AUG 15 EVENING

எசேக்கியேல் 36:26

உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

எசேக்கியேல் 36:26

உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்" (). சதையான இருதயம் பாவத்தைக் குறித்த தன் மென்மையினாலே அறியப்படுகிறது. அசுத்தமான கற்பனைக்கு இடம் கொடுத்திருப்பது, அல்லது விகாரமான ஆசையை ஒரே ஒரு கணமாவது தங்கியிருக்க அனுமதித்திருப்பது, சதையான இருதயத்தைக் கர்த்தருக்கு முன்பாகத் துக்கமடையச் செய்ய மகா போதுமானது. கற்பாறையான இருதயம் மகா பெரிய அக்கிரமத்தையும் ஒன்றுமில்லை என்கிறது, சதையான இருதயமோ அப்படிச் செய்வதில்லை.

"வலதுபுறமாவது இடதுபுறமாவது நான் வழிவிலகினால், அந்தக் கணமே, ஆண்டவரே, என்னைக் கடிந்துகொள்ளும்; உமது அன்பிற்குத் துக்கத்தை உண்டாக்கியதற்காக, என் ஆயுள் முழுவதையும் அழுது கழிக்கச் செய்யும்."

சதையான இருதயம் தேவனுடைய சித்தத்திற்கு மென்மையானது. என்னுடைய 'சித்தமே-என்-சித்தமாக வேண்டும்' என்னும் பிரபு மகா வீம்பாளன், அவனை தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படுத்துவது கடினம்; ஆனால் சதையான இருதயம் அருளப்படும் போது, பரலோகத்தின் ஒவ்வொரு சுவாசத்திலும் சிற்றரசின் இலையைப் போல அந்தச் சித்தம் நடுங்குகிறது, தேவனுடைய ஆவியின் ஒவ்வொரு காற்றிலும் நாணலைப் போல வளைகிறது. சுபாவமான சித்தம் குளிர்ந்த, கடினமான இரும்பு, அதை சுத்தியலால் அடித்து வடிவத்திற்கு கொண்டுவர முடியாது, ஆனால் மறுபடியும் பிறந்த சித்தமோ, உருக்கப்பட்ட உலோகத்தைப் போல கிருபையின் கரத்தினாலே சீக்கிரத்தில் வனையப்படுகிறது. சதையான இருதயத்தில் பாசங்களின் மென்மை இருக்கிறது. கடின இருதயம் மீட்பரை நேசிப்பதில்லை, ஆனால் புதிதாக்கப்பட்ட இருதயமோ அவரைப் பற்றிய அன்பினால் எரிகிறது. கடின இருதயம் சுயநலமுள்ளது, "நான் ஏன் பாவத்திற்காக அழ வேண்டும்? நான் ஏன் கர்த்தரிடத்தில் அன்புகூர வேண்டும்?" என்று குளிர்போலக் கேட்கிறது. ஆனால் சதையான இருதயமோ, "ஆண்டவரே, நான் உம்மிடத்தில் அன்புகூருகிறேன் என்பதை நீர் அறிவீர்; உம்மிடத்தில் இன்னும் அதிகமாய் அன்புகூர எனக்குத் துணைசெய்யும்!" என்கிறது. புதிதாக்கப்பட்ட இந்த இருதயத்தின் சிலாக்கியங்கள் ஏராளம்; 'இங்கே ஆவியானவர் வாசம் பண்ணுகிறார், இங்கே இயேசு இளைப்பாறுகிறார்.' ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள அது தகுதியுள்ளது, சகல ஆசீர்வாதங்களும் அதற்கு வருகிறது. தேவனுடைய கனத்திற்கும் துதிக்கும் ஏதுவாகப் பரலோகத்தின் சகல கனிகளையும் தர அது ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது, ஆகவேதான் கர்த்தர் அதில் மகிழ்கிறார். மென்மையான இருதயமே பாவத்திற்கு எதிரான மிகச் சிறந்த அரண், பரலோகத்திற்கான மிகச் சிறந்த ஆயத்தம். புதிதாக்கப்பட்ட இருதயம் கர்த்தராகிய இயேசுவின் வருகையை நோக்கியிருந்து தன் காவற்கோபுரத்தில் நிற்கிறது. இந்தச் சதையான இருதயம் உனக்கு இருக்கிறதா?

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.