JUN 11 MORNING

1 யோவான் 4:19

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.

1 யோவான் 4:19

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவர் முந்தியே நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்" (). சூரியனிடமிருந்து புறப்படுகிற வெளிச்சத்தைத் தவிர கிரகங்களுக்கு வேறு வெளிச்சம் இல்லை; அப்படியே கர்த்தராகிய இயேசுவிடமிருந்து வருகிற அன்பைத் தவிர இருதயத்தில் இயேசுவின் மேல் உள்ள உண்மையான அன்பு வேறு ஒன்றும் இல்லை. தேவனுடைய எல்லையற்ற அன்பின் இந்த நிறைந்து வழியும் ஊற்றிலிருந்தே, தேவனிடத்தில் நாம் கொள்ளும் அன்பு முழுவதும் சுரக்க வேண்டும். அவர் முந்தியே நம்மிடத்தில் அன்புகூர்ந்த காரணத்தினாலேயே நாம் அவரிடத்தில் அன்புகூருகிறோம் என்பது எப்போதுமே ஒரு மாபெரும் மற்றும் உறுதியான சத்தியமாய் இருக்க வேண்டும். அவரிடத்தில் நாம் கொள்ளும் அன்பு, அவர் நம்மேல் வைத்த அன்பின் அழகான சந்ததியாகும். தேவனுடைய கிரியைகளை ஆராயும்போது குளிர்ச்சியான ஆச்சரியம் எவனுக்கும் உண்டாகலாம், ஆனால் அன்பின் உஷ்ணம் தேவனுடைய ஆவியினாலே மாத்திரமே இருதயத்தில் தூண்டப்பட முடியும். நம்மைக் போன்றவர்கள் இயேசுவினிடத்தில் அன்புகூரும்படி கொண்டுவரப்பட்டதே எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் ஆச்சரியம்! நாம் அவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தபோது, இத்தகைய ஆச்சரியமான அன்பை வெளிப்படுத்தி, அவர் நம்மைத் தம்மிடம் இழுத்துக்கொள்ளத் தேடினாரே, அது எவ்வளவு ஆச்சரியமானது! இல்லை! தேவனுடைய அன்பு என்னும் இனிமையான விதை நமக்குள்ளே விதைக்கப்பட்டாலொழிய, தேவனிடத்தில் நமக்கு ஒரு துளி அன்புகூட இருந்திருக்காது. அப்படியானால், இருதயத்தில் ஊற்றப்பட்ட தேவனுடைய அன்பே நம்முடைய அன்பிற்குத் தாயாய் இருக்கிறது: ஆனால் இவ்விதமாய் தெய்வீகமாய் பிறந்த பின்பு, அது தெய்வீகமாய் போஷிக்கப்படவும் வேண்டும். அன்பு என்பது ஒரு அந்நிய நாட்டுச் செடியாகும்; அது மனிதனுடைய மண்ணில் சுபாவமாய் வளரும் ஒரு செடி அல்ல, அது மேலேயிருந்து நனைக்கப்பட வேண்டும். இயேசுவின் மேல் உள்ள அன்பு மென்மையான சுபாவமுடைய ஒரு புஷ்பமாகும், நம்முடைய இருதயங்களாகிய கற்பாறையிலிருந்து உறிஞ்சக் கூடிய போஷாக்கைத் தவிர வேறு எதுவும் அதற்குப் பெறப்படாவிட்டால் அது சீக்கிரத்தில் வாடிவிடும். அன்பு பரலோகத்திலிருந்து வருவதால், அது பரலோக அப்பத்தையே புசிக்க வேண்டும். மேலேயிருந்து வரும் மன்னாவினால் போஷிக்கப்பட்டாலொழிய, வனாந்தரத்தில் அதினால் நிலைத்திருக்க முடியாது. அன்பு அன்பையே புசிக்க வேண்டும். தேவனிடத்தில் நாம் கொள்ளும் அன்பின் ஆவியும் ஜீவனுமாய் இருப்பது அவர் நம்மேல் வைத்த அன்பே ஆகும். "ஆண்டவரே, என் அன்பினால் அல்ல, உம்மில் அன்புகூருகிறேன், ஏனெனில் எனக்கென்று கொடுக்க ஒன்றுமில்லை; ஆண்டவரே, உம்மில் அன்புகூருகிறேன்; ஆனால் அந்த அன்பு முழுவதும் உம்முடையதே, ஏனெனில் உமது அன்பினாலேயே நான் பிழைக்கிறேன். நான் ஒன்றுமில்லாதவன், உமக்குள்ளே ஒழிந்துபோகவும், காணாமல் போகவும், முற்றிலும் விழுங்கப்படவும் மகிழ்கிறேன்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.