AUG 18 MORNING

எரேமியா 51:51

நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களின்மேல் அந்நியர் வந்ததினால் நாணம் நம்முடைய முகங்களை மூடிற்று.

எரேமியா 51:51

நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களின்மேல் அந்நியர் வந்ததினால் நாணம் நம்முடைய முகங்களை மூடிற்று.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அந்நியர் கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களுக்குள் பிரவேசித்தபடியினால்... வெட்கம் எங்கள் முகங்களை மூடிற்று" (). இந்த விவரணையில் தேவனுடைய ஜனங்களின் முகங்கள் வெட்கத்தினால் மூடப்பட்டிருந்தன, ஏனெனில் ஆசாரியர்களுக்கு மாத்திரமே ஒதுக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலத்திற்குள் மனிதர்கள் அத்துமீறி நுழையத் துணிந்தது மகா பயங்கரமான காரியமாய் இருந்தது. நம்மைச் சுற்றிலும் உள்ள எல்லா இடங்களிலும் துக்கத்திற்கான இத்தகைய காரணத்தை நாம் காண்கிறோம். ஊழியத்திற்குள் பிரவேசிக்கும் நோக்கத்தோடு பக்தி இல்லாத மனிதர்கள் எத்தனை பேர் இப்போது தங்களைப் போதித்துக் கொண்டிருக்கிறார்கள்! நம்முடைய ஜனங்கள் எல்லாரும் பெயரளவில் தேசிய சபைக்குள் சேர்க்கப்படுகிறார்கள் என்ற அந்தப் பரிசுத்தமான பொய்யினால் உண்டாகும் அக்கிரமம் எப்பேர்ப்பட்ட கூப்பிடுதலாய் இருக்கிறது! மனந்திரும்பாதவர்கள் மேல் நியமங்கள் வற்புறுத்தப்படுவதும், நம் தேசத்தின் அதிக வெளிச்சமடைந்த சபைகள் மத்தியிலும்கூட ஒழுங்கு நடவடிக்கைகளில் இத்தகைய தளர்ச்சி இருப்பதும் எவ்வளவு பயங்கரமானது. இந்தப் பகுதியை வாசிக்கும் பல்லாயிரக்கணக்கானோரும் இன்று கர்த்தராகிய இயேசுவின் முன்பாக இந்த விஷயத்தைக் கொண்டு செல்வார்களானால், அவர் தலையிட்டு, இல்லையென்றால் தன் சபைக்கு நேரிடப் போகும் தீமையைத் தடுத்து நிறுத்துவார். சபையைக் கறைப்படுத்துவது என்பது கிணற்றைத் தீட்டுப்படுத்துவதற்கும், அக்கினியின் மேல் தண்ணீரை ஊற்றுவதற்கும், பலனுள்ள வயலில் கற்களை விதைப்பதற்குமே ஒப்பாகும். ஒரு தேசமாகவோ, மனந்திரும்பாத மனிதர்களின் இரட்சிக்கப்படாத கூட்டமாகவோ இராமல், விசுவாசிகளின் சபையாகச் சபையின் தூய்மையை நமக்குரிய தகுந்த வழியில் பராமரிக்க நாம் எல்லாரும் கிருபையைப் பெறுவோமாக.

என்றாலும், நம்முடைய வைராக்கியம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். கர்த்தருடைய பந்தியில் புசிப்பதற்கான நம்முடைய உரிமையைக் குறித்து நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம். நாமே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலங்களில் அத்துமீறி நுழைபவர்களாய் இராதபடிக்கு, நம்மிடம் திருமண வஸ்திரம் இருக்கிறதா என்று பார்ப்போம் (). அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்; வழி குறுகலானது, வாசல் இடுக்கமானது. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விசுவாசத்தோடு இயேசுவிடம் செம்மையாய் வரக் கிருபை தாரும். பேழையைத் தொட்டதற்காக உசாவை அடித்தவர் தமது இரண்டு நியமங்களைக் குறித்தும் மகா பொறாமையுள்ளவராயிருக்கிறார்; உண்மையான விசுவாசியாக நான் அவைகளைத் தாராளமாய் அணுகலாம், அந்நியனாக நான் மடியாதபடி அவைகளைத் தொடக் கூடாது. திருமுழுக்குப் பெறுகிற அல்லது கர்த்தருடைய பந்திக்கு வருகிற யாவருடைய கடமையும் இருதயத்தை ஆராய்வதே ஆகும். "தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்" ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.