JUN 17 EVENING

எண்ணாகமம் 21:17

அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.

எண்ணாகமம் 21:17

அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

அப்பொழுது இஸ்ரவேலர்: "கிணறே, ஊறிவா, அதற்கு எதிர்ப்பாட்டுப் பாடுங்கள் என்று ஒரு பாட்டைப் பாடினார்கள்" (). வனாந்தரத்திலிருந்த பேயேர் கிணறு புகழ்பெற்றதாய் இருந்தது, ஏனெனில் அது ஒரு வாக்குத்தத்தத்தின் பொருளாய் இருந்தது: "கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்களைக் கூட்டு, நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று சொன்ன கிணறு இதுவே" (). ஜனங்களுக்குத் தண்ணீர் தேவையாய் இருந்தது, கிருபையுள்ள தங்களின் தேவனாலே அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது. நமக்கு பரலோகக் கிருபையின் புதிய தேவைகள் உண்டு, நமக்குத் தேவையான யாவற்றையும் தருவதாகக் கர்த்தர் உடன்படிக்கையில் தம்மைக் பிணையாக்கியிருக்கிறார். அடுத்ததாக அந்தக் கிணறு ஒரு பாடலுக்குக் காரணமாய் மாறியது. தண்ணீர் ஊறி வருவதற்கு முன்பே, மகிழ்ச்சியான விசுவாசம் ஜனங்களைப் பாடத் தூண்டியது; பளிங்கு போன்ற அந்த ஊற்று பொங்கி வருவதைக் கண்டபோது, இசை இன்னும் அதிக மகிழ்ச்சியானதாக மாறியது. அப்படியே, தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கிற நாமும் நம்முடைய ஆத்துமாக்களில் தெய்வீக எழுப்புதல்களின் எதிர்பார்ப்பில் மகிழ வேண்டும், நாம் அவைகளை அநுபவிக்கும் போது நம்முடைய பரிசுத்த சந்தோஷம் நிரம்பி வழிய வேண்டும். நாம் தாகத்தோடிருக்கிறோமா? முறுமுறுக்காமல், பாடுவோமாக. ஆவிக்குரிய தாகத்தைச் சகிப்பது கசப்பானதுதான், ஆனால் நாம் அதைச் சுமக்க வேண்டியதில்லை—வாக்குத்தத்தம் ஒரு கிணற்றைச் சுட்டிக்காட்டுகிறது; நாம் தைரியங்கொண்டு, அதை நோக்குவோமாக. மேலும், அந்தக் கிணறு ஜெபத்தின் மையமாய் இருந்தது. "கிணறே, ஊறிவா." தேவன் எதைத் தர முன்வந்திருக்கிறாரோ, அதை நாம் கேட்க வேண்டும், இல்லையென்றால் நமக்கு ஆசையும் இல்லை, விசுவாசமும் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறோம். இன்று மாலை நாம் வாசித்த வேதப்பகுதியும், நம்முடைய பக்திவிருத்தியின் கிரியைகளும் வெறும் வெற்றுச் சடங்காக இல்லாமல், நம்முடைய ஆத்துமாக்களுக்குக் கிருபையின் கால்வாயாக மாறும்படி கேட்போமாக. ஓ, தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் தமது மாபெரும் வல்லமையோடு நமக்குள்ளே கிரியை செய்து, தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நம்மையும் நிரப்புவாராக. இறுதியாக, அந்தக் கிணறு பிரயாசத்தின் பொருளாய் இருந்தது. "பிரபுக்கள் அதைத் தோண்டினார்கள், ஜனத்தில் மேன்மையானவர்கள்... அதை வெட்டினார்கள்" (). நாம் கிருபையைப் பெற்றுக்கொள்வதில் சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும் என்றே கர்த்தர் விரும்புகிறார். மணலில் தோண்டுவதற்கு நம்முடைய கோல்கள் ஏற்றவை அல்லதான், ஆனால் நமக்குள்ள திறமையின் அளவிற்கு நாம் அவைகளைப் பயன்படுத்த வேண்டும். ஜெபத்தை அலட்சியம் செய்யக் கூடாது; சபை கூடிவருதலை விட்டுவிடக் கூடாது; நியமங்களை அசட்டை செய்யக் கூடாது. கர்த்தர் தமது சமாதானத்தை நமக்கு மகா மிகுதியாய்த் தருவார், ஆனால் சோம்பலான வழியில் அல்ல. அப்படியானால், நம்முடைய புதிய ஊற்றுகள் யாவும் யாருக்குள் இருக்கின்றனவோ, அவரைத் தேட நம்மைக் தீவிரப்படுத்துவோமாக ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.