JUL 15 EVENING

மாற்கு 16:9

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.

மாற்கு 16:9

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவர் முதலாவது மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார்" (). இயேசு 'முதலாவது மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார்,' அவளுடைய மாபெரும் அன்பினிமித்தமும் விடாமுயற்சியோடு தேடினதினிமித்தம் மாத்திரமல்ல, வசனம் குறிப்பிடுவது போல, அவள் கிறிஸ்துவின் விடுவிக்கும் வல்லமையின் விசேஷித்த அடையாளமாய் இருந்தபடியினாலும் ஆகும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், மதம் மாறுவதற்கு முன் நம்முடைய பாவத்தின் மேன்மை, நாம் உன்னதமான எல்லையிலுள்ள ஐக்கியத்தின் விசேஷித்த சிலாக்கியத்தைப் பெற முடியாது என்று நம்மை எண்ண வைக்கக் கூடாது. அவளோ இரட்சகரைப் பின்தொடரத் தனக்குள்ள யாவற்றையும் விட்டு வந்தவளாய் இருந்தாள். அவரே அவளுடைய முதல், அவளுடைய முதன்மையான நோக்கமாய் இருந்தார். கிறிஸ்துவின் பட்சத்தில் இருந்த பலர் கிறிஸ்துவின் சிலுவையை ஏற்றுக்கொள்ளவில்லை; அவளோ ஏற்றாள். தன் ஆஸ்தியைக் கொண்டு அவருடைய தேவைகளைச் சந்தித்து வந்தாள் (). நாம் கிறிஸ்துவைக் காண விரும்பினால், அவருக்கு ஊழியம் செய்வோம். அவருடைய அன்பின் கொடியின் கீழ் அடிக்கடி உட்கார்ந்து, ஐக்கியத்தின் கிண்ணத்திலிருந்து மகா ஆழமாய்க் குடிப்பவர்கள் யார் என்று எனக்குச் சொல், அவர்கள் தங்களின் பிரியமான கர்த்தரின் இரத்தம் வடியும் இருதயத்திற்கு மிக அருகில் தங்கி, அதிகமாய் கொடுத்து, மகா உன்னதமாய் ஊழியஞ்செய்பவர்களாய் இருப்பார்கள் என்று நான் உறுதியாய் சொல்வேன். ஆனால் கிறிஸ்து துக்கத்தோடிருந்த அவளுக்குத் தம்மை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதைக் கவனியுங்கள்—ஒரே ஒரு வார்த்தையினாலே, "மரியாள்." அவருடைய சத்தத்திலுள்ள ஒரே ஒரு வார்த்தை மாத்திரமே தேவைப்பட்டது, உடனே அவள் அவரை அறிந்துகொண்டாள், அவளுடைய இருதயமும் மற்றொரு வார்த்தையினாலே தன் எஜமானுக்குத் தன் உத்தமத்தை வெளிப்படுத்தியது, அதற்கு மேல் பேச முடியாதபடி அவளுடைய இருதயம் நிறைந்து போயிருந்தது (). அந்த ஒரே வார்த்தை சுபாவமாகவே அந்தச் சூழ்நிலைக்கு மகா துல்லியமாய் ஏற்றதாய் இருந்தது. அது கீழ்ப்படிதலை உள்ளடக்குகிறது. அவள், "போதகரே (Rabboni - எஜமானரே)" என்றாள். உன்னுடைய ஆவி பரலோக அக்கினியினால் மகா தீவிரமாய் எரியும்போது, "ஆண்டவரே, நான் உமது ஊழியக்காரன், நீர் என் கட்டுகளை அவிழ்த்தீர்" என்று நீ சொல்லாமல் இருக்க உன்னால் முடியாது (). உன்னால் "எஜமானரே" என்று சொல்ல முடியுமானால், உன்னுடைய சித்தம் அவருடைய சித்தமாய் இருப்பதை நீ உணர்ந்தால், நீ ஒரு பாக்கியமான, பரிசுத்தமான இடத்தில் நிற்கிறாய். அவர் "மரியாள்" என்று சொல்லியிருக்க வேண்டும், இல்லையென்றால் உன்னால் "எஜமானரே" என்று சொல்லியிருக்க முடியாது. அப்படியிருக்க, இவைகளிலிருந்து கிறிஸ்து தம்மை விசுவாசிப்பவர்களை எவ்வாறு கனப்படுத்துகிறார் என்பதையும், அன்பு நமக்குரிய பிரியமானவரை எவ்வாறு இழுத்து வருகிறது என்பதையும், நம்முடைய அழுகையைச் சந்திக்கச் செய்ய அவருடைய ஒரே ஒரு வார்த்தை மாத்திரமே போதுமானது என்பதையும், அவருடைய பிரசன்னமே இருதயத்தின் சூரிய வெளிச்சமாய் இருக்கிறது என்பதையும் கண்டுகொள்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.