JUL 13 MORNING

யோனா 4:9

அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.

யோனா 4:9

அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

தேவன் யோனாவை நோக்கி: "நீ... கோபமாயிருக்கிறது நலமாயிருக்குமோ என்றார்" (). கோபம் என்பது எப்போதுமே அல்லது சுபாவமாகவே பாவமானது அல்ல, ஆனால் அது வரம்புகளை மீறி ஓடும் மகா பெரிய சுபாவத்தைக் கொண்டிருப்பதால், அது வெளிப்படும் போதெல்லாம், "நீ கோபமாயிருப்பது நலமாயிருக்குமோ?" என்ற கேள்வியினாலே நாம் அதனுடைய சுபாவத்தை உடனே சோதித்துப் பார்க்க வேண்டும். நாம், "ஆம்," என்று பதிலளிக்கக் கூடிய சூழ்நிலைகளும் இருக்கலாம். பெரும்பாலும் கோபம் என்பது மூடனின் கள்ள நெருப்பாய் இருக்கிறது, ஆனால் சில நேரங்களில் அது எலியாவின் பரலோக அக்கினியாயும் இருக்கிறது (1 இராஜாக்கள் 18). நன்மையும் கிருபையுமுள்ள நம்முடைய தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்யும் அநியாயத்தினிமித்தம் நாம் பாவத்தின் மேல் கோபப்படும்போது; அல்லது இவ்வளவு தெய்வீகப் போதனைகளைப் பெற்ற பின்பும் நாம் இன்னும் மதியற்றவர்களாய் இருப்பதற்காக நம்மேலேயே கோபப்படும்போது; அல்லது மற்றவர்கள் செய்யும் தீமையே நம் கோபத்திற்குக் காரணமாய் இருக்கும்போது நாம் நலமாய்ச் செய்கிறோம். அக்கிரமத்தைக் கண்டு கோபப்படாதவன் அதில் பங்காளியாகிறான். பாவம் என்பது அருவருப்பான மற்றும் வெறுக்கத்தக்க காரியமாய் இருக்கிறது, புதிதாக்கப்பட்ட இருதயம் எதுவும் அதைப்பொறுமையோடு சகித்திருக்க முடியாது. தேவன் நாடோறும் துன்மார்க்கர்மேல் சினமடைகிறார் (), அவருடைய வார்த்தையில், "கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்" () என்று எழுதியிருக்கிறது. ஆனால், பெரும்பாலும் நம்முடைய கோபம் மெச்சத்தக்கதாகவோ அல்லது நியாயமானதாகவோ இருப்பதில்லை என்று பயப்பட வேண்டியிருக்கிறது, அப்போது நாம், "இல்லை," என்றே பதிலளிக்க வேண்டும். பிள்ளைகளிடத்தில் நாம் ஏன் எரிச்சலடைய வேண்டும், வேலைக்காரர்களிடத்தில் ஏன் சினமடைய வேண்டும், தோழர்களிடத்தில் ஏன் கோபப்பட வேண்டும்? அத்தகைய கோபம் நம்முடைய கிறிஸ்தவ அறிக்கைக்கேற்ற கனத்தைத் தருகிறதா, அல்லது தேவனை மகிமைப்படுத்துகிறதா? அது நம்முடைய பழைய தீய இருதயம் நம்மேல் ஆளுகை செய்யத் தேடும் வழியல்லவா, அதை நம்முடைய புதிய சுபாவத்தின் முழு பலத்தோடும் நாம் எதிர்க்க வேண்டும் அல்லவா? அநேக வேஷக்காரர்கள் அதை எதிர்ப்பது வீண் என்பது போலத் தங்களின் கோபத்திற்கு இடம் கொடுத்துவிடுகிறார்கள்; ஆனால் விசுவாசி ஒவ்வொரு காரியத்திலும் ஜெயங்கொள்ளுகிறவனாய் இருக்க வேண்டும், இல்லையென்றால் அவனுக்குக் கிரீடம் சூட்டப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ளட்டும். நம்முடைய கோபங்களை நம்மால் அடக்க முடியாவிட்டால், கிருபை நமக்குள்ளே என்னதான் செய்தது? தேவனுடைய தாசன் கிருபை பெரும்பாலும் காட்டு மரத்தின் மேல் ஒட்டவைக்கப்படுகிறது என்று ஒருவரிடம் சொன்னார். "ஆம்," என்றார் அவர், "ஆனால் அதிலிருந்து காட்டுக்கனிகள் உண்டாகாது." நாம் நம்முடைய சுபாவமான பலவீனத்தைப் பாவத்திற்குச் சாக்குப்போக்காக மாற்றக் கூடாது, மாறாகச் சிலுவையண்டை ஓடி, நம்முடைய கோபங்களைச் சிலுவையில் அறையவும், அவருடைய சாயலின்படியே கனிவிலும் சாந்த குணத்திலும் நம்மைக் புதிதாக்கவும் கர்த்தரை வேண்டிக்கொள்ள வேண்டும்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.