JUN 15 EVENING

வெளிப்படுத்தின விசேஷம் 3:7

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

வெளிப்படுத்தின விசேஷம் 3:7

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவர் திறக்கிறார், ஒருவனும் பூட்டான்" (). இயேசு பரதீசின் வாசல்களின் காவலாளியாய் இருக்கிறார், விசுவாசிக்கும் ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் முன்பாக அவர் ஒரு திறந்த வாசலை வைக்கிறார், எந்த மனிதனாலும் அல்லது பிசாசினாலும் அதை அவனுக்கு விரோதமாய் பூட்ட முடியாது. அவரிடம் உள்ள விசுவாசமே நித்திய வாசல்களின் பொன்னான திறவுகோல் என்பதைக் கண்டறிவது எப்பேர்ப்பட்ட சந்தோஷமாய் இருக்கும்! என் ஆத்துமாவே, நீ இந்தத் திறவுகோலை உன்னுடைய மார்பில் சுமக்கிறாயா, அல்லது இறுதியில் உன்னைக் கைவிடும் ஏதோ ஒரு போலித் திறவுகோலை நம்பிக் கொண்டிருக்கிறாயா? பிரசங்கியாரின் இந்த உவமையைக் கேட்டு நினைவில் கொள். மகா பெரிய ராஜா ஒரு விருந்தை ஆயத்தம் பண்ணினார், புஷ்பங்களிலேயே மிகவும் அழகான புஷ்பத்தைக் கொண்டு வருபவர்கள் மாத்திரமே உள்ளே பிரவேசிக்க முடியும் என்று அவர் உலகமெங்கும் பிரகடனம் செய்தார். மனிதர்களின் ஆவிகள் ஆயிரக்கணக்கில் வாசலை நோக்கி முன்னேறி வருகின்றன, அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தோட்டத்தின் ராணியாகக் கருதும் புஷ்பத்தைக் கொண்டு வருகிறார்கள்; ஆனால் திரளான கூட்டமாய் அவர்கள் ராஜ சமூகத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள், பண்டிகை அரங்குகளுக்குள் பிரவேசிப்பதில்லை. சிலர் தங்களின் கரத்தில் மாயாஜாலத்தின் கொடிய புஷ்பங்களையோ, அல்லது ரோம மார்க்கத்தின் கவர்ச்சியான புஷ்பங்களையோ, அல்லது சுயநீதியின் புஷ்பங்களையோ ஏந்தி வருகிறார்கள், ஆனால் இவைகள் ராஜாவுக்குப் பிரியமானவை அல்ல, அவைகளைக் கொண்டு வந்தவர்கள் முத்து வாசல்களுக்கு வெளியே அடைக்கப்படுகிறார்கள். என் ஆத்துமாவே, நீ சாரோனின் ரோஜாவைப் பறித்திருக்கிறாயா? பள்ளத்தாக்கின் லீலி புஷ்பத்தை உன்னுடைய மார்பில் எப்போதுமே தரித்திருக்கிறாயா? அப்படி இருந்தால், நீ பரலோகத்தின் வாசல்களுக்கு வரும்போது அதன் மதிப்பை அறிவாய், ஏனெனில் நீ புஷ்பங்களிலேயே சிறந்த இந்தப்புஷ்பத்தைக் காண்பித்தால் மாத்திரமே காவலாளி திறப்பார்: ஒரு கணமும் அவர் உனக்கு பிரவேசத்தை மறுக்க மாட்டார், ஏனெனில் அந்த ரோஜா மலருக்குக் காவலாளி எப்போதுமே திறக்கிறார். சாரோனின் ரோஜாவை உன்னுடைய கரத்தில் ஏந்தியவளாய் நீ தேவனுடைய சிங்காசனம் வரை உன்னுடைய பாதையைக் கண்டுகொள்ளுவாய், ஏனெனில் பரலோகம் தன் பிரகாசமான அழகில் அதை விஞ்சிய வேறு எதையும் கொண்டிருக்கவில்லை, பரதீசில் பூக்கும் எல்லாப் புஷ்பங்களிலும் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பத்திற்கு நிகரானது வேறு எதுவும் இல்லை. என் ஆத்துமாவே, கல்வாரியின் இரத்தச் சிவப்பான ரோஜாவை விசுவாசத்தினாலே உன்னுடைய கரத்திற்குள் பெற்றுக்கொள், அன்பினாலே அதைத் தரித்துக்கொள், ஐக்கியத்தினாலே அதைப் பாதுகாத்துக்கொள், தினசரி விழிப்புணர்வினாலே அதை உன்னுடைய எல்லாவற்றிலும் எல்லாவற்றாக்கிப் போற்று, அப்போது நீ எல்லா ஆசீர்வாதங்களுக்கும் மேலாக ஆசீர்வதிக்கப்படுவாய், ஒரு கனவிற்கும் மேலாக மகிழ்ச்சியடைவாய். இயேசுவே, என்றென்றைக்குமாய் என் தேவனும், என் பரலோகமும், என் எல்லாவற்றாருமாய் இரும். ஆமென்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.