JUL 18 MORNING

எண்ணாகமம் 2:31

எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளயமாய்ப் போகக்கடவர்கள்.

எண்ணாகமம் 2:31

எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளயமாய்ப் போகக்கடவர்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவர்கள் தங்கள் கொடிகளோடே கடைசியாகப் பிரயாணம்பண்ணக்கடவர்கள்" (). இஸ்ரவேலின் சேனைகள் பிரயாணப்படும் போது, தாணின் பாளயம் பின்அணியைக் கொண்டு வந்தது. தாணியர் மகா பிந்திய இடத்தைப் பெற்றிருந்தார்கள், ஆனால் அவர்கள் முன்சென்ற கோத்திரத்தாரைப் போலவே மெய்யாகவே அந்தச் சேனையின் ஒரு பகுதியாய் இருந்தபடியால் அந்த நிலைமை ஒரு பொருட்டல்ல; அவர்களும் அதே அக்கினி மற்றும் மேக ஸ்தம்பத்தைப் பின்தொடர்ந்தார்கள், அதே மன்னாவைப் புசித்தார்கள், அதே ஆவிக்குரிய கன்மலையிலிருந்து குடித்தார்கள், அதே சுதந்தரத்தை நோக்கிப் பிரயாணப்பட்டார்கள். வா, என் இருதயமே, தைரியங்கொள், கடைசியானவனாகவும் சிறியவனாகவும் இருந்தாலும்; அந்தச் சேனையிலிருப்பதும், முன்அணியை நடத்துபவர்களைப் போலவே அநுபவிப்பதும் உன்னுடைய சிலாக்கியமாய் இருக்கிறது. கனத்திலும் மதிพ்பிலும் யாரோ ஒருவன் பிந்தியவனாய் இருக்கத்தான் வேண்டும், இயேசுவுக்காக அற்பமான ஊழியங்களை யாரோ ஒருவன் செய்தாக வேண்டும், ஏன் நான் அதைச் செய்யக் கூடாது? ஒரு ஏழை கிராமத்தில், படிப்பறிவில்லாத ஜனங்கள் மத்தியில்; அல்லது ஒரு பின்வீதியில், சீர்கேடான பாவிகள் மத்தியில், நான் பிரயாசப்பட்டு, "என் கொடியோடு கடைசியாகப் பிரயாணம்பண்ணுவேன்."

தாணியர் மகா பிரயோஜனமான இடத்தைப் பெற்றிருந்தார்கள். பிரயாணத்தின் போது வழிவிலகிப் போகிறவர்களைச் சேர்க்க வேண்டியிருந்தது, களத்தில் தவறவிட்ட பொருட்களைச் சேகரிக்க வேண்டியிருந்தது. வைராக்கியமுள்ள ஆவிகள் புதிய சத்தியங்களைக் கற்றுக்கொள்ளவும், இயேசுவிற்காக இன்னும் அதிக ஆத்துமாக்களை ஆதரிக்கவும் முன்நோக்கிப் பாயலாம்; ஆனால் இன்னும் காத்துக் கொள்ளும் ஆவியுடையவர்கள் சபைக்கு அவளுடைய பூர்வகாலத்து விசுவாசத்தை நினைவூட்டுவதிலும், சோர்ந்துபோன அவளுடைய குமாரர்களைத் தேற்றுவதிலும் நன்றாய் ஈடுபடலாம். ஒவ்வொரு நிலைக்கும் அதற்குரிய கடமைகள் உண்டு, மெதுவாய் நடக்கும் தேவனுடைய பிள்ளைகள், தங்களின் விசித்திரமான நிலையினாலே முழுச் சேனைக்கும் விசேஷித்த விதத்தில் ஆசீர்வாதமாய் இருப்பதைக் கண்டுகொள்வார்கள்.

பின்அணி என்பது ஆபத்தான இடமாய் இருக்கிறது. நமக்கு முன்னிருப்பது போல நமக்குக் பின்னேயும் சத்துருக்கள் இருக்கிறார்கள். எந்தப் பக்கமிருந்தும் தாக்குதல்கள் வரலாம். அமலேக்கு இஸ்ரவேலின் மேல் விழுந்து, பின்அணியில் சோர்ந்துபோன சிலரைக் வெட்டிப்போட்டான் என்று வாசிக்கிறோம் (). விசுவாசத்திலும், அறிவிலும், சந்தோஷத்திலும் பிந்தியவர்களாய் இருக்கிற அந்த ஏழை சந்தேகமுள்ள, தளர்ச்சியடைந்த, அலைபாயும் ஆத்துமாக்களுக்குத் துணைசெய்ய, நன்றாய்க் கற்றுக்கொண்ட பரிசுத்தவான்கள் தங்களின் ஆயுதங்களுக்கு அநேக வேலைகளைக் கண்டுகொள்வார்கள். இவர்களைத் துணையின்றி விட்டுவிடக் கூடாது, ஆகவேதான் பிந்தியவர்கள் மத்தியிலும் தங்களின் கொடிகளை ஏந்துவது நன்றாய்க் கற்றுக்கொண்ட பரிசுத்தவான்களின் வியாபாரமாய் இருக்கிறது. என் ஆத்துமாவே, இன்று பிந்தியவர்களுக்குத் துணைசெய்ய நீ கனிவோடு கண்காணித்துக் கொண்டிரு.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.