JUN 13 MORNING

வெளிப்படுத்தின விசேஷம் 22:17

ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:17

ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்" (). இயேசு, "இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்" என்கிறார். அவர் எந்த ஒரு தொகையையோ அல்லது ஆயத்தத்தையோ எதிர்பார்ப்பதில்லை. நம்முடைய நற்பண்புகளிலிருந்து எந்த ஒரு சிபாரிசையும் அவர் தேடுவதில்லை. உங்களிடம் நல்ல உணர்வுகள் இல்லாவிட்டாலும், நீங்கள் விருப்பமுள்ளவர்களாய் மாத்திரம் இருந்தால், நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்; எனவே வாருங்கள்! உங்களிடம் விசுவாசமும் இல்லை, மனஸ்தாபமும் இல்லை,—அவரிடம் வாருங்கள், அவர் அவைகளை உங்களுக்குத் தருவார். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே வாருங்கள், பணமுமில்லாமல் விலையுமில்லாமல் "இலவசமாய்" பெற்றுக் கொள்ளுங்கள். தேவையுள்ளவர்களுக்கு அவர் தம்மைத்தாமே தருகிறார். நம்முடைய வீதிகளின் மூலைகளில் உள்ள தண்ணீர்க் குழாய்கள் விலையேறப்பெற்ற ஸ்தாபனங்களாகும்; ஒருவன் அதற்கு முன்பாக நின்று, தன் பணப்பையைத் தடவிப் பார்த்து, "என் பையில் ஐந்து பவுண்டு பணம் இல்லாததால் என்னால் குடிக்க முடியாது" என்று கதறுமளவிற்கு மூடனாய் இருப்பதை நம்மால் ஊகிக்க முடியாது. மனிதன் எவ்வளவு ஏழையாய் இருந்தாலும், அங்கே தண்ணீர் இருக்கிறது, அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே அதிலிருந்து குடிக்கலாம். தாகமுள்ள பிரயாணிகள் கடந்து செல்லும்போது, அவர்கள் கந்தையணிந்திருந்தாலும் சரி, அல்லது பளபளப்பான ஆடையணிந்திருந்தாலும் சரி, குடிப்பதற்கான எந்த ஒரு அனுமதியையும் தேடுவதில்லை; அது அங்கே இருக்கிறது என்ற உண்மையே அவர்கள் அந்தத் தண்ணீரை இலவசமாய்க் குடிப்பதற்கான அனுமதியாய் இருக்கிறது. சில நல்ல நண்பர்களின் தாராள குணம் புத்துணர்ச்சி தரும் அந்தப் பளிங்குத் தண்ணீரை அங்கே வைத்திருக்கிறது, நாமும் அதைக் குடித்துவிட்டு எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. தண்ணீர்க் குழாய் இருக்கும் வீதியில் தாகத்தோடு கடந்து செல்ல வேண்டியவர்கள், தங்களின் இரதங்களில் செல்லும் பிரபுக்களும் பிரபுத்திகளுமே ஆவர். அவர்கள் மிகுந்த தாகத்தோடிருக்கிறார்கள், ஆனால் குடிப்பதற்காகக் கீழே இறங்குவது ஏதோ அற்பமான காரியம் என்று நினைக்கிறார்கள். ஒரு சாதாரண தண்ணீர்க் குழாயில் குடிப்பது தங்களின் கனத்திற்குக் குறைவு என்று அவர்கள் நினைக்கிறார்கள்: எனவே வறண்ட உதடுகளோடு கடந்து செல்கிறார்கள். ஓ, தங்களின் சொந்த நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாய் இருப்பதினால் கிறிஸ்துவிடம் வர முடியாதவர்கள் எத்தனை பேர்! "வேசியைப் போலவோ அல்லது தூஷிக்கிறவனைப் போலவோ நான் இரட்சிக்கப்பட மாட்டேன்" என்கிறார்கள் அவர்கள். என்ன! ஒரு புகைபோக்கி கூட்டுபவனைப் போலவா பரலோகத்திற்குச் செல்வது? சிலுவையில் இருந்த கள்ளனை நடத்திய அதே பாதைதான் பரலோகத்திற்குச் செல்லும் ஒரே பாதையா? நான் அந்த வழியில் இரட்சிக்கப்பட மாட்டேன். அத்தகைய பெருமையான மேட்டிமைக்காரர்கள் ஜீவத்தண்ணீர் இல்லாமல் புறம்பே இருக்க வேண்டும்; ஆனால், "விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.