JUL 11 EVENING

யோவேல் 1:3

இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.

யோவேல் 1:3

இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"இதைப்பற்றி நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்; உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், பின்வரும் சந்ததியாருக்கும் சொல்லக்கடவர்கள்" (). இந்த எளிய முறைமையினாலே, தேவனுடைய கிருபையினால், சத்தியத்திற்கான ஒரு ஜீவனுள்ள சாட்சி எப்போதுமே தேசத்தில் உயிரோடிருக்க வேண்டும்—கர்த்தருக்குப் பிரியமானவர்கள் தங்களின் வாரிசுகளுக்கு நற்செய்தியையும் உடன்படிக்கையையும் குறித்த தங்களின் சாட்சியை ஒப்புவிக்க வேண்டும், அவர்கள் தங்களின் அடுத்த சந்ததியாருக்கு அதை ஒப்புவிக்க வேண்டும். இதுவே நம்முடைய முதல் கடமையாய் இருக்கிறது, நாம் குடும்பத்தின் அடுப்பங்கரையிலிருந்தே தொடங்க வேண்டும்: தன் ஊழியத்தைத் தன் வீட்டிலிருந்து தொடங்காதவன் ஒரு நல்ல பிரசங்கி அல்ல. எல்லா வழிகளிலும் அந்நியர்களைத் தேட வேண்டும், தெருக்களிலும் வேலிகளிலும் தேட வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் வீட்டிற்கே முந்தின உரிமை உண்டு, கர்த்தருடைய முறைமைகளின் வரிசையை மாற்றுபவர்களுக்கு ஐயோ! (). நம்முடைய பிள்ளைகளுக்குப் போதிப்பது ஒரு தனிப்பட்ட கடமையாய் இருக்கிறது; அதை நாம் ஓய்வுநேரப் பள்ளி ஆசிரியர்களிடமோ அல்லது மற்ற சிநேகிதர்களிடமோ ஒப்புவித்துவிட முடியாது; அவர்கள் நமக்கு உதவி செய்யலாமே தவிர, பரிசுத்தமான இந்த உத்தமக் கடமையிலிருந்து நம்மைக் விடுவிக்க முடியாது; இந்த விஷயத்தில் மற்றவர்களைப் பொறுப்பாக்குவது பொல்லாத தந்திரமாய் இருக்கிறது: தாய்மார்களும் பிதாக்களும், ஆபிரகாமைப் போல, தங்களின் குடும்பத்தாரைத் தேவபயத்திற்குள் நடத்த வேண்டும், உன்னதமானவருடைய ஆச்சரியமான கிரியைகளைக் குறித்துத் தங்களின் பிள்ளைகளோடு பேச வேண்டும் (). பெற்றோர் போதிப்பது ஒரு சுபாவமான கடமையாய் இருக்கிறது—பிள்ளையின் நல்வாழ்வைக் கண்காணிக்க அவனுடைய சரீர ஜீவனுக்குக் காரணமாய் இருந்தவர்களைக் காட்டிலும் தகுதியானவர் யார்? நம்முடைய சந்ததியாரின் போதனையை அலட்சியம் செய்வது மிருகத்தனத்தைக் காட்டிலும் கொடியது. குடும்ப மதம் என்பது தேசத்திற்கும், குடும்பத்திற்கும், தேவனுடைய சபைக்கும் அவசியமான ஒன்றாய் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தந்திரங்களினாலே ரோம மார்க்கத்தின் அக்கிரமங்கள் நம் தேசத்தில் அந்தரங்கமாய் நுழைந்து கொண்டிருக்கின்றன, அதன் ஊடுருவல்களை எதிர்ப்பதற்கான மகா பயனுள்ள வழிகளில் ஒன்று அலட்சியம் பண்ணப்பட்டுக் கிடக்கிறது, அதுவே பிள்ளைகளுக்கு விசுவாசத்தைக் கற்பிப்பதாகும். பெற்றோர் இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து விழிப்படைவார்களானால் நலமாயிருக்கும். நம்முடைய குமாரர்களுக்கும் குமாரத்திகளுக்கும் இயேசுவைக் குறித்துப் பேசுவது இன்பமான கடமையாய் இருக்கிறது, பெற்றோர் ஏறெடுத்த ஜெபங்கள் மற்றும் புத்திமதிகளின் மூலமாகத் தேவன் பிள்ளைகளை இரட்சித்திருப்பதினால் அது பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கிரியையாய் இருக்கிறது. இந்த வேதாகமத்தின் தியானங்கள் பிரவேசிக்கும் ஒவ்வொரு இல்லமும் கர்த்தரைக் கனப்படுத்தி, அவருடைய புன்னகையைப் பெறுவதாக.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.