JUN 13 EVENING

நீதிமொழிகள் 30:8

மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.

நீதிமொழிகள் 30:8

மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"மாயையையும் பொய்வார்த்தைகளையும் எனக்குத் தூரப்படுத்தும்" (). "என் தேவனே, எனக்குத் தூரமாகாதிரும்" (). இங்கே நமக்கு இரண்டு மாபெரும் பாடங்கள் உண்டு—நாம் எதை வெறுத்து விலக்க வேண்டும், எதை நோக்கிக் கெஞ்ச வேண்டும் என்பதுவே அது. ஒரு கிருஸ்தவனின் மிகவும் மகிழ்ச்சியான நிலை அவனுடைய மிகவும் பரிசுத்தமான நிலையே ஆகும். சூரியனுக்கு மிக அருகில் அதிக உஷ்ணம் இருப்பது போல, கிறிஸ்துவுக்கு மிக அருகில் உன்னதமான மகிழ்ச்சி இருக்கிறது. ஒரு கிறிஸ்தவனுடைய கண்கள் வீணான காரியங்களின் மேல் நோக்கமாக இருக்கும்போது அவன் எந்த ஒரு ஆறுதலையும் அநுபவிப்பதில்லை—அவனுடைய ஆத்துமா தேவனுடைய வழிகளில் உயிர்ப்பிக்கப்பட்டாலொழிய அவன் எந்த ஒரு திருப்தியையும் காண்பதில்லை. உலகம் தன் மகிழ்ச்சியை வேறு எங்கே வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம், ஆனால் அவனால் முடியாது. லௌகீக மனிதர்கள் தங்களின் இன்பங்களை நோக்கித் தீவிரிக்கிறதைக் குறித்து நான் அவர்களைக் குற்றப்படுத்த மாட்டேன். நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அவர்கள் தங்களின் இன்பங்களை நிறைவாய் அநுபவிக்கட்டும். அவர்கள் அநுபவிக்க வேண்டியதெல்லாம் அது மாத்திரமே. தன் கணவனைக் குறித்து நம்பிக்கையற்றிருந்த மதம் மாறிய ஒரு மனைவி எப்போதுமே அவனிடத்தில் மிகவும் கனிவாய் இருந்தாள், அவள் இப்படிக் கூறினாள்: "அவன் மகிழ்ச்சியாய் இருக்கக் கூடிய ஒரே உலகம் இது மாத்திரமே என்று நான் பயப்படுகிறேன், எனவே இந்த உலகத்தில் அவனால் முடிந்தவரை அவனை மகிழ்ச்சியாய் வைக்க நான் தீர்மானித்திருக்கிறேன்." கிறிஸ்தவர்கள் தங்களின் மகிழ்ச்சியை உலகத்தின் சத்துக்கடந்த மூடத்தனங்கள் அல்லது பாவமுள்ள இன்பங்களைக் காட்டிலும் உன்னதமான எல்லையிலே தேட வேண்டும். வீணான தேடுதல்கள் புதிதாக்கப்பட்ட ஆத்துமாக்களுக்கு ஆபத்தானவை. நட்சத்திரங்களை அண்ணாந்து பார்த்தபடியே குழியில் விழுந்த தத்துவஞானி ஒருவரைப் பற்றி நாம் கேட்டிருக்கிறோம்; ஆனால் கீழ்நோக்கிப் பார்ப்பவர்கள் இன்னும் எவ்வளவு ஆழமாய் விழுவார்கள். அவர்களுடைய வீழ்ச்சி மரணத்திற்குரியது. ஒரு கிறிஸ்தவனுடைய ஆத்துமா சோம்பலாய் இருக்கும்போதும், அவனுடைய தேவன் அவனுக்குத் தூரமாய் இருக்கும்போதும் அவன் பாதுகாப்பாய் இருப்பதில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவுக்குள் தான் கொண்டிருக்கும் நிலையைப் பொறுத்தவரை எப்போதுமே பாதுகாப்பாய் இருக்கிறான், ஆனால் இந்த வாழ்க்கையில் பரிசுத்தத்தின் அநுபவத்திலும் இயேசுவுடனான ஐக்கியத்திலும் அவன் பாதுகாப்பாய் இருப்பதில்லை. தேவனுக்கு மிக அருகில் வாழும் ஒரு கிறிஸ்தவனைச் சாத்தான் பெரும்பாலும் தாக்குவதில்லை. கிறிஸ்தவன் தன் தேவனை விட்டு விலகி, ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பட்டினியடைந்து, வீணான காரியங்களைப் புசிக்கத் தேடும்போதுதான், பிசாசு தனக்குரிய தருணத்தைக் கண்டுகொள்கிறான். தன் எஜமானரின் ஊழியத்தில் சுறுசுறுப்பாய் இருக்கும் தேவனுடைய பிள்ளையோடு அவன் சில நேரங்களில் நேருக்கு நேர் நிற்கலாம், ஆனால் போராட்டம் பொதுவாகச் சுருக்கமானதே: தாழ்மையின் பள்ளத்தாக்கிற்குள் இறங்கும்போது வழுவுகிறவன், ஒவ்வொரு முறை தவறான அடி வைக்கும்போதும் அப்பொல்லியோனைத் தன்னைத் தாக்க அழைக்கிறான். நம்முடைய தேவனோடு தாழ்மையாய் நடக்கக் கிருபை தருவாராக!

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.