JUN 15 MORNING

ஆதியாகமம் 21:6

அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப் பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.

ஆதியாகமம் 21:6

அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப் பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

அப்பொழுது சாராள்: "தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள் என்றாள்" (). வயது முதிர்ந்த சாராள் ஒரு குமாரனைப் பெற்றுப் பாக்கியவதியாவது சுபாவத்தின் வல்லமைக்கு அப்பாற்பட்டதும், அதன் பிரமாணங்களுக்கு மாறானதுமாய் இருந்தது; அப்படியே மகா ஏழையான, உதவியற்ற, பாழான பாவியாகிய நான், கர்த்தராகிய இயேசுவின் உள்ளுறையும் ஆவியைத் என் ஆத்துமாவில் சுமக்கும் கிருபையைப் பெற்றிருப்பது சுபாவமான எல்லா விதிகளுக்கும் மேலானது ஆகும். ஒரு காலத்தில் நம்பிக்கையற்றிருந்த நான், என் சுபாவம் ஊளையிடும் வனாந்தரத்தைப் போல வறண்டும், வாடியும், மலடாயும், சபிக்கப்பட்டதாயும் இருந்தும், பரிசுத்தத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கும்படி செய்யப்பட்டிருக்கிறேன். கர்த்தரிடமிருந்து நான் பெற்ற விசித்திரமான, ஆச்சரியமான கிருபையினிமித்தம் என் வாய் மகிழ்ச்சியான நகையினால் நிறைவதில் ஆச்சரியமில்லை, ஏனெனில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தாகிய இயேசுவை நான் கண்டடைந்தேன், அவர் என்றென்றைக்குமாய் என்னுடையவர். என் தாழ்ந்த நிலையை நினைத்தருளின கர்த்தருக்கு இன்று நான் ஜெயக்கீதங்களை உயர்த்துவேன், ஏனெனில் "என் இருதயம் கர்த்தருக்குள் மகிழ்கிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; உமது இரட்சிப்பினால் நான் சந்தோஷப்படுகிறபடியால், என் வாய் என் சத்துருக்களின்மேல் விரிந்திருக்கிறது" ().

நரகத்திலிருந்து நான் பெற்ற மாபெரும் விடுதலையையும், உன்னதத்திலிருந்து எனக்கு உண்டான ஆசீர்வதிக்கப்பட்ட சந்திப்பையும் கேட்கிற யாவரும் என்னோடு கூடச் சந்திக்கச் செய்து நகைப்பார்களாக. என் குடும்பத்தாரை என் தாராள சமாதானத்தினால் ஆச்சரியப்படுத்துவேன்; என் நண்பர்களை எப்போதும் பெருகும் என் மகிழ்ச்சியினால் பூரிப்படையச் செய்வேன்; என் நன்றியுள்ள அறிக்கைகளினால் சபையைப் பக்திவிருத்தியாக்குவேன்; என் தினசரி பேச்சின் மகிழ்ச்சியினால் உலகத்தாரையும் வியக்க வைப்பேன். தேவனுடைய தாசன் புனியன் (Bunyan) கூறுகிறார், கருணை தன் தூக்கத்திலும் நகைத்தாள் என்று, அவள் இயேசுவைக் குறித்துக் கனவு கண்டபோது அதில் ஆச்சரியமில்லை; எனக்குப் பிரியமானவரே என் தினசரி எண்ணங்களின் தலைப்பாய் இருக்கும்போது என் சந்தோஷம் அவளுடைய சந்தோஷத்திற்குச் சற்றும் குறையாது. கர்த்தராகிய இயேசு சந்தோஷத்தின் ஆழமான கடலாய் இருக்கிறார்: என் ஆத்துமா அதற்குள் மூழ்கும், அவருடைய ஐக்கியத்தின் இன்பங்களில் முற்றிலும் விழுங்கப்படும். சாராள் தன் ஈசாக்கைப் பார்த்துப் பேரானந்தத்தினால் நகைத்தாள், அவளுடைய சிநேகிதிகள் எல்லாரும் அவளோடு கூட நகைத்தார்கள்; நீயும், என் ஆத்துமாவே, உன்னுடைய இயேசுவைப் பார், பரலோகமும் பூமியும் உன்னுடைய சொல்லொணாத சந்தோஷத்தில் இணையக் கட்டளையிடு.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.