AUG 17 EVENING

யோவான் 11:4

இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.

யோவான் 11:4

இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல்" (). நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளிலிருந்து வியாதிக்கு ஒரு எல்லை உண்டு என்பதைக் கற்றுக்கொள்கிறோம். இங்கே ஒரு "ஏதுவாயிராமல்" இருக்கிறது, அதற்குள்ளே அதனுடைய இறுதி முடிவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, அதற்கு அப்பால் அதினால் செல்ல முடியாது. லாசரு மரணத்தைக் கடந்து போகலாம், ஆனால் மரணம் அவனுடைய வியாதியின் இறுதி முடிவாக இருக்கப் போவதில்லை. சகல வியாதிகளிலும், கர்த்தர் வேதனையின் அலைகளை நோக்கி, "இதுவரைக்கும் வா, அதற்கு அப்பால் வராதே" என்கிறார். அவருடைய நிலையான நோக்கம் அழிவல்ல, மாறாகத் தமது ஜனங்களின் போதனையே ஆகும். ஞானமானது உலைக்களத்தின் வாசலில் வெப்பமானியைத் தொங்கவிட்டு, உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துகிறது.

1. அந்த எல்லை ஊக்கமளிக்கும் விதத்தில் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. பராமரிப்பின் தேவன் நம்முடைய சகல வியாதிகளின் காலம், முறைமை, தீவிரம், திரும்பத் தோன்றுதல் மற்றும் விளைவுகளைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்; ஒவ்வொரு துடிப்பும் நியமிக்கப்பட்டது, ஒவ்வொரு தூக்கமில்லாத மணிநேரமும் முன்குறிக்கப்பட்டது, ஒவ்வொரு வீழ்ச்சியும் கட்டளையிடப்பட்டது, ஆவியின் ஒவ்வொரு சோர்வும் முன்கூட்டியே அறியப்பட்டது, மற்றும் ஒவ்வொரு பரிசுத்தமாக்கும் விளைவும் நித்தியமாய் நோக்கம்பண்ணப்பட்டது. நம் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணியிருக்கிறவரின் கட்டளையிடும் கரத்திலிருந்து பெரியதோ சிறியதோ எதுவும் தப்புவதில்லை ().

2. இந்த எல்லை நம்முடைய பலத்திற்கும், உத்தேசிக்கப்பட்ட முடிவிற்கும், அளிக்கப்பட்ட கிருபைக்கும் ஏற்றவாறு ஞானமாய் சீர்தூக்கப்பட்டிருக்கிறது. உபத்திரவம் தற்செயலாய் வருவதில்லை—பிரம்பின் ஒவ்வொரு அடியின் பாரமும் துல்லியமாய் அளவிடப்படுகிறது. மேகங்களை நிறுப்பதிலும் வானங்களை அளப்பதிலும் எந்தத் தவற்றையும் செய்யாதவர், ஆத்துமாக்களின் மருந்தைக் கூட்டிணைக்கும் பொருட்களின் அளவிலும் எந்தத் தவற்றையும் செய்வதில்லை. நாம் மிக அதிகமாய் பாடுபடவும் முடியாது, மகா தாமதமாய் விடுவிக்கப்படவும் முடியாது.

3. அந்த எல்லை கனிவோடு நியமிக்கப்பட்டது. பரலோக அறுவை சிகிச்சை நிபுணரின் கத்தி முற்றிலும் அவசியமான ஆழத்தைக் காட்டிலும் அதிக ஆழமாய் ஒருபோதும் வெட்டுவதில்லை. "அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமைப்படுத்தித் துக்கப்படுத்துகிறதில்லை" (). ஒரு தாயின் இருதயம், "என் பிள்ளையைக் காப்பாற்றும்;" என்று கதறுகிறது, ஆனால் நம்முடைய கிருபையுள்ள தேவனைக்காட்டிலும் இரக்கமுள்ள தாய் வேறு யாருமில்லை. நாம் எவ்வளவு கடினமான உதடுகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை யோசிக்கும்போது, நாம் இன்னும் கூர்மையான கடிவாளத்தினால் நடத்தப்படவில்லை என்பது ஆச்சரியமே. நம்முடைய வாசஸ்தலத்தின் எல்லைகளைக் குறித்தவரே, நம்முடைய உபத்திரவத்தின் எல்லைகளையும் குறித்திருக்கிறார் என்ற சிந்தனை ஆறுதல் நிறைந்தது ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.