JUL 18 EVENING

யோவேல் 2:8

ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்.

யோவேல் 2:8

ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"ஒருவரை ஒருவர் நெருக்கமாட்டார்கள்; அவனவன் தன் தன் பாதையிலே நடப்பான்" (). வெட்டுக்கிளிகள் எப்போதுமே தங்களின் வரிசையைக் காத்துக்கொள்ளுகின்றன, அவைகளின் எண்ணிக்கை அநந்தமாய் இருந்தாலும், அவைகள் தங்களின் கூட்டங்களை அலைச்சலுக்குள் தள்ளும் விதத்தில் ஒருவரையொருவர் நெருங்குவதில்லை. சுဘာவ சரித்திரத்திலுள்ள இந்த விசேஷித்த உண்மை, கர்த்தர் தன் பிரபஞ்சம் முழுவதிலும் ஒழுங்கு என்னும் ஆவியை எவ்வளவோ பூரணமாய் ஊற்றியிருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறது, ஏனெனில் உருண்டோடும் கோளங்களோ அல்லது சேராபியத் தூதர்களோ ஆளப்படுவது போல, மகா சிறிய இந்த உயிரினங்களும் அதனாலேயே ஆளப்படுகின்றன. விசுவாசிகள் தங்களின் முழு ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அதே ஒழுங்கினாலே ஆளப்படுவது ஞானமாய் இருக்கும். தங்களின் கிறிஸ்தவக் கிருபைகளில் எந்த ஒரு நற்பண்பும் மற்றொன்றின் எல்லையைக் கவர்ந்துகொள்ளக் கூடாது, அல்லது தன் சொந்த ஆதரவிற்காக மற்றவைகளின் ஜீவனைப் பட்சிக்கக் கூடாது. அன்பு உத்தமத்தன்மையை அவிக்கக் கூடாது, தைரியம் பலவீனத்தை வெளியிலே தள்ளக் கூடாது, அடக்கம் உருக்கத்தை நெருக்கக் கூடாது, பொறுமை தீர்மானத்தைக் கொலை செய்யக் கூடாது. நம்முடைய கடமைகளின் காரியத்திலும் அப்படியே ஆக வேண்டும், ஒன்று மற்றொன்றிற்குத் தடையாய் இருக்கக் கூடாது; வெளிப்புறப் பிரயோஜனம் தனிப்பட்ட பக்திவிருத்தியைக் கெடுக்கக் கூடாது; சபை ஊழியம் குடும்ப ஆராதனையை ஒரு மூலைக்குள் தள்ளிவிடக் கூடாது. மற்றொரு கடமையின் இரத்தம் படிந்த ஒரு கடமையைத் தேவனுக்குச் சமர்ப்பிப்பது தகாது. ஒவ்வொரு காரியமும் அதற்குரிய காலத்தில் அழகாய் இருக்கிறது, மற்றபடி அல்ல. பரிசேயனை நோக்கித்தான் இயேசு, "இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும்" என்றார் (). நம்முடைய தனிப்பட்ட நிலைக்கும் அதே விதி பொருந்தும், நம்முடைய இடத்தை நாம் அறிந்து, அதை ஏற்று, அங்கேயே நிலைத்திருக்க ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். ஆவியானவர் நமக்கு அளித்த திறமையின்படியே நாம் ஊழியஞ் செய்ய வேண்டும், நம்முடைய உடன் வேலைக்காரனுடைய எல்லையின்கீழ் அத்துமீறி நுழையக் கூடாது. சகோதரர்கள் மத்தியில் மகா சிறியவர்களாய் இருக்க மனதாயிருக்க வேண்டுமே அன்றி, உன்னதமான இடங்களை இச்சிக்கக் கூடாது என்று நம் ஆண்டவர் இயேசு நமக்குக் கற்பித்தார் (). பொறாமை உள்ள, வீம்பான ஆசையின் ஆவி நமக்குத் தூரமாய் இருக்கட்டும், எஜமானருடைய கட்டளையின் வல்லமையை உணர்ந்து, அவர் நமக்குக் கட்டளையிடுகிறபடியே செய்து, சேனையின் மற்றவர்களோடு வரிசையைக் காத்துக்கொள்வோமாக. இன்று இரவு நாம் சமாதானத்தின் கட்டுகளோடு ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்கிறோமா என்று பார்ப்போம், நம்முடைய ஜெபம் கர்த்தராகிய இயேசுவின் எல்லாச் சபைகளிலும் சமாதானமும் ஒழுங்கும் ஆளுகை செய்வதாக என்பதாக இருக்கட்டும் ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.