AUG 16 EVENING

ரோமர் 8:23

அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

ரோமர் 8:23

அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமும்" (). தற்போதைய சுதந்தரம் பிரகடனம் செய்யப்படுகிறது. இந்தத் தற்போதைய கணத்தில் நாம் ஆவியின் முதற்பலன்களைப் பெற்றிருக்கிறோம். மகா உயர்ந்த தரத்திலுள்ள நவரத்தினமாகிய மனஸ்தாபம் நம்மிடம் உண்டு; விலையேறப்பெற்ற முத்தாகிய விசுவாசம்; பரலோக மரகதமாகிய நம்பிக்கை; மற்றும் மகிமையான மாணிக்கமாகிய அன்பு நம்மிடம் உண்டு. தேவனாகிய பரிசுத்த ஆவியானவரின் பயனுள்ள கிரியையினாலே நாம் ஏற்கனவே "கிறிஸ்து இயேசுவுக்குள் புதிய சிருஷ்டிகளாக" ஆக்கப்பட்டிருக்கிறோம். இது முதலாவது வருவதினாலேயே முதற்பலன் என்று அழைக்கப்படுகிறது. அசைவாட்டும் கதிர் அறுவடையின் முதலாவது கதிராய் இருந்தது போல, ஆவிக்குரிய ஜீவனும், அந்த ஜீவனை அலங்கரிக்கும் சகல கிருபைகளும் நம்முடைய ஆத்துமாக்களில் தேவனுடைய ஆவியானவர் நடப்பிக்கும் முதல் கிரியைகளாய் இருக்கின்றன. முதற்பலன்கள் அறுவடைக்கான அச்சாரமாய் இருந்தன. இஸ்ரவேலன் முதிர்ந்த கதிர்களின் முதல் கைப்பிடியைப் பறித்தவுடனே, வண்டி கட்டுகளின் கீழ் பாரம் தாங்காமல் நெளியும் அறுவடைக்காலத்தைச் சந்தோஷமான எதிர்பார்ப்போடு எதிர்நோக்கினான். அப்படியே, சகோதரரே, பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகத் தூய்மையானதும், அன்பானதும், நற்கீர்த்தியுள்ளதுமான காரியங்களை தேவன் நமக்குத் தரும்போது, இவைகள் நமக்கு வரப்போகும் மகிமையின் முன்அடையாளங்களாய் இருக்கின்றன. முதற்பலன்கள் எப்போதுமே கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகளாய் இருந்தன, நம்முடைய புதிய சுபாவமும் அதன் சகல வல்லமைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்ட காரியங்களாய் இருக்கின்றன. அதனுடைய மேன்மையை நம்முடைய சொந்தப் பலன்களுக்குப் புகழாகக் சூட்டும்படிக்கு இந்தப் புதிய ஜீவன் நம்முடையதல்ல; அது கிறிஸ்துவின் சாயலும் சிருஷ்டிப்புமாய் இருக்கிறது, அவருடைய மகிமைக்கென்றே அது நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதற்பலன்கள் மாத்திரமே முழு அறுவடை அல்ல, இந்த கணத்தில் நமக்குள்ளே இருக்கும் ஆவியானவரின் கிரியைகள் பூரணத்துவமானவைகள் அல்ல—பூரணம் இன்னும் வரப்போகிறது. நாம் அதை அடைந்துவிட்டோம் என்று பெருமை பாராட்டி, அசைவாட்டும் கதிரையே வருஷத்தின் முழு விளைச்சலாகக் கணக்கிடக் கூடாது: நாம் நீதியின் மேல் பசியும் தாகமுமுள்ளவர்களாய் இருந்து, முழு மீட்பின் நாளுக்காக ஏங்க வேண்டும். பிரியமான வாசகரே, இன்று மாலை உன்னுடைய வாயை விரிவாகத் திற, தேவன் அதை நிரப்புவார். தற்போதைய சுதந்தரத்திலுள்ள கிருபை, அதிக கிருபைக்காக உனக்குள் ஒரு பரிசுத்த பேராசையைத் தூண்டட்டும். உன்னதமான பிரதிஷ்டையின் எல்லைகளுக்காக உனக்குள்ளே பெருமூச்சு விடு, உன்னுடைய ஆண்டவர் அவைகளை உனக்குத் தருவார், ஏனெனில் நாம் கேட்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மகா அதிகமாய் கிரியை செய்ய அவர் வல்லவராயிருக்கிறார்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.