாலே நீக்கப்படுகின்றன. இந்த கணத்தில், பிரியமான வாசகரே, உன்னுடைய பாவத்தன்மை எதுவாயிருந்தாலும், மன்னிப்பதற்கு கிறிஸ்துவுக்கு அதிகாரம் உண்டு, உன்னையும் உன்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கானவர்களையும் மன்னிக்க அதிகாரம் உண்டு. ஒரே ஒரு வார்த்தை அதைப் பேசிவிடும். உன்னுடைய மன்னிப்பைச் சம்பாதிக்க அவர் வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை; பாவநிவிர்த்தியின் கிரியை யாவும் முடிந்தது. உன்னுடைய கண்ணீருக்குப் பதிலpluralாக, அவர் உன்னுடைய பாவங்களை இன்று மன்னிக்க முடியும், அதை நீ அறியவும் செய்ய முடியும். உன்னுடைய திரளான அக்கிரமங்களின் பூரண மன்னிப்பிலிருந்து புறப்படும், சகல புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை இந்த கணத்திலேயே உன்னுடைய ஆத்துமாவிற்குள் அவர் சுவாசிக்கச் செய்ய முடியும் (). நீ அதை விசுவாசிக்கிறாயா? நீ அதை விசுவாசிக்கிறாய் என்று நம்புகிறேன். பாவங்களை மன்னிக்க இயேசுவுக்கு இருக்கும் அதிகாரத்தை நீ இப்போதே அநுபவிப்பாயாக! ஆத்துமாக்களின் வைத்யரிடம் விண்ணப்பம் செய்வதில் நேரத்தை வீணாக்காதே, மாறாக இத்தகைய வார்த்தைகளோடு அவரிடம் விரைந்து செல்:--
"இயேசுவே! எஜமானரே! என் கூப்பிடுதலைக் கேளும்; ஒரே வார்த்தையினால் என்னை இரட்சியும், குணமாக்கும்; உமது பாதப்படியில் சோர்ந்து கிடக்கிறேன், என் அந்தரங்கக் கூப்பிடுதலை நீர் கேட்டீர்."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.