"நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரம்" (). ஓ! இயேசுவில் மாத்திரம், இயேசுவில் மாத்திரமே பிழைக்கக் கற்றுக்கொண்ட மனிதன் அநுபவிக்கும் தெளிவும், உன்னதமான சந்தோஷங்களும், ஆறுதல்களும், இருதயத்தின் இன்பமும் எப்பேர்ப்பட்டது. என்றாலும் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற தன்மையை நாம் பெற்றிருக்கும் இந்த உணர்வு, இந்த வாழ்க்கையில் மகா அற்பமான அளவிலேயே இருக்கிறது. ஒரு பூர்வகால எழுத்தாளர் கூறுவது போல, "அது வெறும் ஒரு சுவை மாத்திரமே!" 'கர்த்தர் தயையுள்ளவர் (gracious - கிருபையுள்ளவர்) என்று நாம் ருசிபார்த்திருக்கிறோம்,' ஆனால் அவர் எவ்வளவு நல்லவர், எவ்வளவு கிருபையுள்ளவர் என்பதை நாம் இன்னும் முழுமையாய் அறியவில்லை, என்றாலும் அவருடைய இனிமையைப் பற்றி நாம் அறிந்திருப்பது இன்னும் அதிகமாய் வாஞ்சிக்கச் செய்கிறது (). நாம் ஆவியின் முதற்பலன்களை அநுபவித்திருக்கிறோம், அவைகள் பரலோகத் திராட்சையின் பரிபூரணத்திற்காக நமக்குள் பசியையும் தாகத்தையும் தூண்டியிருக்கின்றன. புத்திரசுவிகாரத்தை நோக்கியிருந்து, நமக்குள்ளே முனகுகிறோம். இங்கே நாம் வனாந்தரத்திலுள்ள இஸ்ரவேலரைப் போல எஸ்கோலிலிருந்து ஒரே ஒரு திராட்சைக்குலையை மாத்திரமே பெற்றிருக்கிறோம், அங்கே நாமோ சிங்காரவனத்திற்குள்ளே இருப்போம் (). இங்கே மன்னா கொத்தமல்லி விதையைப் போலச் சிறியதாய் விழுவதைக் காண்கிறோம், அங்கே நாமோ பரலோக அப்பத்தையும் தேசத்தின் பழைய தானியத்தையும் புசிப்போம். பரிசுத்த ஆவியானவர் இவ்விதமாய்ப் பரிசுத்தமாக்கலின் காரணராய் இருந்தாலும், நாம் முன்னேறுவது போல மாத்திரமே பரிசுத்தத்திலும் முன்னேறுகிறோம். உன்னுடைய இருதயம் இந்தச் சிந்தனையினாலே சந்தோஷத்தினால் துள்ளவில்லையா? நீ இப்போது கறுப்பாய் இருந்தாலும் ஒருநாள் வெண்மையாவாய்; அசுத்தமாய் இருந்தாலும் சுத்தமாவாய். ஓ, இது எப்பேர்ப்பட்ட ஆச்சரியமான இரட்சிப்பு! கிறிஸ்து ஒரு புழுவை எடுத்து அதை ஒரு தூதனாக மாற்றுகிறார்; கிறிஸ்து கறுப்பான மற்றும் அவலட்சணமான ஒன்றை எடுத்து, அதைத் தன் மகிமையில் சுத்தமானதாகவும் ஒப்பிடமுடியாததாகவும், தன் அழகில் நிகரற்றதாகவும், சேராபீன்களுக்குத் தகுந்த தோழமையாகவும் மாற்றுகிறார். ஓ என் ஆத்துமாவே, கிறிஸ்துவுக்குள் இருக்கும் பூரணத்துவத்தின் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட சத்தியத்தை உற்று நோக்கி ஆச்சரியப்படு.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.