JUL 17 EVENING

1 இராஜாக்கள் 18:40

அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.

1 இராஜாக்கள் 18:40

அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவர்களில் ஒருவனும் தப்பிப்போகவிடாதேயுங்கள்" (). தீர்க்கதரிசியாகிய எலியா தன் ஜெபத்திற்குப் பதிலைப் பெற்று, பரலோக அக்கினி சகல ஜனங்களுக்கும் முன்பாகப் பலியைப் பட்சித்த போது, கூடிவந்திருந்த இஸ்ரவேலரை நோக்கிப் பாகாலின் தீர்க்கதரிசிகளைப் பிடிக்கும்படி கட்டளையிட்டு, "அவர்களில் ஒருவனும் தப்பிப்போகவிடாதேயுங்கள்" என்று மகா கண்டிப்பாய்க் கூவினான். அவர் அவா்கள் எல்லாரையும் கீசோன் ஆற்றங்கரையிற்குக் கொண்டுபோய், அங்கே அவர்களைக் வெட்டிப்போட்டார். நம்முடைய பாவங்களின் காரியத்திலும் அப்படியே ஆக வேண்டும்—அவைகள் யாவும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டவை, ஒன்றும் காக்கப்படக் கூடாது. நமக்கு மகா பிரியமான பாவமும் மடிந்தே தீர வேண்டும். அது மகா உரத்த சத்தமிட்டு அழுதாலும் அதற்கு இரங்காதே. அது ஈசாக்கைப் போலப் பிரியமானதாய் இருந்தாலும் வெட்டு. வெட்டு, ஏனெனில் நம்முடைய பாவம் தேவனுடைய சொந்த குமாரன் மேல் சுமத்தப்பட்ட போது, தேவன் அதை வெட்டித் தீர்த்தார். ஒரு காலத்தில் உன்னுடைய இருதயத்தின் விக்கிரகமாய் இருந்த அந்தப் பாவத்தை, உன்னுடைய மாறாத கண்டிப்பான நோக்கத்தோடே மரணத்திற்கு ஆக்கினை செய். இதை நீ எவ்வாறு நடப்பிக்க முடியும் என்று கேட்கிறாயா? இயேசுவே உன்னுடைய பலமாய் இருப்பார். கிருபையின் உடன்படிக்கையில் பாவத்தை ஜெயிப்பதற்கான கிருபை உனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது; அந்தரங்க இச்சைகளுக்கு விரோதமான உன்னுடைய புனிதப் போரில் ஜெயத்தைப் பெறுவதற்கான பலன் உனக்கு உண்டு, ஏனெனில் கிறிஸ்து இயேசு முடிவுபரியந்தம் உன்னுடனேகூட இருப்பதாக வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் (). நீ அந்தகாரத்தை ஜெயிக்க விரும்பினால், நீதியின் சூரியனின் பிரசன்னத்தில் உன்னை நிறுத்து. பாவத்தைக் கண்டறியவும், அதனுடைய வல்லமை மற்றும் குற்றத்திலிருந்து குணமடையவும், தேவனுடைய உடனடிப் பிரசன்னத்தைக் காட்டிலும் சிறந்த இடம் வேறு எதுவுமில்லை. யோபு தன் விசுவாசக் கண்ணால் தேவனைத் தரிசித்த போது இருந்தது போல, பாவத்திலிருந்து விடுபடும் வழியை அதற்கு முன் அவன் ஏதோ பாதியளவுகூட அறிந்திருக்கவில்லை, அப்போது அவன் தன்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் உட்கார்ந்து மனஸ்தாபப்பட்டான் (). கிறிஸ்தவனுடைய பசும்பொன் பெரும்பாலும் மங்கிப் போகிறது. அசுத்தங்களை ஒழிக்க நமக்கு அந்தப் பரிசுத்த அக்கினி தேவை. நம்முடைய தேவனிடம் ஓடுவோம், அவர் பட்சிக்கும் அக்கினியாயிருக்கிறார்; அவர் நம்முடைய ஆவியை அல்ல, நம்முடைய பாவங்களையே பட்சிப்பார் (). தேவனுடைய நன்மை நமக்குள்ளே ஒரு பரிசுத்த வைராக்கியத்தையும், அவருடைய பார்வைக்கு வெறுக்கத்தக்கவைகளாய் இருக்கிற அந்த அக்கிரமங்களுக்கு விரோதமான பரிசுத்தப் பகையையும் தூண்டட்டும். அவருடைய பலத்தோடு அமலேக்கிற்கு விரோதமாய்ப் போர்க்களத்திற்குப் புறப்பட்டுச் சென்று, அந்தச் சபிக்கப்பட்ட கூட்டத்தையெல்லாம் முற்றிலும் அழித்துப்போடு: அவர்களில் ஒருவனும் தப்பிப்போகவிடாதே.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.