JUN 16 MORNING

யோவான் 10:28

நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.

யோவான் 10:28

நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை" (). கிறிஸ்தவன் ஒருபோதும் அவிசுவாசத்தைக் குறித்து இலகுவாகச் சிந்திக்கவோ பேசவோ கூடாது. தேவனுடைய பிள்ளை அவருடைய அன்பையும், சத்தியத்தையும், உண்மையையும் சந்தேகப்படுவது அவருக்கு மிகுந்த மனஸ்தாபத்தை உண்டாக்கும். நம்மைத் தாங்கும் அவருடைய கிருபையைச் சந்தேகப்பட்டு நாம் எவ்வாறு அவருக்குத் துக்கத்தை ஏற்படுத்தலாம்? கிறிஸ்தவனே! நீ மறக்கப்படுவதோ அல்லது அழிந்துபோகக் கைவிடப்படுவதோ தேவனுடைய விலையேறப்பெற்ற வார்த்தையின் ஒவ்வொரு வாக்குத்தத்தத்திற்கும் மாறானது. அது அப்படியிருக்குமானால், "ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை" () என்று சொன்ன அவர் எவ்வாறு உண்மையுள்ளவராய் இருக்க முடியும்? "மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்" () என்ற அந்த வாக்குத்தத்தத்தின் மதிப்புதான் என்ன? "நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது" () என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளின் சத்தியம் எங்கே போகும்? கிருபையின் உபதேசங்கள் எங்கே? தேவனுடைய பிள்ளைகளில் ஒருவன் அழிந்துபோனாலும் அவைகள் யாவும் பொய்யாகிவிடுமே. கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ, யார் அவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, அவர்களில் எவரேனும் தள்ளப்பட்டுப் போனால், தேவனுடைய உண்மைத்தன்மை, அவருடைய கனம், அவருடைய வல்லமை, அவருடைய கிருபை, அவருடைய உடன்படிக்கை, அவருடைய ஆணை எங்கே போகும்? தேவனை அவ்வளவாக அவமதிக்கும் அந்த அவிசுவாச பயங்களை ஒழித்துவிடு. எழுந்திரு, உன்னுடைய தூசியை உதறிவிட்டு, உன்னுடைய அலங்கார வஸ்திரங்களைத் தரித்துக்கொள். நீ ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை என்று அவர் உனக்கு வாக்குத்தத்தம் பண்ணிய அவருடைய வார்த்தையைச் சந்தேகப்படுவது பாவமானது என்பதை நினைவில்கொள். உனக்குள் இருக்கும் நித்திய ஜீவன் நம்பிக்கையான மாபெரும் மகிழ்ச்சியில் வெளிப்படட்டும். "நற்செய்தி என் ஆவியைத் தாங்குகிறது: உண்மையுள்ளவரும் மாறாதவருமான தேவன், ஆணைகளிலும், வாக்குத்தத்தங்களிலும், இரத்தத்திலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரத்தை இடுகிறார்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.