JUL 12 MORNING

1 கொரிந்தியர் 1:2

கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:

1 கொரிந்தியர் 1:2

கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"பிதாவாகிய தேவராலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாய்" (யூதா 1). "கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாய்" (). "ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே" (). மூவொரு தேவனுடைய சகல கிருபையின் கிரியைகளிலும் அவர்களுடைய பரிசுத்த இணைப்பைக் கவனித்துப் பாருங்கள். திரித்துவத்தின் ஆளுமைகளுக்குள் பிரிவினைகளை உண்டாக்குகிற விசுவாசிகள் எவ்வளவு புத்தியற்றவர்களாய் பேசுகிறார்கள்; அவர்கள் இயேசுவை மாத்திரம் எல்லாக் கிருபைகளுக்கும் அழகுகளுக்கும் காரணராக நினைக்கிறார்கள், பிதாவையோ கனிவே இல்லாத கொடூரமான நீதிபரராக மாத்திரம் நோக்குகிறார்கள். அப்படியே பிதாவின் தெரிந்துகொள்ளுதலையும் குமாரனின் பாவநிவிர்த்தியையும் மாத்திரம் பெரிதாக்கி, ஆவியானவரின் கிரியையை அற்பமாய் நடத்துகிறவர்களும் தவற்றில் இருக்கிறார்கள். கிருபையின் கிரியைகளில் திரித்துவத்தின் எந்த ஓர் ஆளுமையும் மற்றவர்களை விட்டுத் தனியாய் கிரியை செய்வதில்லை. அவர்கள் தங்களின் சுபாவத்தில் எப்படியோ அப்படியே தங்களின் செய்கைகளிலும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மேல் அவர்கள் வைக்கும் அன்பில் அவர்கள் ஒன்றாய் இருக்கிறார்கள், அந்த மாபெரும் மத்திய ஊற்றிலிருந்து பாயும் செயல்களிலும் அவர்கள் பிரிக்கப்படாதவர்களாய் இருக்கிறார்கள். பரிசுத்தமாக்கலின் விஷயத்தில் இதை விசேஷித்த விதத்தில் கவனித்துப் பாருங்கள். பரிசுத்தமாக்கலை ஆவியானவரின் கிரியை என்று நாம் தவற்றின்றிச் சொல்ல முடிந்தாலும், பிதாவிற்கும் குமாரனுக்கும் அதில் பங்கில்லை என்பது போல நாம் அதை நோக்கக் கூடாது. பரிசுத்தமாக்கலைப் பிதாவின் கிரியை, குமாரனின் கிரியை, மற்றும் ஆவியானவரின் கிரியை என்று சொல்வது சரியே. "நம்முடைய சாயலாகவும் நம்முடைய ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" () என்று யெகோவா இன்னும் சொல்லுகிறார், இவ்விதமாய் நாம் "நற்கிரியைகளைச் செய்கிறதற்குத் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, அவருடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி தேவன் அவைகளை முன்னதாக ஆயத்தம்பண்ணியிருக்கிறார்" (). திரித்துவத்தின் மூன்று ஆளுமைகளும் கறையற்ற, சுருக்கமற்ற, அல்லது அத்தகைய வேறு யாதொன்றுமில்லாத ஒரு சபையை உண்டாக்க உடன் உழைப்பதாக விவரிக்கப்பட்டிருப்பதிலிருந்து, தேவன் உண்மையான பரிசுத்தத்திற்கு எப்பேர்ப்பட்ட மதிப்பை வைத்திருக்கிறார் என்பதைப் பாருங்கள். கிறிஸ்துவின் சீஷனாகிய நீயும் பரிசுத்தத்திற்கும்—வாழ்க்கையின் தூய்மைக்கும் பக்திவிருத்தியின் பேச்சுக்கும் உன்னதமான மதிப்புத் தர வேண்டும். உன்னுடைய நம்பிக்கையின் அஸ்திபாரமாகிய கிறிஸ்துவின் இரத்தத்தை மதித்துப் போற்று, அதே சமயம் வெளிச்சத்திலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தின் பங்கிற்கு உன்னைத் தகுதியாக்குகிற பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒருபோதும் அற்பமாய் பேசாதே. மூவொரு தேவனுடைய கிரியைகள் நமக்குள்ளே வெளிப்படும்படி நாம் இந்த நாளில் ஜீவிப்போமாக.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.