AUG 20 EVENING

நெகேமியா 3:8

அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதற்கொண்டு அகலமான மதில் மட்டும் எருசலேம் இடிக்காமல் விட்டிருந்தது.

நெகேமியா 3:8

அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதற்கொண்டு அகலமான மதில் மட்டும் எருசலேம் இடிக்காமல் விட்டிருந்தது.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அகலமான மதிலுமட்டும் எருசலேமைப் பலப்படுத்தினார்கள்" (). நன்றாய்ப் பலப்படுத்தப்பட்ட பட்டணங்களுக்கு அகலமான மதில்கள் உண்டு, எருசலேமும் தன் மகிமையின் காலத்தில் அவ்வாறே கொண்டிருந்தது. புதிய எருசலேமும், அப்படியே, உலகத்தோடு ஒத்துப் போகாத, அதனுடைய ஆசாரங்கள் மற்றும் ஆவியிலிருந்து பிரிந்திருக்கக்கூடிய அகலமான மதிலினாலே சூழப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும். இந்நாட்களின் சுபாவம் பரிசுத்தமான அந்தத் தடையைத் தகர்த்து, சபைக்கும் உலகத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைச் வெறும் பெயரளவிலானதாக மாற்றுகிறது. அறிக்கையிடுபவர்கள் இனி கண்டிப்பானவர்களாகவும், பக்தியுள்ளவர்களாகவும் இல்லை, சந்தேகத்திற்குரிய இலக்கியங்கள் எல்லாராலும் வாசிக்கப்படுகின்றன, மூடத்தனமான பொழுதுபோக்குகளில் தற்போது ஈடுபடுகிறார்கள், பொதுவான தளர்ச்சி கர்த்தருடைய விசேஷித்த ஜனங்களைப் பாவிகளிடமிருந்து பிரிக்கும் பரிசுத்தமான தனித்துவங்களை அவர்களிடம் இருந்து பறித்துக் கொள்ள அச்சுறுத்துகிறது. உத்தேசிக்கப்பட்ட அந்த இணைப்பு பூரணமடைந்து, தேவனுடைய குமாரரும் மனிதர்களின் குமாரத்திகளும் ஒன்றாவது போல மாறும் நாள் சபைகளுக்கும் உலகத்திற்கும் பொல்லாத நாளாய் இருக்கும்: அப்போது கோபாக்கினையின் மற்றொரு பெருவெள்ளம் கொண்டுவரப்படும் (). பிரியமான வாசகரே, இந்த உலகத்தின் சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று நினைவுகூர்ந்து (), இருதயத்திலும், வார்த்தையிலும், உடையிலும், செய்கையிலும் அகலமான மதிலைப் பராமரிப்பது உன்னுடைய நோக்கமாய் இருக்கட்டும்.

அகலமான மதில் எருசலேமின் குடிகளுக்கு இன்பமான ஒரு உலாவிடத்தை அளித்தது, அங்கிருந்து அவர்கள் சுற்றிலும் உள்ள தேசத்தின் காட்சிகளைக் கண்ணோக்க முடிந்தது. இது கர்த்தருடைய மகா அகலமான கற்பனைகளை நமக்கு நினைவூட்டுகிறது (), அவைகளில் நாம் இயேசுவோடான ஐக்கியத்தில் விடுதலையாய் நடந்து, பூமியின் காட்சிகளை மேலிருந்து பார்த்து, பரலோகத்தின் மகிமைகளை நோக்கிப் பார்க்கிறோம். உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, பக்தி கேடானவைகளையும் மாம்ச இச்சைகளையும் நமக்கு நாமே மறுத்துக் கொண்டு, நாம் சிறைச்சாலையில் இல்லை, குறுகிய வரம்புகளுக்குள் அடைக்கப்படவுமில்லை; இல்லை, நாம் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறபடியால் விடுதலையாய் நடக்கிறோம் (). வா, வாசகரே, இன்று மாலை தேவனுடைய பிரமாணங்களில் அவரோடு கூட உலாவு. பட்டணத்து மதிலின் மேல் சிநேகிதன் சிநேகிதனைச் சந்தித்தது போல, பரிசுத்த ஜெபத்தின் மற்றும் தியானத்தின் பாதையில் நீ உன்னுடைய தேவனைச் சந்தி. இரட்சிப்பின் அரண்களைக் கடந்து செல்ல உனக்கு உரிமை உண்டு, ஏனெனில் நீ ராஜரீக நகரத்தின் சுயாதீனவாதி, பிரபஞ்சத்தின் தலைநகரத்தின் குடிமகன்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.