"தமது பரம ராஜ்யத்துக்கு (heavenly kingdom - பரலோக ராஜ்யத்துக்கு) உட்படுத்த இரட்சிப்பார்" (). மகா பெரிய ராஜாவின் அந்த உன்னத நகரம் சுறுசுறுப்பான ஊழியத்தின் இடமாய் இருக்கிறது. மீட்டெடுக்கப்பட்ட ஆவிகள் அவருடைய ஆலயத்தில் இரவும் பகலும் அவருக்கு ஊழியம் செய்கிறார்கள் (வெளிப்படுத்துதல் 7:15). தங்களின் ராஜாவின் நல்விருப்பத்தை நிறைவேற்றுவதை அவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை. நிம்மதி மற்றும் கவலைகளற்ற விடுதலை ஆகிய காரியங்களைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே "இளைப்பாறுகிறார்கள்;" சோம்பல் அல்லது கிரியையற்ற தன்மை என்ற அர்த்தத்தில் அவர்கள் ஒருபோதும் "இளைப்பாறுவதில்லை." பொன்னான எருசலேம் என்பது தேவனுடைய சகல ஜனங்களோடும் கொள்ளும் ஐக்கியத்தின் இடமாய் இருக்கிறது. நாம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுகளோடு நித்திய ஐக்கியத்தில் உட்காருவோம் (). தன் அன்பினாலும் தன் பராக்கிரமமுள்ள புயத்தினாலும் தங்களைப் பத்திரமாய் வீட்டிற்குள் சேர்த்தவருடன் அரசாளும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் உன்னதச் சேனையோடு நாம் மாபெரும் உரையாடல்களைக் கொண்டிருப்போம். நாம் தனித்தனியாகப் பாடாமல், ஒரே கூட்டமாய் நம்முடைய ராஜாவைத் துதித்துப் பாடுவோம். பரலோகம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்ட ஜெயத்தின் இடமாய் இருக்கிறது. கிறிஸ்தவனே, உன்னுடைய இச்சைகளின் மேல் நீ எப்போதெல்லாம் ஜெயத்தைப் பெறுகிறாயோ—கடுமையான போராட்டத்திற்குப் பின் எப்போதெல்லாம் ஒரு சோதனையை உன்னுடைய பாதப்படியில் மடியச் செய்கிறாயோ—அந்த மணிநேரத்தில், கர்த்தர் சாத்தானைச் சீக்கிரத்தில் உன்னுடைய கால்களின் கீழ் மிதிக்கப் போகும் அந்த நாளின், நீ உன்னில் அன்புகூர்ந்தவராலே முற்றும் ஜெயங்கொள்ளப் போகும் அந்த நாளின் பேரின்பத்தின் ஒரு கீற்றை நீ பெற்றிருக்கிறாய் (). பரதீஸ் என்பது பாதுகாப்பின் இடமாய் இருக்கிறது. விசுவாசத்தின் பூரண அச்சாரத்தை நீ அநுபவிக்கும் போது, பரலோக எருசலேமின் பூரண குடியாக நீ பெறப்போகும் அந்த மகிமையான பாதுகாப்பின் பணையத்தை நீ பெற்றிருக்கிறாய். ஓ என் இனிய இல்லமே, எருசலேமே, என் ஆவியின் பாக்கியமான புகலிடமே! உனக்காக என்னை ஏங்கச் செய்த அவருடைய அன்பிற்கு இப்போதே ஸ்தோத்திரம்; நான் உன்னைச் சுதந்தரித்துக் கொள்ளும் போது நித்தியத்தில் இன்னும் உரத்த ஸ்தோத்திரம் உண்டாகும்.
"என் ஆத்துமா திராட்சைப்பழங்களைச் சுவைத்திருக்கிறது, இப்போது அது புறப்பட்டுப் போக வாஞ்சிக்கிறது என் அன்பான கர்த்தர் தன் திராட்சத்தோட்டத்தைக் காக்கும் இடத்திற்கு, அங்கே எல்லா குலைகளும் வளருகின்றன.
உண்மையான ஜீவனுள்ள திராட்சச்செடியின் மேல், என் பசியுள்ள ஆத்துமா விருந்துண்ண விரும்புகிறது, தெய்வீகக் கனியைக் கொண்டு பந்தியிருக்க விரும்புகிறது, நித்திய விருந்தினனாக."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.