JAN 17 MORNING

வெளிப்படுத்தின விசேஷம் 14:1

பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:1

பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஒரு ஆட்டுக்குட்டி நின்றது" (). அப்போஸ்தலனாகிய யோவான் பரலோகத்தின் வாசல்களுக்குள் உற்றுப் பார்க்கும் சிலாக்கியத்தைப் பெற்றார், தான் கண்டதை விவரிக்கும்போது, "நான் பார்த்தபோது, இதோ, ஒரு ஆட்டுக்குட்டி!" என்று தொடங்குகிறார். பரலோகத்தின் உன்னத தியானத்தின் முதன்மையான பொருள் "உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" () என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. தமது இரத்தத்தினால் நம்மை மீட்டெடுத்த அந்த தெய்வீக ஆளுமையைப் போல அப்போஸ்தலனுடைய கவனத்தை வேறு எதுவும் ஈர்க்கவில்லை. மகிமையடைந்த ஆவிகள் மற்றும் பரிசுத்த தூதர்கள் யாவருடைய கீதங்களின் பொருளும் அவரே. கிறிஸ்தவனே, இதோ உனக்கு மகிழ்ச்சி; நீ நோக்கிப் பார்த்தாய், ஆட்டுக்குட்டியைக் கண்டாய். உன்னுடைய கண்ணீரின் வழியாய் உன் கண்கள் தேவ ஆட்டுக்குட்டி உன் பாவங்களைச் சுமந்துதீர்ப்பதைக் கண்டன. எனவே சந்தோஷப்படு. இன்னும் கொஞ்சக் காலத்தில், உன் கண்களின் கண்ணீரெல்லாம் துடைக்கப்படும்போது, அதே ஆட்டுக்குட்டி தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பதைக் காண்பாய். இயேசுவோடு தினமும் ஐக்கியம் கொள்வது உன் இருதயத்தின் மகிழ்ச்சியாய் இருக்கிறது; பரலோகத்தில் இதே மகிழ்ச்சியை இன்னும் உன்னதமான அளவில் நீ பெற்றுக் கொள்வாய்; அவருடைய பிரசன்னத்தின் மாறாத தரிசனத்தை நீ அநுபவிப்பாய்; நீ என்றென்றைக்கும் அவரோடிருப்பாய். "நான் பார்த்தபோது, இதோ, ஒரு ஆட்டுக்குட்டி!" அந்த ஆட்டுக்குட்டியே பரலோகமாய் இருக்கிறது; தேவனுடைய தாசன் ரதர்போர்டு (Rutherford) கூறுவது போல, "பரலோகமும் கிறிஸ்துவும் ஒன்றுதான்;" கிறிஸ்துவோடு இருப்பது பரலோகத்தில் இருப்பது, பரலோகத்தில் இருப்பது கிறிஸ்துவோடு இருப்பது. கர்த்தருக்காகச் சிறைப்பட்டிருந்த அவர், தன் உருக்கமான கடிதங்கள் ஒன்றில் மிகவும் இனிமையாக எழுதுகிறார்—"ஓ என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் இல்லாமல் நான் பரலோகத்தில் இருக்க முடிந்தால் அது எனக்கு நரகமாய் இருக்கும்; நான் நரகத்தில் இருந்தாலும் நீர் என்னோடு இருந்தால் அது எனக்குப் பரலோகமாய் இருக்கும், ஏனெனில் எனக்குத் தேவையான பரலோகம் நீரே." கிறிஸ்தவனே, இது உண்மை அல்லவா? உன் ஆத்துமாவும் அப்படியே சொல்லுகிறதா? "மேலேயுள்ள சுரமண்டலங்கள் யாவும் ஒரு பரலோக இடத்தை உண்டாக்கிட முடியாது, தேவன் தன் வாசஸ்தலத்தை மாற்றிவிட்டாலோ, அல்லது தன் முகத்தை மறைத்துக் கொண்டாலோ." நீ பாக்கியவானாகவும், உன்னத பாக்கியவானாகவும் மாறுவதற்கு உனக்குத் தேவையானதெல்லாம் "கிறிஸ்துவோடேகூட இருப்பது" மாத்திரமே.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.