JUL 13 EVENING

சங்கீதம் 56:9

நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.

சங்கீதம் 56:9

நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்திலிருக்கிறார் என்பதை அறிவேன்" (). "தேவன் என் பட்சத்திலிருக்கிறார்" என்ற இந்த இன்பமான வாக்கியத்தின் முழுப் பொருளையும் விவரிக்க எந்த ஒரு மானிட பேச்சினாலும் கூடாது. உலகம் உண்டாவதற்கு முன்னே அவர் "நம்முடைய பட்சத்தில்" இருந்தார்; அவர் தமது பிரியமான குமாரனைத் தந்திருக்காவிட்டால் அவர் "நம்முடைய பட்சத்தில்" இருந்திருக்க மாட்டார்; அவர் ஒரேபேறானவரை அடித்து, தன் கோபாக்கினையின் முழு பாரத்தையும் அவர்மேல் சுமத்தின போதும் அவர் "நம்முடைய பட்சத்தில்" இருந்தார்—அவருக்கு விரோதமாய் இருந்த போதும் அவர் "நமக்காக" இருந்தார்; நாம் வீழ்ச்சியிலே பாழாய்க் கிடந்த போதும் அவர் "நம்முடைய பட்சத்தில்" இருந்தார்—அவர் எல்லாவற்றையும் தாண்டி நம்மைக் நேசித்தார்; நாம் அவருக்கு விரோதமாய்க் கலகக்காரர்களாய் இருந்து, உன்னதமான கரத்தோடு அவருக்கு விரோதமாய் நின்ற போதும் அவர் "நம்முடைய பட்சத்தில்" இருந்தார்; நம்மைக் தாழ்த்தி அவருடைய முகத்தைத் தேடும்படி அவர் நம்மை நடத்தாதிருந்தால் அவர் "நம்முடைய பட்சத்தில்" இருந்திருக்க மாட்டார். அநேகப் போராட்டங்களில் அவர் "நம்முடைய பட்சத்தில்" இருந்திருக்கிறார்; திரளான ஆபத்துகளைச் சந்திக்க நாம் அழைக்கப்பட்டோம்; வெளியிலும் உள்ளேயும் உள்ள சோதனைகளால் நாம் நெருக்கப்பட்டோம்—அவர் "நம்முடைய பட்சத்தில்" இராதிருந்தால் இந்நேரம் வரை நாம் சேதமில்லாமல் தப்பியிருக்க முடியுமா? அவர் உன்னதமான தன் சுபாவத்தோடும் "நம்முடைய பட்சத்தில்" இருக்கிறார்; தன் அன்பின் சர்வவல்லமையோடும்; தன் ஞானத்தின் பிழையற்ற தன்மையோடும்; தன் தெய்வீகப் பண்புகள் யாவோடும் அவர் "நமக்காக" இருக்கிறார்—நித்திய நித்திய காலமாய் மாறாத விதத்தில் "நம்முடைய பட்சத்தில்" இருக்கிறார்; நீல நிற வானங்கள் யாவும் பழைய வஸ்திரத்தைப் போலச் சுருட்டப்படும் போதும் அவர் "நமக்காக" இருப்பார் (); நித்திய காலம் முழுவதும் "நம்முடைய பட்சத்தில்" இருப்பார். அவர் "நம்முடைய பட்சத்தில்" இருக்கிறபடியால், ஜெபத்தின் சத்தம் எப்போதும் அவருடைய உதவியை நமக்கு உத்திரவாதப்படுத்தும். "நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்." இது ஏதோ நிச்சயமில்லாத நம்பிக்கை அல்ல, மாறாக நன்றாய் அஸ்திபாரமிடப்பட்ட உன்னதமான நிச்சயம்—"இதை அறிவேன்." நான் என் ஜெபத்தை உமக்கு நேராக ஆயத்தம் பண்ணி, பதிலுக்காக அண்ணாந்து பார்ப்பேன், பதில் வரும் என்றும், என் சத்துருக்கள் முறியடிக்கப்படுவார்கள் என்றும் உறுதியாய் நம்புவேன், "ஏனெனில் தேவன் என் பட்சத்திலிருக்கிறார்." ஓ விசுவாசியே, ராஜாதி ராஜா உன்னுடைய பட்சத்தில் இருக்க நீ எவ்வளவு பாக்கியசாலி! அத்தகைய பாதுகாவலரோடிருக்க நீ எவ்வளவு பத்திரமாய் இருக்கிறாய்! அத்தகைய வாதக்காரரால் உன்னுடைய வழக்கு வாதாடப்பட அது எவ்வளவு நிச்சயம்! தேவன் உன்னுடைய பட்சத்திலிருந்தால் உனக்கு விரோதமாய் இருப்பவன் யார்? ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.