AUG 11 EVENING

2 தெசலோனிக்கேயர் 2:16

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,

2 தெசலோனிக்கேயர் 2:16

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நித்திய ஆறுதலையும்" (). "ஆறுதல்." இந்த வார்த்தையிலேயே இசை இருக்கிறது: தாவீதின் சுரமண்டலத்தைப் போல, அது சலிப்பின் தீய ஆவியை விரட்டுகிறது (). பர்னபாஸ் "ஆறுதலின் மகன்" என்று அழைக்கப்பட்டது அவனுக்குரிய விசேஷித்த கனமாய் இருந்தது (); ஆமாம், அது பர்னபாஸைக் காட்டிலும் பெரியவருக்குரிய புகழ்பெற்ற நாமங்களில் ஒன்றாய் இருக்கிறது, ஏனெனில் கர்த்தராகிய இயேசுவே "இஸ்ரவேலின் ஆறுதலாயிருக்கிறார்" (). "நித்திய ஆறுதல்"—இங்கே தான் எல்லாவற்றின் சாரமும் இருக்கிறது, ஏனெனில் ஆறுதலின் நித்தியத்தன்மையே அதனுடைய கிரீடமும் மகிமையுமாய் இருக்கிறது. இந்த "நித்திய ஆறுதல்" என்றால் என்ன? அது மன்னிக்கப்பட்ட பாவத்தைப் பற்றிய உணர்வை உள்ளடக்குகிறது. ஒரு கிறிஸ்தவ மனிதன் தன் அக்கிரமங்கள் மேகத்தைப் போலவும், தன் மீறுதல்கள் கார்மேகத்தைப் போலவும் நீக்கப்பட்டுவிட்டன என்ற ஆவியானவரின் சாட்சியைத் தன் இருதயத்தில் பெற்றிருக்கிறான் (). பாவம் மன்னிக்கப்பட்டால், அது நித்திய ஆறுதல் அல்லவா? அடுத்தபடியாக, கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்ற மாறாத உணர்வைக் கர்த்தர் தமது ஜனங்களுக்குத் தருகிறார். தேவன் தம்மை இயேசுவோடான ஐக்கியத்தில் நிற்பவனாக நோக்குகிறார் என்பதைச் கிறிஸ்தவன் அறிவான். உயிர்த்தெழுந்த கர்த்தருடனான ஐக்கியம் என்பது மகா மாறாத ஆறுதலாய் இருக்கிறது; அது மெய்யாகவே நித்தியமானது. வியாதிகள் நம்மைப் பலவீனப்படுத்தினாலும், ஆரோக்கியமான சரீரத்தின் பெலனில் எப்படி இருப்பார்களோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வியாதியின் பலவீனத்திலும் இருக்கும் நூற்றுக்கணக்கான விசுவாசிகளை நாம் கண்டதில்லையா? மரணத்தின் அம்புகள் நம்முடைய இருதயத்தை ஊடுருவினாலும் நம்முடைய ஆறுதல் மடிவதில்லை, ஏனெனில் மரிக்கும் தருணங்களிலும் தேவனுடைய ஜீவனுள்ள அன்பு தங்களின் இருதயங்களில் ஊற்றப்பட்டபடியால் பரிசுத்தவான்கள் மகிழ்ந்து பாடின பாடல்களை நம்முடைய காதுகள் பலமுறை கேட்டிருக்கின்றன அல்லவா? ஆம், பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்ற உணர்வு ஒரு நித்திய ஆறுதலாகும். அதுமட்டுமல்ல, கிறிஸ்தவனுக்குத் தன் பாதுகாப்பைப் பற்றிய பூரண நிச்சயம் உண்டு. கிறிஸ்துவை நம்புகிறவர்களை இரட்சிப்பதாகத் தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்: கிறிஸ்தவன் கிறிஸ்துவை நம்புகிறான், தேவன் தன் வார்த்தையின்படியே நன்மை செய்து தன்னை இரட்சிப்பார் என்று அவன் விசுவாசிக்கிறான். இயேசுவின் ஆளுமையோடும் கிரியையோடும் தான் பிணைக்கப்பட்டிருப்பதினாலே தான் பத்திரமாய் இருப்பதை அவன் உணருகிறான்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.